தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஆஸ்கருக்கு பெருமை சேர்த்த குட்டி யானை - ஸ்வேதா அப்புதாஸ்

2023021723232762.jpeg

ஆசியாவிலே சிறந்த பழமையான உயிரியல் பூங்கா நீலகிரி முதுமலை சரணாலயம் .

இந்த சரணாலயத்தை உலகே திரும்பி பார்க்க வைத்து விட்டது கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா லாஸ் என்ஜில்ஸ் டால்பி தியேட்டரில் உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருது சிறந்த ஆவண படமான "The Elephant Whisperers " என்ற குறும் படத்திற்கு வழங்கியது .

இந்த படத்தை ஷூட் செய்து சாதனை படைத்தவர்கள் கார்திக்கி கன்சால்வேஸ் இயக்க தயாரிப்பு குன்னேட் மொங்கஸ் என்ற இரண்டு இந்திய பெண்கள் .

இந்த ஆவண படம் 39 நிமிடம் தான் அதே சமயம் காட்சிகள் படமாக்கிய நேரம் 450 மணிநேரம் ஐந்து மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது ஆச்சிரியமான ஒன்று .

அது என்ன அப்படிப்பட்ட கதை என்று பார்த்தால் ஒரு காட்டில் நடந்த அப்பூர்வமான பாச பிணைப்பு கதை அதிலும் மனிதனுக்கும் விலங்குக்கும் ஏற்பட்ட பாச பிணைப்பு .

2017 ஆம் ஆண்டு ஓசூர் காட்டில் தன் தாயை இழந்த ஒரு ஆண் குட்டி யானை காட்டு நாய்களால் கடி பட்டு வால் பகுதி துண்டிக்க பட்டு தன் உயிருக்கு போராடி கொண்டிருந்த குட்டி யானையை முதுமலை சரணாலய யானைகள் முகாமுக்கு எடுத்து வந்து வளர்க்க தவிக்க அந்த யானையை வளர்க்கும் பொறுப்பு பாகன் பொம்மனிடம் ஒப்படைக்க பட்டது .

அவருக்கு உதவியாக பெல்லி என்ற பெண் யானையை தாய் பாசத்துடன் வளர்க்க துவங்கினார்கள் .ஒரு கை குழந்தையை எப்படி வளர்ப்பார்களோ அது போல சீராட்டி பாராட்டி குளிப்பாட்டி லேக்டோஜின் பால் புட்டியில் ஊற்றி கொடுத்து வந்தனர் .

அந்த யானை குட்டிக்கு ரகு என்ற பெயரும் சூட்டினர் .

உயிர் பிழைக்குமா என்று இருந்த யானை குட்டியை அரவணைத்து தேற்றி விட்டனர் பொம்மனும் பெல்லியும் .

2019 யில் மூன்றை வயது அனாதை பெண் யானை குட்டி ஒன்றை சத்தியமங்கலம் வனத்தில் இருந்து மீட்டு பொம்மனிடம் பெல்லியிடம் ஒப்படைக்க பட்டு இரு யானை குட்டிகளையும் தங்கள் பிள்ளைகளாக வளர்த்து வந்தனர் .

அந்த யானைக்கு பொம்மி என்று பெயர் சூட்டி வளர்த்து வர ஒரு பக்கம் பொம்மனும் பெல்லியும் யானைகள் மேல் அளவுக்கு மீறி பாசத்தை பொழிய . இவர்களுக்கு இடையே ஒரு அபூர்வ காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக இந்த யானை குட்டிகளை வளர்த்தது தான் ஐலைட் !.

ஊட்டியை சேர்ந்த பழம்பெரும் வக்கீல் கன்சால்வேஸ் என்பவரின் பேத்தி கார்திக்கி கன்சால்வேஸ் ஆரம்ப படிப்பை பிரிக்ஸ் பள்ளியிலும் எட்டாம் வகுப்பில் இருந்து பிளஸ் டு வரை செயின்ட் .ஹில்டாஸ் பள்ளியில் முடித்து கோவை ஜி ஆர் டி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்த கையோடு ஊட்டி லயிட் அண்ட் லைப் போட்டோகிராபி அகாடமியில் புகை பட கலைஞர் படிப்பை முடித்து தன் பிலிம் மேக்கிங்கில் இறங்கி இந்த அபூர்வ டாக்குமெண்டரி படத்தை உருவாக்கியுள்ளார் .

கார்திக்கி கன்சால்வேஸ் கூறும் போது , " ஆஸ்கார் விருது எங்களின் "The Elephant Whisperers " ஆவண படத்துக்கு கிடைத்தது கிரேட் தான் தயாரிப்பாளர் குன்னேட் மொங்கஸ் மற்றும் எங்க டீமுக்கு கிடைத்த பரிசு .

