தொடர்கள்
தேர்தல் திருவிழா
மும்பை வட மேற்கு தொகுதி - தேர்தல் களத்திலிருந்து ரிப்போர்ட்

மும்பை வட மேற்கு தொகுதி - தேர்தல் களத்திலிருந்து ரிப்போர்ட்

இந்த தொகுதியில் அந்தேரி ஜோகேஷ்வரி கோரேகான் என ஆறு அசெம்பிளி தொகுதிகள் அடங்கியது. முக்கியமாக மிகப்பெரிய தொகுதியான அந்தேரியில் தான் பிரச்சாரங்கள் மிகுந்த பெரிய அளவில் காணப்பட்டன.

சுவற்றில் தேர்தல் விளம்பரம் போட்டு நாரடிப்பது இங்கு கிடையாது.

பெரும்பாலும் சாலையோரங்கள், சாலை சந்திப்புகள் பாலங்களில் பக்க வாட்டில் அமைந்துள்ள எலக்ட்ரோனிக் விளம்பர பலகைகளில் தான் யார் எங்கு நிற்கிறார்கள் என்று தெரிகிறது.

எப்பொழுதுமே இந்த தொகுதியில் சிவசேனைக்கும் காங்கிரஸுக்கும் தான் போட்டி இருக்கும்.

நடிகர் சுனில் தத் இருந்த வரை அவர் தான் காங்கிரசுக்கு வேட்பாளரும் எம் பியும். ஒரு முறை ராம் ஜெத்மலானி கூட இந்த தொகுதியில் நின்று ஜெயித்தவர் தான். போன முறை பழைய சிவசேனையின் சார்பாக கஜானன் கீர்த்திக்கர் ஜெயித்தார்.

இந்த முறை அவர் ஷிண்டே சிவ சேனையில் சேர்ந்துவிட்டபடியால் தேர்தல் அறிவித்த உடனே அதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

என் டி ஏ கூட்டணியிலும் சரி இண்டி கூட்டணியிலும் சரி முதலில் தொகுதி பிரிப்பதிலிருந்து அந்த கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதிலும் இழுபறி கடைசி வரை இருந்துகொண்டே இருக்கும். இந்த தொகுதியும் இதற்கு விதி விலக்கல்ல.

ஆனால், இந்த தொகுதிக்கு இன்னொரு சிறப்பும் சேர்ந்து கொண்டது தான் ஹைலைட்டே.

என் டி ஏ கூட்டில் ஷிண்டே சேனைக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட அவர்களும் தற்போதைய எம் பி ஆன கஜானன் கீர்த்திக்கரை முன்மொழிந்து விட்டனர். இது மார்ச் இரண்டாம் வார நிலை. இண்டி கூட்டில் உத்தவ தாக்கரே சேனைக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட அவர்களோ அங்கு நிறுத்திய வேட்பாளர் அமோல் கீர்த்திக்கர் ஆவார். இவர் கஜானன் கீர்த்திக்கரின் மகன்.

வீட்டையே பிரித்துவிட்டது இந்த தேர்தல்.

இத்தனைக்கும் மார்ச் 17 ஆம் தேதி அந்தேரி மேற்கில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் நடந்த பங்குனி உத்திரத்தன்று அங்கு எங்களின் சாஸ்தாப்ரீதி பூஜையின் இடையில் (ஆன்று ஹோலி பண்டிகையும் கூட) வண்ணங்களில் குளித்துவிட்டு அதே டிரஸ்ஸில் பூஜைக்கு இடையில் உள்ளே நுழைந்து சுவாமியே சரணம் என்று நமஸ்கரித்துவிட்டு எனக்கே ஓட்டு போட்டு ஆசீர்வதியுங்கள் என்று அமோல் கீர்த்திக்கர் வேண்டிக்கொண்டார். அப்போழுதே நினைத்தேன் வீட்டை இரண்டாக்கி விட்டதே இந்த தேர்தல் என்று.

நல்ல வேளை ஷிண்டே தனது வேட்பாளரை ரவீந்திர வாய்க்கர் என்று அறிவித்து இந்த இக்கட்டான நிலையை சமாளித்தார். ஆனாலும், தந்தையோ ஷிண்டேவிடம், தனயனோ உத்தவிடம்.

சபாஷ்.

இந்த ரவீந்த்திர வாய்க்கர் பாலாசாஹெப் தாக்கரேவின் காலத்திலிருந்தே அந்த குடும்பத்தின் உள் வட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாய் இது வரை இருந்திருக்கிறார்.

