தொடர்கள்
அனுபவம்
கோடை விடுமுறைக்கு லண்டன் போகிறீர்களா ??? - கோமதி

கோடை விடுமுறையே சிலருக்கு வாய்ப்பில்லை என்றிருக்க சிலருக்கு லண்டன் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

இன்னாட்களில் கேஸ்விலை ஏறினால் கொதிக்கும் நடுத்தர சமூகம் வெளிநாடு சுற்றுலாப் பயணங்கள் செல்ல தயங்குவதேயில்லை.

ஒரு வேளை லண்டன் சென்றீர்கள் என்றால் இந்த இடங்களை மிஸ் பண்ணி விடாதீர்கள்.......

ஹாம்ப்டன் கோர்ட் பேலஸ்

20230322083056621.jpeg

பிரிட்டனின் மன்னராக முடிசூடப் போகும் கிங் சார்லஸ் III வசிக்கும் அரண்மனையே ஹாம்ப்டன் கோர்ட் பேலஸ்! இங்கு செல்வதோடு கியூ கார்டன்ஸ், ரிச்மண்ட் பார்க் பல முக்கியமான இடங்களை ஒரே நாளில் பார்த்து விடலாம். பழமையான கட்டிடங்கள், கால்வாய்கள், அருங்காட்சியகம் என அனைத்தையும் ஒருங்கே கொண்ட இடம் ரிச்மண்ட்!

ராய்ஸ்லிப் லிடோ

20230322083119615.jpeg

அழகிய நீர்தேக்கம், அதனை சுற்றி குழந்தைகள் விளையாடும் மைதானம், அவர்களை மேலும் ஈர்ப்பதற்கு ஒரு மினி ரயில் பயணம் என ஆல் இன் ஒன் சுற்றுலா தளம் ராய்ஸ்லிப் லிடோ என்றால் அது மிகையல்ல.

20230322083137557.jpeg

டடுல்டோர் பீச்

20230322083204845.jpg

டார்செட்டில் அமைந்துள்ள இந்த பழமை வாய்ந்த கடற்கரை சுண்ணாபுக்கல் மற்றும் மணல் சார்ந்த இடம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கடற்கரை சிறு சிறு குகைகள் மற்றும் குன்றுகள் அமையப்பெற்று காண்போரை வியக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஆர்செனல் மைதானம்

2023032208325389.jpg

கிரிக்கெட் ரசிகர்களின் கனவு லார்ட்ஸ் மைதானம் என்றால் கால்பந்து ரசிகர்களின் கனவு இந்த ஆர்செனல் ஸ்டேடியம். எமிரேட்ஸ் ஸ்டேடியம் என்றும் போற்றி பாராட்டப்படும் இந்த மைதானம் சூரிய வெளிச்சத்தில் மின்னும் விதமாகவும், இரவு நேரத்தில் ஒளி தரும் விதத்திலும் கட்டப்பட்டுள்ளது.

நார்போல்க் டூலிப் தோட்டம்

20230322083317908.jpg

டுலிப் பார்ப்பதற்கு அமெஸ்டெர்டாம் சொல்லவேண்டியதில்லை. லண்டனிலிருந்து சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய தோட்டம் நீங்கள் பார்க்கும் விரும்பும் பட்டியலில் டிக் செய்யப்பட வேண்டிய இடம்.