
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையா?

ஜாதி இருக்கிறது. ஆகவே கணக்கெடுப்பும் இருக்கிறது.
பத்திரிக்கைகள் டிஜிட்டல் மயம். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

விஞ்ஞான முன்னேற்றங்களை தவிர்க்க முடியாது. ஆனால் கையில் பத்திரிகையை வைத்து படிப்பதற்கு இணையாக எதுவும் கிடையாது.
செல்பேசி உங்களுக்கு தொல்லையா நல்லதா?

எனக்கு கவலை அதிகம். வீட்டுக்கும் நண்பர்களுக்கும் போன் பண்ணி விசாரித்துக் கொண்டே இருப்பது என் பழக்கம்.செல்பேசி இல்லாவிட்டால் எனக்கு பேஜாராகி விடும்!
இப்போது நகைச்சுவை கட்டுரைகள் பத்திரிகைகளில் அவ்வளவாக இல்லையே?

நகைச்சுவையாக எழுதுவது ரொம்ப கஷ்டம். அதாவது எழுத்தின் மூலம் சிரிக்க வைப்பது!
கார்ட்டூன் வரைய உங்களுக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்?

சுமார் 15 நிமிடங்கள். என் படங்கள் பெரிய ஓவியங்களா என்ன?
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com

Leave a comment
Upload