மார்ச் 10 அன்று தான் கட்சி மாறியிருக்கிறார். ஈ டி தொல்லையிலிருந்து விடுபடத்தான் இந்த மாற்றம் என்று பேசப்படுகிறது. இந்த நிலையில் உத்தவ் அவருக்கு சப்போர்ட் செய்யும் நிலையை கைவிட, வாய்க்கர்க்கு இருந்த முடிவு கட்சி மாற்றம் தான். ஜெயில் செல்வதை விட அது மேல் தானே.

20240417225057345.jpg

[ரவீந்திர வாய்க்கரின் தேர்தல் நோட்டீஸ். தலைப்பில் உள்ள தலைவர்களில் பலது கடைசியில் இருப்பவர் கஜானன் கீர்த்திக்கர், அதாவது, எதிர் கட்சி வேட்பாளர் அமோல் கீர்த்திக்கரின் தந்தை]

இது இப்படியிருக்க எதிரி கூடாரத்தில் ஒரு பார்வையிட முயற்சிக்க, அன்று ஜோகேஷ்வரிகிழக்கு பகுதியிலிருந்து அந்தேரி கிழக்கு நோக்கி டெம்போவில் ரோட் ஷோ செய்தவாறே அமோல் கீர்த்திக்கர் மோட்டார் சைக்கிள் ஊர்வலர்கள், இண்டி கூட்டணி கட்சிகளின் வண்ண வண்ண கட்சி கொடிகள், புடைசூழ அமோல் நீ முன்னாடி போ நாங்க உம்பின்னாடி வாரோம், என்ற உசுப்பேத்தும் கோஷங்கள் அடுக்கு மாடிகளைப் பிளக்க வந்து கொண்டிருந்தார்.

20240417225347928.jpg

20240417230631600.jpg

சிறிய சாலைகளில் ரோட் ஷோ போவது இப்ப ஃபேஷன் ஆகிவிட்டது.

20240417225550102.jpg

[மோட்டர் சயிக்கிள் ஊர்வலம்]

20240417225739458.jpg

இவர்களது தாரக மந்திரம் - இதயத்தில் ராம் ஒவ்வொரு கையிலும் காம்(பணி)

20240417225831257.jpg

[எந்த கட்சி துண்டு வேணும்?]

ஒவ்வொரு சந்திப்பிலும் இண்டி கூட்டணி கட்சி ஒவ்வொன்றாக ஒரு கௌரவ வரவேற்பாக மாலையிட்டு, திலகமிட்டு, பூச்செண்டு கொடுத்து அந்த ஊர்வலத்திடன் கலப்பது போன்ற செட்டப்பு நடந்தேறியது. அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து கீழர் கேட்டருகில் அந்த குடிருப்பிலுள்ளோர் அவரை ஆரத்தி எடுத்து அட்ச்சதை போட்டு திலகமிட்டு மாலை அணிவித்து ..என்றபடி நத்தை வேகத்தில் ஊர்வலம் நக்ர்ந்தது.

20240417230732980.jpg

20240417230045208.jpg

[சமாஜ்வாதி கட்சி வரவேற்பு]

20240417230138721.jpg

[என் சி பி கட்சியின் வரவேற்பு]

20240417230311592.jpg

நேரமும் தூரமும் கடக்க கடக்க ஊர்வலமும் நீண்டது மக்களின் சேர்தலினாலே, அதனாலே கோஷமும் கெட்டியாகவே கேட்டன. கூடவே கானா பார்டி மேளமும் சேர பட்டாசு சத்தங்களுக்கிடையே குதூகலமாக தானாய் அமைந்துவிட்ட குத்து டான்சும் ஊர்வலத்துக்கு களை கட்டியது.

2024041723035249.jpg

இந்த கூட்டங்களைத் தான் கடந்த முப்பது வருடங்களாக பார்க்கின்றேனே. பிரியாத சேனையின் கூட்டமாயிருந்திருந்தால் இந்நேரம் அங்கு தமால் தான் நடந்திருக்கும். ஆனால் இப்போது அந்த தமால் பங்கு போட்டு கொள்ளப்பட்டது தான் உண்மை..

நானும் ஒரு சந்திப்பில் இணந்த நானும் அரை மணி நேர ஊர்தலுக்குப் பிறகு விலகிக் கொண்டேன்.

ரவீந்திர வாய்க்கர் இந்த தொகுதியில் கவுன்சிலர் என்று ஆரம்பித்து படிப் படியாக எம் எல் ஏ வாகி மந்திரியாகி…. மிகவும் பரிச்சயாமனவர் தான்.

வரும் மே 20 அன்று இவர்களில் ஒருவருக்கு ஓட்டு போடுவோம்.

கூடும் கூட்டமெல்லம் ஓட்டாய் மாறுமா?

20240417230833688.jpg

முடிவா? ஜூன் 4 வரை பொறுக்கவேண்டும்.