கீர்த்தி சுரேஷ்

திருமணத்திற்கு முன் பேபி ஜான் என்ற இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். ஆனால், பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இப்போது திருமணத்திற்கு பிறகு ரப்தார் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்த முறை வெற்றியை கண்டிப்பாக கைப்பற்றுவேன். என் பெர்ஃபார்மன்ஸ் அப்படி என்கிறார் நடிகை.
ஜெயிலர் 2

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது. இப்போது அந்த ரோலில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கப் போகிறார்.
துஷரா விஜயன்

மகுடம் படத்தில் விஷாலுடன் நடித்துள்ள துஷாரா விஜயன் இந்தப் படத்தில் அஞ்சலிக்கு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து என்னை டம்மியாக்கிவிட்டார் என்று விஷால் மீது கோபத்தில் இருக்கிறார் நடிகை.
சூர்யா
விஜயின் கடைசி படத்தை இயக்கிய எச்.வினோத் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
ராஷ்மிகா
இந்தியில் எனக்கு போட்டி தீபிகா படுகோன் தான். ஹிந்தியில் ஹிட் படங்கள் நிறைய கொடுத்து அவரை விட அதிக சம்பளம் வாங்குவேன் என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
ஐஸ்வர்யா ராஜேஷ்

"தமிழ் சினிமாவில் இப்போது நல்ல மாற்றம் வந்திருக்கிறது. ஒரு பெண்ணை மையமாக வைத்து கதை சொல்ல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முன்வருகிறார்கள் " என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
மமிதா பைஜூ

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்தில் உன் நடிப்பை பார்த்து மலைத்து விட்டேன் என்று ராதிகா பாராட்டியதை சொல்லிப் பெருமைப்படுகிறார் நடிகை மமிதாபைஜு.
திஷா பதானி

திஷா பதானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு பச்சை நிற கிளாமர் உடையில் வந்து எல்லோரையும் திணற அடித்தார். அந்த உடையில் ஏடாகூடமான போஸ்களுடன் போட்டோ சூட் நடத்தி பதிவிட்டு ரசிகர்களை படுத்துகிறார் நடிகை.
திரிஷா

விஜய் பிறந்தநாள் வாழ்த்து தாமதமாக வெளியிட்டதுக்கு காரணம் சமூக வலைதளத்தில் இதற்கு எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கத்தானம். எதிர்பார்ப்பு எகிறியதை பார்த்து ஹேப்பி.
பார்வதி

இதுவரை இல்லாத கிளாமர் தோற்றத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டி இருக்கிறார் பார்வதி. படவாய்ப்புகள் இல்லாவிட்டால் இப்படி கிளாமர் படங்களை பதிவிடுவது சகஜம் தானே?
தமன்னா

ஜெய்லர் படத்தில் காவாலி பாடலில் அவர் ஆடிய நடனம் அவருக்கு திருப்தி இல்லையாம். இன்னும் நன்றாக ஆடி இருக்க வேண்டும் என்கிறார் நடிகை தமன்னா.
மீனாட்சி சவுத்ரி

ரஜினி நடிக்கும் தர்மன் படத்தில் சிம்ரன், ராஷி கண்ணாவுடன் மூன்றாவதாக மீனாட்சி சவுத்ரி இணைந்திருக்கிறார். தர்மன் ரெண்டு ரூபாய் டாக்டர் கதை கிடையாது என்றும் சொல்கிறார்கள்
தமன்னா, திரிஷா

குஷ்புவின் மகள் அவந்திகா திருமணம் கோவாவில் சொகுசு ரிசார்ட்டில் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொண்ட திரிஷா, தமன்னா, டிடி, ஆர்த்தி, நடன இயக்குனர் பிருந்தா ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

Leave a comment
Upload