தொடர்கள்
நேயம்
"எந்த நாயும் நல்ல நாய் தான் மண்ணில் பிறக்கையிலே..." - ஸ்வேதா அப்புதாஸ் .

நாய் வளர்ப்பு என்பது ஒரு பெரிய கலை .20240418004754373.jpg

உலகம் முழுவதும் நாய் வளர்ப்போர் தங்களின் சொந்த குழந்தைகள் போலவே பராமரிப்பது அவைகளுக்கான ஏகப்பட்ட செலவு செய்வது ஆச்சிரியமாக இருக்கும்.

20240418004847370.jpg

கடந்த மாதம் ராட்வீலர் நாய் ஒரு சிறுமியை கடித்து குதறிய சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது .

இது ஒரு பக்கம் இருக்க தெரு நாய்களின் தொல்லை வேறு இதனால் பலர் பயந்து செல்லுவது வழக்கமாக உள்ளது .

ஊட்டி வாசி தற்போது அமெரிக்கா டெக்சஸ் நகரில் வசித்து கொண்டிருக்கும் பொறியாளர் ரோட்ரிக்ஸ் ஆண்டர்சனை தொடர்பு கொண்டு பேசினோம் .

20240418004927993.jpg

ஊட்டியின் அழகுக்கு ஏற்றபடி நாய்கள் வளர்ப்பு என்பது ஒரு கொள்ளை ஆசை என் இளம் வயதில் இருந்து .

குட்டி நாய்களை பார்த்தாலே அவ்வளவு ஆசை என் அப்பா மார்ஷல் சுரேஷ் , அம்மா ஜாய்ஸ் ,தம்பி ராய் நாய் வளர்ப்பு பிரியர்கள் .

20240418005007128.jpg

சென்னையில் மிக வசதியான கலை நுணுக்கமான தாராளமான கேனல் வைத்து இருபத்தி ஏழு நாய்கள் இருந்தன தற்போது ஒன்பது நாய்கள் உள்ளன .

அவை இரண்டு Daschunds, Pugs, Shihtus, Whippet, French building மற்றும் Fox terrier.

இங்கு யு எஸ் யில் Aladkan malamute என் பெட் .

என்னுடைய முதல் வளர்ப்பு நாய் லாபரடர் .அது ஊட்டியில் குட் ஷாபர்ட் பள்ளி நிறுவனர் பி .சி .தாமஸ் எனக்கு கொடுத்தது அதை மறக்கமுடியாது என்று கூறுகிறார் .

ரோட்ரிக்ஸ் அமெரிக்கா சென்றவுடன் இந்திய வளர்ப்பு நாய்களான ராஜபாளையம் , கன்னி , கொம்பை நாய்களை உலகளவில் அறிமுகப்படுத்தின பெருமை இவரை சேரும் .

நாய்களுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு அவைகளை புரிந்து கொண்டு வளர்ப்பதை கற்றுக்கொண்டேன் அது ஒரு பெரிய சாதனை என்கிறார் .

சாதாரணமாக இந்தியாவில் நம் சீதோஷண நிலைமைக்கு ஏற்ப நாய்கள் வளர்க்கப்படுகின்றன அவைகளில் லாப்ரடார் ரீடிவேர் அன்பு அறிவுக்கு பேர்போனது இவை வேட்டைக்கும் ஆபத்தில் காப்பாற்ற உதவுகிறது .

ஜெர்மன் ஷெப்பர்ட் கம்பிரமான அறிவாளிகள் அதனால் போலீஸ் மற்றும் இராணுவத்தில் முக்கிய கமண்டர்கள் .குடும்பத்தை பாதுகாக்கும் ஜீவன்கள் .

20240418005349919.jpg

கோல்டன் ரீடிவேர் ஒரு ஜென்டில் மென் உற்ற நண்பர்கள் .

அபார்ட்மெண்ட் மற்றும் வீடுகளில் வளர்க்கும் செல்ல குழந்தை பொம்பரேனியன் இவை அபார்ட்மெண்ட் நாய்கள் .

குழந்தைகளுக்கு ஏற்ற நாய்கள் பீகிள் குட்டி செல்லங்கள் .

பாக்கெட் டாக்ஸ் ஈசியாக வீட்டில் வளர்க்கும் நாய்கள் மிகவும் குட்டி செல்லங்கள் .

செயின்ட் பெர்னார்ட் பெரிய நாய் குடும்ப பாங்கான நாய் ஆபத்தில் சிக்கும் போது காப்பாற்றும் செல்ல நாய் .பனி பொழிவில் சிக்கும் வீரர்களை தேடி கண்டுபிடித்து நக்கி சூடுஏற்றி தன் கழுத்தில் தொங்கும் ரம் கொடுத்து கூட்டி வரும் உன்னத நாய் வகை .

அப்படியே பேச்சு ஆபத்தான ராட் வீலெர்ஸ் நாய்களை பற்றி திரும்பியது .