2017 ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு காரில் முதுமலை காட்டு வழியாக வந்து கொண்டிருக்க ஒரு குட்டி யானை உடன் வந்த பாகனின் தோளில் தன் தும்பிக்கையை போட்டு கொண்டு ஹாய்யாக நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்து ஆச்சிரிய பட்டு காரைவிட்டு இறங்கி போய் பேசியபோது தான் அவர் பொம்மன் என்றும் யானை குட்டி ரகு ஒரு அனாதை அவரின் மனைவி பெல்லி யானைக்கு தாயாக பரமரிப்பது தெரிய வந்தது . பின்னர் என் அம்மா பிரிசிலா உதவியுடன் படமாக்கும் முயற்ச்சியில் இறங்கினேன் .

முறையாக வனத்துறையிடம் அனுமதி பெற்று படப்பிடிப்பை துவங்கினோம் .

அவர்களின் இருப்பிடத்தில் தங்கி படமாக்கினோம்.

எந்த மேக்கப்பும் இல்லாமல் அவர்களின் மொழியில் இயல்பாக நடிக்க வைத்தோம் . ஒரு விஷயம் அவர்கள் நடிக்கவில்லை தினமும் எப்படி யானைகளை பராமரித்தார்களோ அதை தான் படம் பிடித்தோம் .

அதற்குள் கொரோனா லாக் டவுன் தடை பட்டது படப்பிடிப்பு . மீண்டும் 2019 யில் படப்பிடிப்பை துவக்க இந்த தம்பதியிடம் மற்ற ஒரு அனாதை யானை குட்டி பொம்மி வளர்க்க ஒப்படைக்க பட்டது .

இந்த காட்டுநாயக்கன் பழங்குடி தம்பதி இரண்டு யானை குட்டிகளை தங்களின் சொந்த குழந்தைகள் போல வளர்த்து வருவதை இந்த வனத்தின் உள்ளே படம் பிடித்தோம் . புலி , சிறுத்தை என்று பயங்கர விலங்குகள் என் கமெராவில் நுழைந்தன என்கிறார் .

இந்த ஆவன படத்திற்கு கதை வசனம் எழுதியது அம்மா பிரிசிலா இவர் செயின்ட் .ஹில்டா பள்ளியில் பிரெஞ்சு ஆசிரியை லேம்பி ஸ்கூட்டரில் பள்ளிக்கு வரும் டீச்சர் .

எல்லா பண உதவியும் அப்பா திமோத்தி கன்சால்வேஸ் .

இவருக்கு டானிகா கன்சால்வேஸ் என்ற அக்கா.

மொத்தம் ஒன்பது மாதத்திற்கு பின் "The Elephant Whisperers " ஆவண படம் நெட் பிளேக்சில் ரீலிஸ் ஆக அமோக வரவேற்பு .என்கிறார்.

தயாரிப்பாளர் குன்னேட் மொங்கஸ் கூறுகிறார்

ஆஸ்கார் என்ட்ரிக்கு முன் அமெரிக்க ஆவண பட விழாவில் இடம்பெற்று அமோக வரவேற்ப்பை பெற்றது .

இந்த ஆவண படத்திற்கு போட்டியாக 'HaulOut'- ' How do you Measure A year?' ' The Martha Mitchell Effect' மற்றும் 'Stranger At The Gate'. அதே சமயம் இந்தியாவின் பழங்குடியினரின் வாழ்க்கை அவர்கள் வளர்த்த யானை குட்டிகளின் கதையை படமாக்கி எங்களையும் உலகரங்கில் உயர்த்திவிட்டார் கார்திக்கி.

ஆஸ்கார் விருதை தன் கரத்தில் வாங்கின கார்திக்கி " இந்த விருது இயற்கைக்கும் பழங்குடியினருக்கும் அற்புதமான விலங்கினகளுக்கும் என் இந்திய நாட்டிற்கு கிடைத்த விருது அங்கீகாரம் என் அப்பா , அம்மா , அக்காவிற்கும் என் பட தயாரிப்பாளர் குன்னேட் மொங்கஸ் மற்றும் எங்க டீமுக்கு வணக்கமும் நன்றியும் என்று கூறினார் ".

ஆஸ்கார் விருது என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கும் பொம்மனும் பெல்லி தம்பதி குட்டி யானைகளை படம் பிடித்து போய் எதோ அதிசியம் நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்து கொண்டிருகிறார்கள் .

டி வி செய்திகளை பார்த்து தான் கார்திக்கி இவர்களை உலக அரங்கில் உயர்த்தி விட்டார் என்று அறிந்து கொண்டுள்ளனர் .

உலகமே நீலகிரி முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தை உற்று நோக்கி கொண்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் வெயிலின் தாக்கம் யானை முகாமில் ரகு பொம்மி யானை குட்டிகள் விளையாடி உலாவி கொண்டிருக்கின்றன .

பெல்லி தன் அன்பு குழந்தைகளான ரகுவையும் பொம் மியும் பிரிந்து இந்த ஆஸ்கார் தகவல் வந்தவுடன் சந்தித்தபோது ரகு பெல்லியை ஆற கட்டி தழுவி கொஞ்சியது .

மீடியா மற்றும் சுற்றுலாக்கள் அதிகாரிகள் என்று ஏகப்பட்ட விசிட்டர்கள் இந்த குடும்பத்தை பார்க்க .

