தொடர்கள்
Other
நாய்கள் ஜாக்கிரதை – ஆர்.ராஜேஷ் கன்னா

20240415171610449.jpg

நாடு முழுக்க தெருநாய்கள் பெருகிவிட்டது என பொதுஜனங்கள் புலம்பல் சத்தம் கேட்கிறது.

20240417090803477.jpeg

நன்றி: தினமணி

இந்தியாவில் தற்போது 10 மில்லியனுக்கும் மேற்பட்ட செல்ல நாய்கள் வளர்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளது.

கரோனா காலத்தில் தெரு நாய்கள் உல்லாசமாக இருந்ததினால் 1 கோடி புதியதாக நாய்குட்டிகள் பிறந்தது என்ற புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வழக்கமாக ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் தான் தெருநாய்கள் இனப்பெருக்கம் என்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் தற்போது எல்லா நாட்களிலும் தமிழக தெருக்களில் ஒரு பெண் நாய் பத்துக்கும் மேற்பட்ட ஆண்நாய்கள் சுத்துப்போட்டு இனப்பெருக்கம் செய்ய ரோடு சண்டை போடுவது அதிகாலை வாக்கிங் போகும் பொது ஜனம் தினந்தோறும் காணும் காட்சி .

2024041517185573.jpg

சில வருடங்கள் வரை சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய பஞ்சாயத்துக்களில் தெருநாய்களை நாய் வண்டி வந்து பிடித்து சென்று கொன்று புதைத்துவிடும். முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி பதவியிலிருக்கும் போது தெரு நாய்களை கொல்ல கூடாது அதற்கு குடும்ப கட்டுபாடு தான் செய்ய வேண்டும் என்று உத்திரவிட்டார்.இதனால் நாய் பிடித்து கொல்வது நிறுத்தப்பட்டதால் தெரு நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து விட்டது.

சில வருடங்களுக்கு முன்பு,கேரளாவில் தெருநாய்கள் அதிகமாகி வெறிபிடித்து பொதுஜனங்களை கடித்தது. கேரளா அரசு அதிரடியாக தெருநாய்களை கொல்ல உத்திரவிட்டது.

கேரளா நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால் குப்பைகளில் இருந்து எலிகள் இனப்பெருக்கம் அதிகரித்தது , இதனை தெருநாய்கள் எலிகளை பிடித்து உண்டது. இதனால் தெருநாய்கள் தோட்டிகள் போல் செயல்பட்டு சுற்றுபுறத்தில் எலிகள் பெருக்கத்தினை கட்டுபடுத்தியது.இதனால் நாய்களை கொல்லகூடாது அதற்கு மேனகா காந்தி தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்.

டெல்லியில் 5 லட்சம் தெருநாய்கள் சுற்றி திரிந்தது, தன்னுடைய முயற்சியால் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ததால் நாய்களின் எண்ணிக்கை 70,000மாக குறைந்தது.அத்துடன் நாய்கள் கருத்தடை செய்த பின் நாயின் செயல்பாட்டில் வேகம் குறைந்து பொதுஜனங்களை கடிக்காமல் இருந்தது என்ற தரவுகளும் உண்டு.

2024041517194272.jpeg

பீகாரில் நடந்த பஞ்சாயத்து வார்டு தேர்தலில் தன் தெருக்களில் சுற்றி திரியும் தெருநாய்களையும் , கேட்பாரற்று சுற்றும் விலங்குகளையும் ஒழிப்பேன் என்று அங்கு போட்டியிட்ட வேட்பாளர் தேர்தல் வாக்குறுதியாக அளித்து, முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி தான் தெருநாய்களை பிடிக்க தடை போட்டார் என்பதால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிகழ்வும் நடந்தேறியது.

தெருநாய்கள் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் பொதுஜனங்கள் பெரும் அவஸ்தை ஏற்பட்டு வருகிறது.

மாநகராட்சி நகராட்சி, பஞ்சாயத்துக்களில் யாரும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியினை முடுக்கி விடுவதில்லை ,இதனால் தெருநாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது என்ற ஆதங்க குரல் தமிழகம் முழவதும் ஓங்கி ஒலிக்கிறது.

போர்கால அடிப்படையில் தமிழக அரசு தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டும் கருத்தடை செய்து இனப்பெருக்கத்தினை தடுக்குமா என்பதே பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.