தொடர்கள்
பொது
தொடரும் நாய்க்கடி - ப ஒப்பிலி

20240417201457703.jpg

கடந்த ஐந்தாம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது இரண்டு ராட்வெயிலேர் (Rottweiller) நாய்களுடன் ஒரு பூங்காவிற்குள் நடக்க ஒருவர் வந்தார். அவரது நாய்கள் இரண்டாம் அந்த பூங்காவில் பணிப்புரியும் காவலாளியின் மகளை கடித்து குதறிவிட்டன. ஆபத்தான நிலையில் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த இரண்டு வாரங்களில் சென்னையில் பல இடங்களில் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு யார் காரணம்.

விலங்கு நல ஆர்வலர்கள் மாநில கால் நடைத்துறையினரையே கை காட்டுகின்றனர். காரணம் எட்டு வருடங்களுக்கு முன்பே மத்திய அரசு வெளி நாட்டு நாய்களை வணிக ரீதியாக இனப்பெருக்கம் செய்வதற்கு இறக்குமதி செய்வதை தடை செய்தது. அதனை அமல்படுத்தும் பொறுப்பு மாநில கால்நடை துறையின் பொறுப்பு.

இது பற்றி கால் நடைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் Rottweiller, Terrier, Rhodesian Ridgeback போன்ற நாய் வகைகளை இறக்குமதியை செய்யவும், அவை ஈனும் குட்டிகளை வியாபார ரீதியாக பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டு இருந்தது. அம்மாதிரியான வெளி நாட்டு நாய்களை வளர்த்து குட்டிகளை விற்பவர்கள் மாநிலங்களில் உள்ள கால்நடைத்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இன்னொரு அதிகாரி கூறுகையில் இந்த அரசாணை வெளி வந்த சில மாதங்களில் சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள வெளி நாட்டு நாய் வளர்ப்பவர்கள் கால் நடைத்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்டனர். பதிவு செய்வதற்கான கால அவகாசம் அரசாணை வெளியிட்ட தேதியிலிருந்து ஆறு மாதம் என அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு மாதங்களில் மாநிலம் முழுதும் கிட்டதட்ட 30 நாய் வளர்ப்பவர்கள் பதிவு செய்து கொண்டனர். அதன் பின்பு பதிவுக்கு நாய் வளர்ப்பவர்கள் எவரும் வரவில்லை என்றார் அந்த அதிகாரி.

இம்மாதிரியான வெளி நாட்டு நாய்களை வளர்பவர்களை கண்காணிக்க கால்நடைத்துறை ஒரு குழுவை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அது மாதிரி எதுவும் நடை பெறவில்லை. இரண்டாவதாக பதிவு செய்து கொள்வதன் முக்கியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களிலும் கால்நடை துறை கோட்டை விட்டு விட்டது என்கிறார் அந்த அதிகாரி.

இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலடி தரும் வகையில் மற்றொரு கால் நடைத்துறை அதிகாரி கூறுகையில் இந்த அரசாணை வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால் அதற்கு உரிய எண்ணிக்கையில் கால பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் வழங்க மதிய அரசு மானியம் கொடுத்திருந்தால் அந்த பணிகளை செய்து முடித்திருக்கலாம். அவ்வாறு இல்லாமல் திடீரென ஒரு அரசாணையை வெளியிட்டு அதை அமல்படுத்த கட்டாயப்படுத்தினால் அது இயலாத காரியம் என தனது வாதங்களை வைத்தார் அந்த அதிகாரி.

ஏன் இந்த வகை நாய்களை வணிக ரீதியாக வளர்க்க கூடாது?. பிராணிகள் நல ஆர்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன் கூறுகையில் pedigree breeds என்று சொல்லக்கூடிய வெளிநாட்டு நாய் வகைகளை வளர்ப்பது சற்று ஆபத்தானது தான் . ஏனெனில் அவற்றின் குணம் என்ன என்று நமக்கு தெரியாது. இரண்டாவது வெளிநாட்டு நாய்கள் அதிக அளவில் வாங்கப்பட்டு வளர்க்கப்படுமானால், நமது பாரம்பரிய நாய் இனங்களான கண்ணி, சிப்பிபாறை, கோம்பை, மற்றும் ராஜபாளையம் போன்றவைகள் வாங்குவது அதிக அளவில் குறைந்து விடும். இதனால் பாரம்பரிய நாய் இனங்கள் அழிந்து விடும் நிலைகூட ஏற்படும் என்ற காரணத்தினாலே அந்த அரசாணை வெளியிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் முன்னொரு காலத்தில் அலுங்கு என்றொரு தமிழக நாய் வகை இருந்தது. சரியான முறையில் அது வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தால் அந்த இனம் இன்றும் அழியும் நிலைக்கு சென்றிருக்காது, என்று விளக்கினார் ஷ்ரவன் கிருஷ்ணன்.

என் நண்பன் ஒருவனுடன் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். வாசலில் பெரியதாக நாய் ஒன்று இருந்தது. அவர்கள் எங்களிடம், "சும்மா உள்ளே வாங்க. இவன் ரொம்ப சாது. ஒண்ணுமே செய்ய மாட்டான்." என்றார்கள். நான், தைரியமாக "வா, போகலாம், என்று வாசல் கதவைத் திறந்தேன். அதற்கு என் நண்பன், " இங்க பாரு! நீ போய்க்கோ! என்ன கூப்பிடாதே. என் நேரம், ஏதாவது நடக்கும், அப்புறம் அவங்க, இவன் இது வரைக்கும் யாரையுமே கடிச்சதில்ல. எப்படின்னே தெரியல!" ன்னு சொல்லுவாங்க. என்ன ஆள விடு". என்றான்.
இது முற்றிலும் உண்மை. இயற்கை மாற்றம் மனிதனை பாதிப்பது போல் விலங்குகளையும் பாதிக்கும். எப்போதும் உஷாராக இருப்பது என்றைக்குமே நல்லது.