பெல்லி கூறும் போது , " சொந்த குழந்தைகள் போல வளர்த்து எடுத்த யானை குட்டிகளை எங்களிடம் இருந்து பிரித்து விட்டனர் .அந்த விருதை பற்றி கவலை இல்லை எங்க குழந்தைகளை எங்களிடமிருந்து பிரித்தது தான் கவலை "

என் பேத்தி சௌமியா சொல்லுது "பாட்டி நாம் தானே யானை குட்டிகளை வளர்த்தோம் ஆஸ்கார் விருது அதற்காக தானே.அப்போ நம்மை அங்கு கூட்டிகிட்டு போயிருக்க வேண்டாமா ?"

அந்த பொண்ணு நேரில் வரும் அந்த மகராசியை கட்டி தழுவி முத்தமிட்டு ஆசீர் வழங்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம் " என்கின்றனர் .

வன உயிரின இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சாதிக் அலி கூறும்போது , " 2017 மே மாதம் ஓசூர் வன பகுதியில் நாய்களால் கடிக்கப்பட்டு பரிதாபமாக தவித்த ரகு குட்டி யானையை எங்க டீம் மீட்டு முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமிற்கு எடுத்து வந்து பொம்மன் பெல்லி மூலமாக பராமரிக்க பட்டு தேற்றி வளர்க்க பட்டது . தாய் பால் இல்லாததால் டொனேஷன் 1.50 லச்சம் கலெக்ட் செய்து லேக்டோஜின் கொடுத்து புத்துயிர் கொடுத்தோம் .உதவி செய்தவர்களில் நடிகர் சிவ கார்த்திகேயன் மற்றும் சென்னையை சேர்ந்த ஜோதிடர் செல்வி .அப்பொழுது தான் கார்திக்கி இந்த யானையை குறித்து ஆவண படம் எடுக்க டிஸ்கஸ் செய்தார் ஊட்டி காப்பி ஹவுசில் தான் இதை பற்றி பல முறை பேசியுள்ளோம் .

இந்த படம் எடுக்க கே .கே .குஷால் முதுமலை புலிகள் காப்பக இயக்குநரை தொடர்பு கொண்டு அனுமதி பெற்றோம் .தற்போது அந்த முயற்சி யில் கார்திக்கி உலக அரங்கில் மிக பெரிய சாதனையை நிகழ்த்தி நீலகிரியை உயர்த்தியுள்ளார் .

சுற்றுசூழல் ஆர்வலர் சிவதாசிடம் பேசினோம் , " இந்த ஆஸ்கார் விருது பாரம்பரிய அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம் .குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு கடினம் இருக்க ஒரு யானை குட்டியை வளர்ப்பது என்பது எவ்வளவு கடினம் .யானை மனித உறவு என்பதை இந்த ஆவண படம் வாயிலாக பிரதிபலித்துள்ளார் இளம் பெண் இயக்குநர் கார்திக்கி .இவருக்கு கிடைத்த ஆஸ்கார் விருது உலக பழங்குடியினருக்கு சமர்ப்பணம் .அதே வேளையில் 1920 ஆம் ஆண்டு உருவாக்கின முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் யானை வளர்ப்பு முகாமிற்கு கிடைத்த ஒரு சிறப்பு அங்கீகாரம் .நீலகிரிக்கும் நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமையை சேர்த்திருக்கிறார் கார்திக்கி கன்சால்வேஸ் ". என்கிறார் .

95 ஆவது ஆஸ்கார் விருது திருவிழாவில் முதல் முறையாக ஒரு இந்திய ஆவண படத்திற்கும் ஒரு பெண் இயக்குனருக்கு கிடைத்த மிக பெரிய விருது இது .

தமிழக முதல்வர் ஸ்டாலின் 15 ஆம் தேதி . பொம்மன் பெல்லி தம்பதியை தலைமை செயலகத்திற்கு நேரில் அழைத்து ஒரு லட்சம் பண உதவி பொன்னாடை போர்த்தி பாராட்டினார் .

அதுமட்டுமல்ல தமிழகத்தில் உள்ள முதுமலை தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணிபுரியும் 91 பணியாளர்கள் ஒவொருவருக்கும் ஒரு லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார் .

பொம்மன் பெல்லி தம்பதியினரின் அதிர்ஷ்டம் மற்ற அனைத்து யானை பராமரிப்பு ஊழியர்களுக்கும் கிடைத்தது தான் மகிழ்ச்சியான தகவல் .

யானை பாகன்களை ஒரு அடிமைகளைப்போல நடத்தி வரும் வன அதிகாரிகள் இந்த ஆஸ்கர் விருதுக்கு பின் தான் இவர்களை ஒரு மனிதர்களாக திரும்பி பார்க்கின்றனர் .தற்போது தான் அரசும் இவர்களை கவனிக்க துவங்கியுள்ளது .

ஒட்டுமொத்த யானை பாகன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் நன்றி தெரிவிக்க வேண்டியது

The Elephant Whisperers ஆவன பட இயக்குநர் கார்திக்கி கன்சால்வேஸ்க்கு தான் .