20240418005056714.jpg

இவர்கள் சற்று டெம்பரானவர்கள் தான் அதே சமயம் ஆபத்தான நாய்கள் அல்ல வளர்ப்பு தான் காரணம் நல்ல ட்ரைனிங் ஒரு முக்கிய விஷயம் .

மனிதர்களை இந்த வகை நாய்கள் கடிப்பது வருத்தமான ஒன்று அவைகளை ஒழுக்கத்துடன் வளர்த்தால் இப்படிப்பட்ட சோக சம்பவங்கள் நடக்காது .

பொது இடங்களில் பாதுகாப்பாக கூட்டி செல்வது சிட், ஸ்டெ என்று கமன்ட் கொடுத்தால் பணிய கூடிய நாய்களாக இருக்கும் . அவைகளுக்கு நல்ல பயிற்ச்சி கொடுத்தால் ஆபத்துக்கு இடமில்லை .

ராட் வீலர் மூன்று வகை ஜெர்மன் ராட் வீலர் பெஸ்ட் ஒன் என்கிறார் .

ரோமன் மற்றும் அமெரிக்கன் வகை ராட் வீலர்கள் வித்தியாசமானது வளர்க்கும் விதமே வேறு ரோமன் ராட் வீலர்கள் பெரிய சைஸ் சற்று ஆபத்தானது .

"எந்த குழந்தையும் நல்ல குழந்தையும் மண்ணில் பிறக்கையிலே அவை நல்லவனா கெட்டவனா என்பது அன்னை வளர்ப்பினிலே " இது தான் நாய் வளர்ப்புக்கும் பொருத்தும் என்கிறார் ரோட்ரிக்ஸ் .

ஒரு நல்ல தகவல் ராட்வீலர் ஒரு வேலை செய்யும் நாய் .ராட்வீல் என்பது ஜெர்மனியில் உள்ள ஒரு நகரம் . ஆடு மாடுகளை கண்காணிக்கும் ஒரு பாதுகாப்பு நாய் . இந்த நாய்கள் தான் மாட்டு கறியை ஏற்றும் வண்டியை மார்க்கெட்டுக்கு இழுத்து வருமாம் .

அறிவு பூர்வமான நாய்கள் போலீஸ் காவல் தேடுதல் மற்றும் காப்பாத்தும் பணியை செய்யும் நாய் ஒரு மனிதனை கடித்து குதறுவதற்கு காரணம் சரியான வளர்ப்பு இல்லை என்பது தான் .

இந்த நாய்கள் ஒரு சிறந்த பாதுகாவலனும் கூட என்கிறார் கூலாக .

20240418005141814.jpg

என்னுடன் இப்பொழுது இருக்கும் செல்ல குட்டி நாய் பெயர் கோஸ்ட் ஆலாஸ்கன் மேலேமியூட் ஐ லவ் ஹிம் சோ மச் .

கேனல் க்ளெப் ஆப் இண்டியா தான் இந்தியாவின் அங்கீகரிக்க பட்ட நாய்கள் க்ளெப் இதில் ஐம்பது உள்நாட்டு நாய்கள் அங்கீகரிக்க பட்டுள்ளன அவைகளை தான் நான் அமெரிக்காவில் அறிமுகம் செய்தேன் என்கிறார் இந்த இளம் பொறியாளர் .

20240418005214397.jpg

கடந்த மே 10 ஆம் தேதி ஊட்டியில் நடந்த 134 வது நாய் கண்காட்சியில் என் செல்லம் டாலி 8th Daschund National speciality at Ooty பெஸ்ட் ஷோவில் முதல் இடத்தை பெற்றது .

என் மற்ற செல்லம் ஈவா தென் இந்திய கேனல் கிளப் 135 வது ஷோவில் பெஸ்ட் பப்பி என்று வென்றது .

20240418005256668.jpg

இந்த சாதனைக்கு என் ட்ரைநேர்களும் பாதுகாப்பாளர்களும் மிக முக்கிய காரணம் .

இவருடைய இம்மாகுலேட் கேனல் கேனல் கிளப் ஆப் இண்டியா வுடன் இணைந்து செயல்படுகிறது .

இத்தனை வெற்றிக்கும் காரணம் என் செல்லங்களை ட்ரெயின் செய்யும் ஜப்பான் ட்ரைனர் இச்சிரோ இஷிகோவா மற்றும் முக்கிய ட்ரைனர் பாலு பிரியா இவர்களை மறக்க முடியாது என்கிறார் .

20240418005512739.jpg

இப்பொழுது புரிகிறதா நாய்களை முறைப்படி வளர்த்து நல்ல ஊட்டச்சத்து உணவு மெடிக்கல் செக்கப் செய்து பராமரித்து வளர்த்தால் எந்த ஆபத்தும் வராது என்று அழுத்தமாக கூறுகிறார் ரோட்ரிக்ஸ் .