தொடர்கள்
கதை
திரும்பி வந்த பொக்கிஷம் - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

20240418100456330.jpeg

வீட்டின் பக்கத்தில் இருக்கும் அந்த நூலகத்தில் நுழைந்த போது, அந்த ரென் அண்ட் மார்ட்டின் ஆங்கில அகராதி யைப் பார்த்தது தான் கொண்டு வந்த தனி நோட் புக்கில், குறித்து வைத்திருந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து அதை எழுதிக் கொண்டுருந்தான் அந்தப் பையன்..

இனியும் அந்தப் பையன் பக்கத்தில் ஒக்கார்ந்து இருந்தால், அந்த

டிக்டசனரி பற்றிய நினைவுகள் வந்து, வந்து மனதை இன்னும் வேதனைப்படுத்தும் என்று நினைத்து,.பேசாமல் வெளியே வந்தேன்.

எப்பேர்பட்ட பொக்கிஷம் அது. அதுவும் என் திறமைக்கு அங்கீகரமாகக் கிடைத்த அந்தப் பொருளை தொலைத்து விட்டு, இவ்வளவு வருடம் இருந்துள்ளேனே.?

ஆனாலும் நடந்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை.

1968.எஸ்.எஸ்.எல். சி பரிட்சை தேர்வு.

கீழ தஞ்சை மாவட்ட அளவில் இங்கிலீஷ் பாட தேர்வில் முதல் மார்க் வாங்கியதற்குத் தான், படித்த பள்ளியின் ஹெட்மாஸ்டர் ஶ்ரீனிவாசன் கொடுத்த பரிசு.. பெரிய சைஸ் ரென் அண்ட் மார்டின் டிக்சனரி.

அதைப் பரிசளிக்கும் போது," இது உன் திறமைக்குக் கிடைத்த பரிசு.யாருக்கும் இதைக் கொடுக்காதே. இதன் மூலம் நிறைய ஆங்கில வார்த்தைகளைப் படி; உன் ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள் .இது ஒரு பொக்கிஷம். நினைவில் வைச்சிக்கோ”

திருச்சி புனித வளனர் கல்லூரியில் பியு சி சேர்ந்த போது,ஆங்கிலப் பேராசிரியர் சுந்தரராமன் சாரும். டிக்சனரி முக்கியத்துவத்தை சொல்லி எல்லோரும் கட்டாயம் வைத்து இருக்க வேண்டும். என்று சொன்னபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால் என் வாழ்க்கையில் பொக்கிஷமாக இருந்த அந்த டிக்சனரி ஒரு நாள் என் கையை விட்டு போகும் படியான சூழ்நிலை உருவாகும் என்று கனவிலும் நினைக்க வில்லை..

டிகிரி முடிந்து, மயிலாடுதுறைஅஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நான் டைபிஸ்டாக வேலைக்குச் சேர்ந்த புதிது ..

சில ஃபைலில் உள்ள டிராப்டை பார்க்கும் போது, ஸ்பெல்லிங் மிஸ்டேக், அல்லது சரியான வார்த்தை பிரயோகம் இருக்காது,. இலக்கணப் பிழைகள் இருக்கும், அது மாதிரி சமயத்தில்,நான் பொக்கிஷமாக வைத்திருக்கும்டிக்சனரியை பார்த்து வார்த்தைகளை, கரெக்ட் செய்து, டைப் செய்து திரும்பப் பைல்களை அனுப்புவேன். அவர்களும் நன்றி சொல்லிவிட்டு செல்வார்கள்.

"வந்திருக்கும் டைப்பிஸ்ட் பெரிய அகராதி பிடிச்சவனா இருக்கான்!. இந்த ஆபீஸில் நான் சீனியர் .நேத்து வந்தவன் என் டிராப்ட்டை. திருத்துவது எனக்குப் பிடிக்கல!

“எப்படியாவது அவனை டிரான்ஸ்ஃபர் பண்ண" நீ ஏதாச்சும் செய்” என்று தர்மராஜிடம் சொல்லிக்கொண்டே இருந்தவர் தொழிற்சங்கத்தின் பொருளாளர் பாண்டியன்.என்கிறவிசயம் எனக்குத் தெரியாமல் போனது..

