தொடர்கள்
அரசியல்
ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் ! – ஆர்.ராஜேஷ் கன்னா

20240415170108815.jpeg

நான்கு கட்ட நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பின்றி நடந்து முடிந்துவிட்டது. வாக்காளர்கள் வாக்களிக்க நிறைய இடங்களில் வரவில்லை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தினை கவலையடைய செய்துள்ளது.

எது எப்படியோ. இந்த 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதே நேரத்தில் கேரளா வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இரண்டு இடங்களில் போட்டியிடுவதால் கேரளாவில் பிரச்சாரம் முடித்துகொண்டு ரேபரேலி தொகுதிக்கு ராகுல் காந்தி வந்து பொது கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ரேபரேலி மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தினை அவரது தங்கை பிரியங்கா வதேரா சுற்றி சுழன்று கவனித்து வருகிறார்.ராகுல் காந்தி வேட்பு மனுதாக்கல் செய்தபின் முதல்முறையாக மகராஜ்கஞ்ச் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தனது தங்கை பிரியங்காவுடன் கலந்து கொண்டார்.

2024041517014482.jpg

பொதுமக்கள் இடையே தனது பிரசாரத்தில் பேசிகொண்டிருந்த ராகுல்காந்தி தன் அருகே பிரியங்கையாவை அழைத்து அவரது தோளில் பாசத்துடன் கை போட்டார்.பிரியங்கா முகத்தினை வாஞ்சையுடன் தடவி கொடுத்தவர் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்றதால் என் சகோதரி இங்கு எனக்காக நேரம் செலவழித்து பிரச்சாரம் செய்துவருகிறார் இதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்த பொதுஜனம் “ உங்கள் திருமணம் எப்போது? என்று ராகுல் காந்தியை நோக்கி கேட்டார்.அருகிலிருந்த பிரியங்கா பொதுஜனத்தினத்தின் கேள்விக்கு பதிலளிக்குமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார்.

விரைவில் என் திருமணம் நடக்கும் என்று ராகுல் காந்தி நாணத்துடன் மைக்கில் சொல்லிவிட்டு ஒரு புன்முறுவல் செய்தார்.

ராகுல் காந்திக்கு தற்போது 53 வயதாகிறது. நீண்ட நாட்களாக ராகுல் காந்தியின் திருமணத்தினை அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்து இருந்தனர்.நான்கு கட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிந்து யார் அடுத்த பிரதமர் என்ற இந்தியாவே எதிர்நோக்கினாலும் ராகுல் காந்தி திருமணம் பற்றிய செய்தியை “Ab jaldi hi karni padegi “ என்று அவரே சொன்னது தான் இந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் ஹைலைட் .