தொடர்கள்
தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா : நேற்று நீ வேற நான் வேறயா ??! இன்று நீ யாரோ நான் யாரோ !! பால்கி

20240410142914544.jpg

2019 பாராளுமன்ற தேர்தலின் போதே பங்காளி சண்டை ஆரம்பித்து விட்டது மஹராஷ்டிராவில்.

1995 முதலே பாஜாகவின் அடல் பிஹாரி வாஜ்பாயீயும் சிவ சேனையின் பாலாசாஹேப் தாக்கரேயும் இணைந்து நாட்டிலேயே மாநில அளவிலேயே முதன்முதலில் ஹிந்துத்வாவின் அடிப்படையில் இரு கட்சிகளும் ஒத்துப்போக ஒரு தவிர்க்கமுடியாத சாலிட் கூட்டணியை ஆரம்பித்தனர்.

2014 பாராளுமன்ற தேர்தல் வரை தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்தே போட்டி போட்டார்கள். எப்போதுமே சிவ சேனையிலிருந்து தான் முதல்வரும், பாஜாக துணை முதல்வராகவும் பதவி வகுப்பது ஒரு ஃபார்முலாவாகவே ஆகியது.

இந்த ஃபார்முலா படியே பாராளுமன்றத்துக்கும் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு போட்டியிடப்பட்டு ……ஜெயிக்கப்பட்டு….நடக்கும்.

2014 சட்ட சபை தேர்தலில் நிலைமை மாறியது. இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன.

288 ல் 122 சீட் வெற்றி பெற்ற தனிப் பெரும்பான்மையுள்ள கட்சிஎன்ற நிலையில் பாஜக முதல்வர் போஸ்ட் தனக்கு என்று ஃபட்னவிஸ் முதல்வரானார் அன்றைய என்சிபியின் வெளியிலிருந்து அளிக்கப்பட்ட ஆதரவின் பேரில்.

ஒரு மாதம் கழித்து சிவசேனை தானாக வந்து ஆட்சியில் பங்கெடுத்துக்கொண்டது.

இவ்வளவும் அன்றே நடந்தது. காலம் கடந்தது. வேறுபாடுகள் பெரிதாகின. 2019 பாராளுமன்ற தேர்தலில் இணைந்தவர் மாநில சட்டசபை தேர்தலில் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டனர்.

கருக்கல்லில் என்சிபியின் அஜித் பவார் நான் வர்ரேன் என்று ஃபட்னவீசோட சேர்ந்து ஆட்சி அமைத்து இரண்டு நாளில் வீழ்ந்தததற்கு, சித்தப்பு ஷரத் பவாரின் சண்டித்தனம் தான் காரணம்.

2024041014304828.jpg

உத்தவ் தாக்கரே, எனக்கு முதல்வர் பதவி தருவதாகத் தான் சொன்னியே என்று ஃபட்னவீஸிடம் சொல்ல, அவரும் மறுக்க, ஃபட்னவீஸ் மேல் மேல் முறையீடு அமித் ஷாவிடம் செல்ல, அவரும் அப்படி ஒன்றும் சொல்லப்படவில்லை என்று பளிச்சென்று பளாரிட, அந்த முறையீடு மோடியிடம் சென்றது. அவரும் தன் டெபுடிகளை விட்டுக் கொடுக்காது போகவே உத்தவ் தாக்கரே என்சிபி மற்றும் காங்கிரஸ்ஸுடன் கை கோர்த்து மஹா விகாஸ் அகாடி (MVA) என்ற கூட்டை ஆரம்பித்து தன் கனவான மாநில முதல்வராக நிறைவேறிடக் கண்டார். கூடவே மகன் ஆதித்யாவும் அமைச்சரானார். இத்தனைக்கும் உத்தவுக்கு இருந்த எம் எல் ஏக்கள் பலம் 56 தான். என்சிபிக்கு 54ம், காங்கிரஸுக்கு 44ம் எம் எல் ஏக்கள் பலம் இருந்தன.

