தொடர்கள்
ஆன்மீகம்
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு பழனி மலையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம்..!! - சுந்தரமைந்தன்.

பழனி மலையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம்


பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு பழனி மலையில் இன்று (27.012023) காலை 9.00 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழனி ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கடந்த டிசம்பர் மாதம் நடந்த அறங்காவலர் குழு, அலுவலர்கள் கூட்டத்தில் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 27-ல் (இன்று) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டது.

பழனி மலையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம்


இக்கோயிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற உள்ள நிலையில், இதற்காகப் பூர்வாங்க பணிகள் கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கியது, அன்று காலை 9 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க மலையில் உள்ள இராஜகோபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் பொருத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பழனி மலையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம்


கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 2000 பக்தர்கள் மட்டுமே குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர 4000 விஐபிகள் கும்பாபிஷேகத்தை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 3000 போலீசார், 300 சிசிடிவி கேமராக்கள், 50 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. மேலும், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐஜி தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பழனி மலையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம்


இன்று (வெள்ளிக்கிழமை) காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகபூஜை முடிவுற்றவுடன், பல்வேறு வகை பொருட்கள், மூலிகைகளால் சிறப்பு யாகம், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பன்னிரு திருமுறை, கந்தபுராணம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் மந்திரங்கள் ஓதச் சக்தி கலசங்களை சிவாச்சாரியர்கள் யாகசாலையில் இருந்து கோபுர விமானங்களுக்கு எடுத்துச் சென்றனர், தொடர்ந்து வாத்திய இசை முழங்க முருகனுக்கு அரோகரா.. தண்டாயுதபாணிக்கு அரோகரா என்ற மக்களின் முழக்கங்களுக்கு இடையே தங்க விமானத்தில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது இராஜகோபுரம், தங்க விமானம் மற்றும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. கும்பாபிஷேகம் விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். இவ்விழாவைக் காணப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். கும்பாபிஷேக விழாவிற்குப் பதிவு பெறாத பக்தர்கள் பார்ப்பதற்குக் கிரிவலப் பாதை கிரிவலப்பாதை உட்பட மூன்று இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் வசதிக்காகப் பழனி அடிவாரத்தில் மூன்று இடங்களில் சுமார் எழுபதாயிரம் பேர் வரை சாப்பிடும் அளவிற்கு அன்னதான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை ஒட்டி பழனி - தாராபுரம் சாலையில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பழனி நகருக்குள் வரக் கட்டணமில்லா சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி மலையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம்

பழனி மலையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம்