தொடர்கள்
அழகு
" ஷாக் அடித்த ஊட்டி மலர் காட்சி " - ஸ்வேதா அப்புதாஸ்.

உலக பிரசித்தி பெற்ற மலர்க்கண்காட்சி ஊட்டி கோடைவிழாவின் மிக முக்கிய அங்கம் வகிக்கும் ஒன்று .

20240411001924320.jpg

நூற்றாண்டு பழமைவாய்ந்த பொட்டானிக்கல் கார்டன் ஒரு பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் ஒன்று .

இங்கிலாந்து கியூ கார்டானின் கியூரேட்டர் மேக் ஐவரின் கரத்தால் உருவான அற்புத கார்டன் ஆசியாவின் மிக பெரிய கார்டன் .

20240411001958373.jpg

கடந்த வருடம் ஊட்டி உருவாகி 200 வருடத்தை நீலகிரி ஆவன காப்பக இயக்குநர் வேணுகோபால் முன்னின்று நீலகிரி எம் பி ஆ .ராசா தலைமையில் நீலகிரியை உருவாக்கின ஜான் சல்லிவன் கொள்ளு பேத்திகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

20240411002123631.jpg

இந்த வருடம் அனைத்து கொண்டாட்டங்களும் தலைகீழ் 126 வது மலர்க்கண்காட்சி மே 17 ஆம் தேதி என்று அறிவித்து திடீர் என்று 10 ஆம் தேதி என்று அதிரடியாக அறிவித்தார் கலெக்டர் .அருணா .

ஏன் இந்த மாற்றம் என்று புலப்படவில்லை .

தேர்தல் நடத்தை விதி இருப்பதால் முன்னதாக துவங்குகிறது என்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஒரு காரணம் என்று சால்ஜாப் தகவல் .

20240411002241576.jpg

அதே சமயம் பத்து நாள் மலர்க்கண்காட்சிஎன்ற அறிவிப்பை ஆட்சியர் அறிவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் அவசியம் என்ற ஆணையால் கூட்டம் முழுவதுமாக குறைந்து போக வியாபாரிகளும் காட்டேஜ் உரிமையாளர்கள் கொதித்து போராட்டத்தில் குதித்துள்ளனர் .

மலர்க்கண்காட்சி எதோ அவசர நிலையில் ரெடியானது .

நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 150 ரூபாய் சிறியவர்களுக்கு 75 ரூபாய் என்ற அறிவிப்பு ஷாக் அடித்தது

நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் சற்று ஆவேசமாக கூறினார் ,

20240411002439708.jpg

" ஊட்டி மலர்க்கட்சி வரலாற்று சிறப்புமிக்கது இந்தியாவில் இருந்து மக்கள் வருவது சகஜம் .நடுத்தர மக்கள் தான் அதிகம் வருவார்கள் ஒரு குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் வந்தால் இந்த நுழைவு கட்டணம் ஒரு பாரம் தானே. கலைஞர் முதல்வராக இருந்த போது இலவசமாக அனுமதி வழங்கினார் .பின்னர் 10 ரூபாய் வசூலித்தனர் .

தற்போது இது ஷாக்கிங் தான் அநியாயம் விடியல் ஆட்சிக்கு இந்த அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்துகிறார்கள் .இது ஒரு பகல் கொள்ளை .

கார்டெனுள் சரியான டாய்லெட் மற்றும் புட் கோர்ட் இல்லை பராமரிப்பும் இல்லாமல் இருக்க நுழைவு கட்டணம் டூ மச் ".

9 ஆம் தேதி இரவு கார்டனுள் ஒரு விசிட் அடித்தோம் நாம் செல்லவும் கலெக்டர் அருணா மற்றும் வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வந்து அரேஞ்சமென்ட்டை பார்த்தனர் .

அவசர கதியில் செய்துகொண்டிருந்தனர் .

அடுத்த நாள் காலை நாம் விசிட் அடித்தோம் அப்பொழுதும் பூக்கள் அலங்காரம் தொடர்ந்து கொண்டிருந்தது .

20240411002622974.jpg

பிரமாண்ட டிஸ்னி லேண்ட் , ஒரு ஓரமாக ஊட்டி ட்ரெயின் மலர்களால் அலங்கரிக்க பட்டிருந்தது .

20240411002708842.jpg

ஊட்டிக்கும் டிஸ்னி லேண்ட் க்கும் என்ன சம்பந்த என்பது தான் புரியவில்லை.

மூன்று லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .

போடியில் இருந்து வந்த மணிமாலா தேவி ,

20240411002732269.jpg

" இது என் பல நாள் கனவு ஊட்டி மலர் கண்காட்சிக்கு வருவது இது தான் முதல் முறை .இத்தனை மலர்களை பார்த்து பிரமித்து போய்விட்டேன் அழகோ அழகு வார்த்தைகளே இல்லை " என்கிறார் .

திருச்சூரில் இருந்து விசிட் செய்த ஷிண்டோ பிஜி தம்பதியினர் ,

20240411002852544.jpg

" 126 ஆம் மலர்கண்காட்சிக்கு வர வேண்டும் என்று பலமுறை பிளான் செய்து இப்பொழுது தான் வந்துள்ளோம் . நாங்க பிளான் செய்யும் போது இ பாஸ் இல்லை பின் அது அமுலுக்கு வந்தவுடன் ஆறாம் தேதி புக் செய்ய

நோ ப்ரோபிளம் .மற்ற ஒரு பிரச்சனை நுழைவு கட்டணம் மிக அதிகம் நடுத்தர விசிட்டர்கள் பெரிய குடும்பத்தாருக்கு அதிகம் இதை குறைக்க வேண்டும் ".

இங்கிலாந்தை சேர்ந்த நெப் மலர் காட்சியை பார்த்து பூரித்து கூறினார் ,

2024041100300782.jpg

" இந்த மலர் அலங்காரங்கள் அமேசிங் மிகவும் அழகாக இருக்கிறது .

இங்கிலாந்து கியூ கார்டெனுக்கு பலமுறை சென்றுள்ளேன் அதே போல இதுவும் உள்ளது என்று கூற ,

கியூ கார்டன் கியூரேட்டர் தான் இந்த கார்டனை உருவாக்கியவர் என்று நாம் கூற , அப்படியா அவரின் படம் எங்கே பார்க்க முடியுமா என்று கேட்க அவரின் உருவ சிலை இங்கு இருந்தது என்று கூற எங்கே என்று கேட்க அது மிஸ்ஸிங் .

கடந்த வருடம் மேக் ஐவரின் உருவ சிலை வைக்க பட்டு தற்போது அது காணவில்லை .

நெப் ஆண்டிபட்டியில் ஒரு சமூக சேவை இயக்கத்தில் பணிபுரிகிறார் .

கேரளாவை சேர்ந்த ரேனு பால் தம்பதி,

" இப்படி ஒரு கார்டன் மலர்க்கண்காட்சியை நாங்க பார்த்து இல்லை மிகவும் ஏற்றமுள்ள காட்சி " என்று கூறினார்கள் .

மலர் காட்சியில் நாம் சந்தித்த மற்ற ஒரு கெஸ்ட் திருநங்கைகள் கஜோலும் சுனைனாவும் ,

20240411003335766.jpg

" நாங்கள் SAFE ( Social Action for emancipation ) என்ற சமூக சங்கத்தை நடத்தி வருகிறோம் அதற்கான விளம்பர ஸ்டால் இந்த மலர்க்கண்காட்சியில் இடம் பெற்றிருப்பது பெருமையான விஷயம் எங்க திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் அருணா காலெக்டரிடம் பேசி இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் இட் இஸ் கிரேட் " என்கிறார்கள் இந்த வித்தியாச மலர்கள் .

20240411003419262.jpg

மலர்களை ஏராளமானவர்கள் ரசித்தாலும் ஆயுஷ் பிரித்திஷ் குட்டி சகோதர்கள் மலர்களை எட்டி பார்த்து ரசித்தது இரு மலர்கள் ஒரு கொத்து மலர்களை ரசிப்பது போலிருந்தது

இ பாஸ் கட்டாயம் என்பதால் அவ்வளவாக கூட்டமில்லை ஊட்டி ஆசுவாசமாக சுவாசித்து கொண்டிருக்கிறது .

தேர்தல் நடத்தை விதியால் கரை வேட்டிகள் மிஸ்ஸிங் .

ஆரம்ப கால கட்டத்தில் மலர்க்கண்காட்சி காலை 8.45 மணிக்கு துவங்கும் பின்னர் காலை 10 மணி என்று தொடர்ந்தது .

கலைஞர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சரியான நேரத்திற்கு மலர்க்கண்காட்சி துவக்கி வைத்தனர்.

தற்போது அது பின்பற்றுவது இல்லை என்று தான் தோன்றுகிறது .

2024041100345930.jpg

இந்த 126 வது மலர்க்கண்காட்சியை துவக்கி வைக்க தமிழக தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தார் பகல் 12.30 மணிக்கு தான் மலர்க்கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது .

விழா மேடைக்கு கீழ் பத்திரிகையாளர் மற்றும் ஒரு சில அழைப்பாளர்களை தவிர இருக்கைகள் காலி .

இதுவரை இல்லாத நடைமுறை ஒரே நாளில் அரசு தாவரவியல் பூங்கா மலர் காட்சியும் .

நூற்றாண்டு ரோஜா கார்டனில் ரோஜா காட்சியை பகல் 1 மணிக்கு துவக்கி வைத்து இ பாஸ் பெறுவது மிக ஈஸி எல்லோரும் தாராளமாக ஊட்டிக்கு வரலாம் என்று கூறி விடைபெற்றார். தலைமை செயலர் .

20240411003536121.jpg

ரோஜா கார்டனில் யானை, புலி ,கரடி , சிறுத்தை என்று ரோஜாக்களால் அலங்கரிக்க பட்டிருந்தது .

அடிக்கடி ஊட்டி நகருக்குள் விசிட் செய்யும் இந்த மிருகங்களை நினைவு கூர்ந்து தான் தோட்டக்கலை அலங்கரித்துள்ளன என்று நம் நண்பர் காதில் கிசுகிசுத்தார் .

ரோஜாக்கள் சரியாக மலரவில்லை .

2024041100383980.jpg

நாம் ஒரு முக்கிய தோட்டக்கலை அலுவலரிடம் , " ஏன் இந்த அனுமதி டிக்கெட் இவ்வளவு விலை என்று கேட்க எல்லாம் வேளாண்மை முதன்மை செயலர் அபூர்வா மற்றும் கலெக்டர் அருணா தான் காரணம் எங்க கை கட்டப்பட்டு இருக்கிறது கார்டன் நஷ்டத்தில் இயங்குகிறது அதை பார்த்த கலெக்டர் அருணா அரசிடம் முறையீட்டு 3 கோடி பெற்று தந்தார் .

என்னிடம் கேட்காதீர்கள் என்று நழுவினார் .

20240411003626288.jpg

ஊட்டி 126 வது மலர்க்கண்காட்சி நுழைவு கட்டணம் உயர்வு மற்றும் ஈ பாசால் பிசுபிசுத்தது .

கார்டனை முனேற்ற 3 கோடி அரசு வழங்கியும் எந்த முன்னேற்றத்தை யும் பார்க்க முடியவில்லை .

20240411003726487.jpg

இன்றைய ஊட்டி கார்டன் மலர்க்கண்காட்சியை பார்க்கும் போது சிறப்பான முன்னாள் தோட்டக்கலை அதிகாரிகள் முருகன் , மணி , ராதாகிருஷ்ணன் நம் நினைவுக்கு வந்தனர் அந்த மலர் காட்சிகளை மறக்க முடியாது .