காங்கிரசுக்கும் என்சிபிக்கும் தனக்கு ஒரு கண் போனால் என்ன பாஜாக ஆட்சியில் இல்லாது போனது ஒரு பெரிய தேர்தல் வெற்றியாகவே கொண்டாடினார்கள்.

தேர்தல் என்னவோ காவி கட்சிகள் இணந்து என்சிபி காங்கிரஸ் கூட்டணியை தான் எதிர்த்தன.

ஆட்சி என்னவோ வேறு விதமாக அமைந்தது.

இப்படி காவி கட்சிகளான பாஜகாவும் சிவசேனையும் எதிரிகளாயின. அன்றே என்சிபியிலும் பாஜகவின் ஊடுருவல் ஆரம்பித்துவிட்டது.

உத்தவுக்கு வேண்டுமானால் தனிப்பட்ட அந்தஸ்த்து உயர்வு வந்ததே தவிர கட்சிக்குள் உட்பூசல் கசிய ஆரம்பித்தது.

உத்தவ் தனது மற்ற இரு கட்சிகளின் இழுப்புக்கும் ஆட ஆரம்பித்தார். அவர்களின் மனது நோகாமல் அது வரை இந்துத்வாக்கு காவடி எடுத்தவர் அந்த அடையாளத்தையே மறந்து போனார்.

புதிய நண்பர்கள் படு குஷியானார்கள் என்பதை விட, பாஜகவுக்கு எதிராக ஆடி அந்த நண்பர்களின் சபாஷையும் பெற்றது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் ஆகியது.

அங்கு தான் அவர் கோட்டை விட்டார். இந்த ஒரு கல்லில் இரண்டு மாங்காய் சபாஷ்களில் கட்சியினரிடையேயான குழப்பத்தையும், ஹிந்துத்வாவை காற்றில் பறக்க விட்டதில் உடன் பிறப்புக்களின் அதிருப்தியை கவனிக்கத் தவறினார்.

அதன் விளைவு , கட்சியும் உடைஞ்சு கட்சி பேரு, கொடி, சின்னம் எல்லாமே போச்சு. கூட ஆட்சியும் போச்சு.

இதற்கிடையே ஏக்னாத் ஷிண்டேவின் கட்சி பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் இறுதி முடிவு போன்றவை இழுபறியில் இருக்க ஃபட்னவீஸோ இன்னும் வேறு கட்சியை சேர்த்துக்கொண்டால் ஆட்சி நிலைக்கும் என்ற நோக்கத்தோடு வலை வீச அஜித் பவார் மாட்டினார்.

ஏற்கெனவே அவரோடு தானே 2019 ல் ஆட்சி அமைத்தார். ஆனால் ஷரத் பவாரின் சண்டித்தனத்தால் அது ஃப்ளாப் ஆனது.

ஆனாலும் அப்போதிலிருந்தே அந்த விரிசல் சரி செய்யப்படாமல் உடைப்பு அடைக்கப்படாமல் வரப்பில் விரிசல் பெரிதானதுதான் உண்மை.

ஆக இந்த முறை நல்ல பிளானுடன் அஜித் பவார் தனது விசுவாசிகளோடு வெளியே வந்தார். ஃபட்னவீஸோடு கை கோர்த்தார். ஆட்சியிலும் துணை முதல்வர் அந்தஸ்து பெற்றார்.

இது மட்டுமா, அவரது கட்சி தான் ரியல் என்சிபி என்றும் அதனால் அந்த கட்சியின் கடிகார சின்னமும் கூடவே வர சித்தப்புக்கு ஷாக் தான்.

20240410142805467.jpg

இன்று குடும்பத்துலியே தகறாரு – ரெண்டு என்சிபி

அன்று பாலாசாஹேப் தாக்கரேவின் குடும்பத்தாருக்கும் அவரின் பக்தருக்கும் தகராறு – இரண்டு சிவ சேனைகள்.

