தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

கலகலப்பு 3

கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விமல் மிர்ச்சி சிவா ,ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராஷ்மிகா

20240417092008431.jpeg

சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் சல்மான் கான் ஜோடி ராஷ்மிகா.

தபு

ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை தபு. இதற்காக சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிக்கின்றன.

மம்முட்டி ஜோடியாக நயன்தாரா

20240417191322136.jpeg

இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் மம்முட்டி நயன்தாரா ஜோடி நடிக்க இருக்கிறது. கௌதம் மேனன் மலையாள படம் இயக்க இருக்கிறார். இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்.

835 கோடி

ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் ராமாயண கதையை ஹிந்தி பட இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார். இது ஒரு பிரம்மாண்டமான படம். இதற்கான பட்ஜெட் 835 கோடி. 2027-இல் தான் இந்த படம் வெளியாகும்.

ஹீமா குரேஷி

20240417093218939.jpg

நடிகர் யாஷ் நடிக்கும் ' தி டாக்சிக்' படத்தை நடிகை கீதுமோகன் தாஸ் இயக்குகிறார். கியாரா அத்வானி ஜோடி. இப்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹீமா குரேஷி ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே ரஜினியின் காலா அஜித்தின் வலிமை படத்தில் நடித்திருக்கிறார்.

சுட சுட

சூர்யா

20240417093632370.jpeg

சூர்யா நற்பணி இயக்கத்தை வார்டுகள் அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதன் மூலம் விரைவில் சூர்யாவும் அரசியலுக்கு வருவார் என்று பேச்சு வர ஆரம்பித்திருக்கிறது.

பாகுபலி 3

பாகுபலி மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என்கிறார் இயக்குனர் ராஜமௌலி.

இந்தியன் 3

இந்தியன் இரண்டாம் பாகம் தயாரிக்கும் போதே இந்தியன் மூன்றாம் பாகமும் ரெடியாகிறது. சிறிது இடைவெளி விட்டு மூன்றாம் பாகம் வெளியாகும் என்கிறார்கள்.