தர்மராஜ்க்கு ஒருவரை பிடிக்காமல் போனால், கோபம் கொள்ள மாட்டார். ஒரு நாள் மிக நைச்சியமாக, குள்ள நரி தந்திரத்தை பயன்படுத்தி, ஒருமையில் கொஞ்சலாக,, “தம்பி இது .ஓங்கிட்ட இருந்தா என்னடா ?எங்கிட்ட இருந்தா என்னடா?" பாத்துட்டு தரேண்டாஎன்று சொல்லி என்டிக்சனரியை, வலுக்கட்டாயமாகஎடுத்துக்கொண்டார்.

நான் எவ்வளவோ கெஞ்சியும் காதில் வாங்கவில்லை.வேலைக்கு வந்த புதுசு. எதிர்த்து கேக்கவும் பயம். மேலும் யூனியன் செக்ரிடரி.

"அவன் பொழைப்பே இப்படித் தான் ;.புதிதாக வேலைக்குச் சேரும் நபர்களிடம், ஏதாவது ஒரு பொருளை அடாவடியாகப் பிடுங்கறது எவ்வளவு கேவலம்ன்னு உணர்ந்தால் இப்படிச் செய்வானா?"

"நீ காத்துருக்கக் கற்றுக்கொள்;"நமக்குச் சொந்தமான பொருள், ஒரு நாள் எப்படியும் நம் கைவசம் வந்து விடும்; ; எல்லாத்துக்கும்ஒரு நேரம் வரும்"

என்று என்னை அலுவலக சீனியர் சமாதானப்படுத்தினார்.

..

அடுத்த வாரமே தந்தி ட்ரைனிங், செலக்ட் ஆகி சென்னையில் ,வேலை . முதலில் சந்தோசம் அடைந்தது யூனியன் பொருளாளர் தான்.

அலுவலக வேலையில் பல மாற்றங்கள் ; அவ்வப்போது பொக்கிஷமாக வைத்து இருந்த பொருள் நம்மை விட்டு போய் விட்டதே! என்கிற ஏக்கம் வரும் . காலப்போக்கில் டிக்சனரி விசயத்தை மறந்து போனேன்.

ஓய்வுக்குப் பின் இப்போது பத்திரிக்கையில் சமூகபிரச்சனை சார்ந்த சிறுகதைகள் எழுதி ஓரளவுக்குப் பிரபலமாகி உள்ளேன்.

காலிங் பெல் அடிக்கவும், திறந்த போது, ஒரு ஆண் , ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார்கள்.

"சாரி சார். ….. தொந்தரவுக்கு மன்னிக்கவும்.நீங்க தானே பிரபல எழுத்தாளர் ஜெயராமன்?.”

“ஒங்க கிட்ட கொஞ்சம் பேசணும்உள்ளே வரலாமா? "

“தாராளமாக…. உள்ளே வாங்க”! குளிர் பானம், கொண்டு வந்து கொடுத்தாள் என் மனைவி.

ஆரம்பக் காலத்தில் மயிலாடுதுறை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டைபிஸ்ட்டாக வேலை பார்த்தீர்களா சார்."

“ஆமாம் நீங்க யாரு? “என் ஆர்வம் தலைகாட்டியது

"சார் …நாங்க மயிலாடுதுறையிலிருந்து வரோம்…. .அங்குத் தபால் இலாகாவில் பணிபுரிந்த தர்மராஜ் போஸ்டல் யூனியன் செகரடரியின் , பையன் நான் . என் பெயர் அரவிந்தன், இது என் மனைவி பூரணி.

“ அடடே எனக்குப் பிடித்த குறிஞ்சி மலர் நாயகன் நாயகி பேரு. ஆமாம்

இப்ப தர்மராஜ் எப்படி இருக்கார்?".

"இறந்து ஒரு மாசம் ஆச்சு சார்."

வருத்தம் தெரிவித்தேன்.ஆனால் உள்ளுக்குள் இந்த மனிதர் தானே என் வாழ்க்கையில் விளையாடி அந்த ஊரை விட்டு வர காரணமானவர் என்றும் நினைத்தேன்.