மீதியிருப்பதோ காங்கிரஸ் தான். அதை உடைப்பதற்கு முயற்சிக்கவே வேண்டாம். கூடாரம் தானாகவே காலியாகி வருகிறது.

அப்பா முர்ளி தியோரா தீவிர காங்கிரஸ்வாதி. காங்கிரஸில் நூற்றாண்டு கொண்டாட முக்கியமானவர். அவரது மகன் மிலிந்த் தியோராவும் அப்படித்தான்.நேற்று வரை காங்கிரஸ் தான், கொஞ்ச நஞ்ச நாளில்லை, முழுசா அம்பத்தஞ்சு வருஷங்கள். கடந்த பத்து வருஷத்தில் ஜ்யோதிராதித்ய சிந்தியா, ஜிதின் ப்ரசாதா, பஞ்சாபின் முன்னாள் முதல்வர் நிஜமான கேப்டன் அமரிந்தர் சிங்அனில் ஆண்டனி, குஜராத்தின் ஹார்திக் படேல், மாஜி சட்ட அமைச்சர் அஷ்வனி குமார், பஞ்சாபின் சுனில் ஜாக்கர், ஆர்பிஎன் சிங், ப்ரியங்கா சதுர்வேதி, சூஷ்மிதா தேவ், ஜெய்வீர் ஷெர்கில், அல்பேஷ் தாகோர், குலப் நபி ஆசாத், ஷெஹ்சாத் பூனாவாலா போன்றோருடன் காங்கிரஸின் மீட்டெழுப்பு நடக்கும் என்று இருந்தவர் தான் இந்த மிலிந்தும். அதற்கு முன்னால் தற்போதைய அஸ்ஸாமின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸும் முன்னால் காங்கிரஸில் இருந்தவர். இவர்களெல்லோரும் ராஹுல் காந்தியின் உள் வட்டங்களாய் இருந்தவர்கள் தாம். லிஸ்ட் நீளம் தான் போய்க் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் ஜனவரி 14 அன்று ஏக்னாத் ஷிண்டேவின் உண்மையான ஷிவ் சேனா என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் இணைந்து விட்டார். இவரோடு பெயரெடுக்கப்பட்ட அவர்களும் காங்கிரஸிலிருந்து பிற கட்சிகளில் இணந்து விட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

சமீபத்தில் பூரி பாராளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸின் சீட் கொடுக்கப்பட்ட சுசித்ரா மோஹந்தி நிதியும் பிரச்சார ஆதரவும் கிடைக்கவில்லை என வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு ஒரு நாள் முன்னம் விலகிக் கொண்டார்.

பாஜக மட்டும் ஒழுங்கா என்றால் அங்கும் குழப்பமே நிலவுகிறது.

நேற்று வரை அஜித் பவாரை ஊழல் மன்னன் என்று விட்டு இப்பப்போயி அவரைப்போயி……

20240410142715229.jpg

சீட் பங்கீடுகளிலும் மஹாயுதியில், இந்த அசல் மூன்று கட்சிகளும் கொண்டதுதான் மஹாயுதி என்றழைப்படுகிறது.

20240410142518505.jpg

ஏக்னாத் ஷிண்டேவிடமோ அனைத்து சிவசேனை வட்டங்கள் சேர்ந்த பாடில்லை, அந்த சொத்துக்களும் வரவில்லை…..

இந்த பார்ட்னர்களை வைத்துக்கொண்டு ஃபட்னவீஸின் யுக்தி என்ன என்று குழப்பமே நிலவுகிறது. கட்சிக்குள் குழப்பம் இல்லாமல் இருந்தால் சரி.

சிவ சேனையிலிருந்து ஏக்னாத்தை பிரித்தது முதல் மஹாராஷ்டிர அரசியலில் பாஜகவின் அனைத்து நகர்த்தலும் ஃபட்னவீஸே நகர்த்துவதாகத் தெரிகிறது.

அதற்கு கட்சி தலைமையும் ஆடுகிறது.