தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

தங்கக்காசு தந்தார்

20230027155239126.jpg

நானி நடிக்கும் தசரா என்ற தெலுங்கு படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அப்போது அந்தப் படத்தில் பணியாற்றிய 130 பேருக்கு இரண்டு கிராம் தங்க காசு தந்து அவர்களை மகிழ்வித்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே இவர் தான் நடிக்கும் படங்களில் பணியாற்றியவர்களுக்கு இப்படி ஏதாவது பரிசு தருவது வழக்கம்தான்.

காதலருக்கு ஓட்டல்

20230027155418193.jpg

பிரியா பவானி சங்கர் சமீபத்தில் வீடு கட்டி குடியேறினார். அடுத்தபடியாக ஒரு பெரிய ஓட்டல் கட்டி அதை விரைவில் திறக்கும் வேலையும் ஜருராக நடந்து வருகிறது. இந்த ஓட்டல் பிரியா பவானி சங்கர் அவர் காதலருக்கு தரும் அன்பு பரிசு என்ற பேச்சும் வரத் தொடங்கி இருக்கிறது.

என்னதான்பா உங்க பிரச்சனை

2023002716014933.jpg

நான் உடற்பயிற்சி செய்தால் ஆண் போல் இருப்பதாக சொல்கிறார்கள், செய்யாவிட்டால் குண்டாக இருப்பதாக சொல்கிறார்கள். நான் அதிகமாக பேசினால் பயப்படுவதாக சொல்கிறார்கள், பேசாவிட்டால் திமிர் பிடித்தவள் என்கிறார்கள், நான் மூச்சு விட்டாலும் பிரச்சினை மூச்சு விடாவிட்டாலும் பிரச்சனை இப்படி அலுத்துக் கொள்கிறார் ராஷ்மிகா. கூடவே, இப்படி எல்லாம் பேசி என்னை வெறுப்பேற்றாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்கிறார். விஜய் தேவரகொண்டா என் நண்பர் அவருடன் டூர் சென்றால் என்ன தப்பு என்றும் கேட்கிறார் ராஷ்மிகா.

மோகன்லால் படத்தில் கமல்

20230027160452209.jpg

மோகன்லால் நடிக்கும் படம் மலைக்கோட்டை வாலிபன் இதில் இவருக்கு மல்யுத்த வீரர் வேடம் இந்தப் படத்தில் கௌரவ படத்தில் ஜீவா கமல் இருவரும் தோன்ற இருக்கிறார்கள்.

வேண்டாம் சிகரெட்

20230027163217338.jpg

விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் நடிக்கும் விடுதலை படம் இரண்டு பாகமாக தயாரித்து முடித்து விட்டார் இயக்குனர் வெற்றிமாறன். ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிக்கும் இயக்குனர் வெற்றிமாறன் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் சிகரெட் பிடிப்பது நிறுத்திவிட்டார். இதேபோல் என் சினிமாவில் இனிமேல் சிகரெட் பிடிப்பது மது குடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது என்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஆணாதிக்கம் இன்னும் இருக்கு

20230027161918774.jpg

மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் தமிழில் ரீமேக் ஆகி இருக்கிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நடந்தது. அந்த விழாவில் நிருபர்களிடம் பேசும்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஆணாதிக்கம் இன்னும் உள்ளது. சமையல் அறையோடு பெண்கள் வாழ்க்கை முடிந்து விடாமல் அவர்கள் திறமை வெளிவர வேண்டும். இதேபோல் ஆண் பெண் வித்யாசம் எல்லாம் கடவுளுக்கு இல்லை எந்தக் கடவுளும் பெண்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லை இதெல்லாம் மனிதர்கள் ஏற்படுத்தியது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

போட்டி வேண்டாம் ரஜினி முடிவு

20230027160938385.jpeg

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது கோடை விடுமுறையில் வெளியானால் நிறைய ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது மணிரத்தினம் ஐடியா. இதே, ஐடியாவுடன் ரஜினியின் ஜெய்லர் படமும் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. இந்த இரண்டு படங்களும் தியேட்டர்களை பங்கிட்டு கொண்டால் தேவையற்ற சங்கடம் வருமானம் பாதிக்கும் என்பதால் ஜெய்லர் படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யச் சொல்லிவிட்டார் ரஜினி.

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்துக்கு பெயர் வடக்கு பட்டு ராமசாமி