தொடர்கள்
அரசியல்
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது-விகடகவியார்

2024041016111626.jpg
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் .
ஏற்கனவே ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சிபு சோரன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்சமயம் கெஜ்ரிவால். இதனை கண்டித்து ஒட்டுமொத்த போராட்டம் நடத்தினார்கள். கண்டித்து அறிக்கையும் வெளியிட்டார்கள்
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை எதிராகவும் ஜாமின் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போதுஅமலாக்கத்துறை ஆரம்ப நிலையிலே தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.அப்போது நீதிபதிகள் தேர்தல் காரணமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க பரிசீலனை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.அப்போது அமலாக்கத்துறை சார்பாக வழக்கறிஞர்கள் தேர்தலுக்கு பிரச்சாரம் என்பது ஒரு கட்டாயம் இல்லை என்று வாதம் செய்தார்கள் .மேலும் தேர்தல் மற்றும் அரசியல் காரங்களுக்காக ஜாமீன் வழங்கினால் அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று நேற்று புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்கள்.
அப்போது நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கும்போது அவர் அலுவலகப் பணிகள் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. என்று சொன்னபோது கெஜ்ரிவால் வழக்கறிஞர் முதல்வர் பணிகளை பார்க்க மாட்டார் என்ற உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர் ஜூன் முதல் தேதி வரை இடைக்கால ஜாமின் கெஜ்ரிவாலுக்கு கிடைத்திருக்கிறது. ஜூன் இரண்டாம் தேதி சரண் அடைய வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்
இந்த மிச்ச சொச்ச நாட்களில் தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிர்த்து குரல் தர இன்னொருவர் திகார் சிறையில் இருந்து வருகிறார் .அவரை சரியாக எதிர் கட்சிகள் நிச்சயம் பயன்படுத்தும்.