தொடர்கள்
follow-up
வெயில் நம் செல்ல பிராணிகளுக்கும் தான் !!!  -ப ஒப்பிலி



உங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா? இந்த கோடை வெப்பத்தில் இருந்து உங்கள் செல்லங்களை நீங்கள் காப்பாற்ற கூடுதல் வசதிகளை அவைகளுக்கு செய்து தர வேண்டும். இல்லையெனில் உங்கள் செல்லங்கள் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
20240326194712999.jpg
வளர்ப்பு நாய்களை பொறுத்த மட்டில் அவைகளுக்கு நடை பயிற்சி தருவதற்கு காலை ஒன்பது மணிக்குள்ளும் அல்லது மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னும் வெளியில் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார், விலங்கு நல மருத்துவர் ஜோசிகா நாவுக்கரசு. மேலும் அவற்றிற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அவை எப்பொழுது வேண்டுமானாலும் குடிப்பதற்கு வசதி செய்து கொடுங்கள் என்கிறார் அவர்.

வெப்ப அலைகளால் வளர்ப்பு நாய்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இதனால் உணவு உட்கொள்ளுவது, சோர்வாக படுத்துக் கொள்வது என்று பல பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக உயர் ரக நாய்களான கிரேட் டேன், லாப்ரடர் ரெட்ரீவர், ராட்வீலர், டாபர்மேன், சைபீரியன் ஹஸ்கி, மற்றும் செயின்ட் பெர்னார்ட் போன்ற உயர் ரக செல்ல பிராணிகளை கட்டாயமாக ஏர்கண்டிஷன் வசதி உள்ள அறைகளில் தங்க வைப்பது நல்லது. வெப்ப அலை நேரங்களில் காற்றோட்டமான அறைகளில் செல்ல பிராணிகளை வைப்பது மிக அவசியம். அதே போல செல்ல பிராணிகளை உடற்பயிற்சி செய்ய வைக்காமல் இருப்பது நல்லது என்கிறார் ஜோசிகா.

அதிக அளவில் மூச்சிரைத்தல், நிலை தடுமாறுதல், உடல் சோர்வு, மற்றும் சளிச்சவ்வு சிவப்படைதல் ஆகியவை வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட வளர்ப்பு பிராணிகளிடம் தெரியும் அறிகுறிகள். இம்மாதிரியான எந்த ஒரு அறிகுறி காணப்பட்டாலும் உடனே விலங்கு மருத்துவரிடம் உங்களது செல்லங்களை கொண்டு சென்று சரியான சிகிச்சை அளிப்பது அவசியம் என்கிறார் அவர்.
20240326194229161.jpg
இன்று நம்மில் பலர் வெளிநாட்டு பறவைகள், பாம்புகள், ஓணான்கள், கிளிகள் என்று பலதரப்பட்ட பறவை மற்றும் ஊர்வனங்களை வளர்க்கிறார்கள். அவைகளையும் இந்த வெப்ப அலை தாக்கக்கூடும் என்கிறார் வேளச்சேரியில் வெளிநாட்டு வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்து வரும் ஏ ஆர் விஜய்.

ஊர்வனவற்றை வளர்ப்பவர்கள் கவனத்திற்கு: இந்த வகை விலங்குகளையோ அல்லது பாம்புகளையோ அதிக நேரம் தண்ணீரில் நீந்த விடுங்கள். இவற்றை நேரடி சூரிய ஒளியில் வெப்ப அலை வீசும் நாட்களில் விட்டு வைப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் அவர். அதே போல கிளிகளுக்கு தினமும் கொடுக்கப்படும் கொண்டைக்கடலை, பச்சை பயறு போன்ற தானியங்களுக்கு பதிலாக பழ வகைகளை கொடுப்பது நல்லது. அவ்வாறு கொடுக்கும் பொழுது உடலில் உள்ள நீர் சக்தி குறையாமல் இருக்கும், என்கிறார் விஜய்.
20240326194542404.jpg
அணைத்து விதமான பறவைகள் மீது காலையிலும், மதிய நேரத்திலும் தண்ணீரை ஒரு ஸ்பிரேயர் மூலம் தெளிப்பதால் இம்மாதிரியான பறவைகளை ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து காக்கலாம். அதே போல வெப்ப அலை தொடங்குவதற்கு முன் செல்ல பிராணிகளின் நகங்களை நறுக்கி விட வேண்டும். முடி மற்றும் ரோமம் அதிகம் உள்ள உயர் ரக நாய்களுக்கு அவற்றை முன்கூட்டியே நேர்த்தியாக குறைத்து விடுவது நல்லது.

20240327005200680.jpeg