"சார் !சார் "! என்று கூப்பிடவே சகஜ நிலைக்குத் திரும்பினேன்.

"சாரி அரவிந்தன்….". அது சரி என்ன விசயமான என்னைப் பாக்க வந்து இருக்கிங்கே?”

."எங்க அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, ஓங்களைத் தேடி வந்துருக்கேன் சார்".

.,

"நீங்க சொல்றது புரியலை.அரவிந்தன்.”

“இறந்து போவதற்கு ஒரு வாரம் முன்பு ,”நான் யூனியன் செகரடரி என்கிற பவரை ,

மிஸ்யூஸ் பண்ணி,சில ஸ்டாப்கிட்ட, பொருள்களை, கட்டாயமாகப் பிடுங்கிட்டது பெரிய பாவமன்னு அப்ப தோணலை ஆனா இப்ப தோணுது.."

"அவங்க கிட்ட வலுக்கட்டாயமாகப் பெற பட்ட அந்தப் பொருள்கள். இதோ அலமாரியில் இருக்கு.;அவைகளை நான் இதுவரை யூஸ் பண்ணவும் இல்லை."

“யாரிடமிருந்து என்னன்ன பொருள்கள் வாங்கி உள்ளேன் என்பதை ஒரு பேப்பரில் எழுதி அந்தப் பொருளுடன் சேர்த்து வைத்துள்ளேன்.”

“அந்தப் பொருள்களை, எப்படியாவது திரும்ப அவர்களிடம் ஒப்படைத்து விடு ”

காலம் கடந்து ஞானதோயம் பிறந்து இருக்கு. இந்தப் பொருள்களை அவங்க கிட்ட சேர்த்தா தான், என் ஆத்மா சாந்தி அடையும்”. என் மனசாட்சி கொல்லுது” என்றார்.

அலமாரியில் வைத்திருந்த பொருள்களைப் பார்த்த போது அதில் வாட்ச்,பேனா,மௌத் ஆர்கன், சிகரெட் லைட்டர், கேமரா,டேப் ரெக்கார்டர்.

டிக்சனரி இன்னும் சில பொருள்கள். இருந்தன..

“எப்படியப்பா ?கிட்டத்தட்ட நாற்பது பொருள்கள் இங்கே இருக்கு.எப்படி கண்டுபிடிச்சு? எப்படிகொடுக்கறது?.

முயற்சி செய்தால் எதுவுமே சாத்தியம்; நம்மூர்ல இருக்கிற அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், போய் விபரம் கேட்டால், அவர்கள் கூடிய வரைக்கும் அவர்கள் தற்பொழுது எந்த இடத்தில் இருக்கிறார்கள்? என்று விசாரித்து முகவரி சொல்வார்கள்.

“அப்பா தான் செய்தது தவறு என்று உணர்ந்து விட்டார், அவர் ஆத்மா சாந்தியடைய இந்த வேலையை நிறைவேற்றி வைக்க முடிவு எடுத்தோம். நாங்கள் இருவரும்.”

" மற்றவர்கள் பற்றிய விபரம் கிடைத்ததால், அவரவர் பொருள்களை கொடுத்து

விட்டோம். ஒங்க பொருள் மட்டும் கொடுக்க முடியவில்லை”.

“நீங்கள் ஓய்வு பெற்று 15 வருடம் ஆனதால எங்குவசிக்கிறீர்கள்? என்கிற விபரம் தெரியல.”

“அவர் இறப்பதற்கு முதல் நாள் ஒரு வார பத்திரிக்கையில், ஒங்க கதையையும், போட்டோவும் போட்டிருந்ததை பார்த்த . அப்பா எங்க கிட்ட ஒங்க பேரை உறுதி செஞ்சாரு.,”

அப்பா காரியங்கள் முடிஞ்ச பிறகு, அந்தப் பத்திரிக்கை ஆபிசில ,எல்லா விபரமும் சொல்லி, ஒங்க அட்ரஸ் கேட்டு வந்தோம். சார்.

"இந்தாங்க அப்பா கொடுக்கச் சொன்ன அந்தப் பொருள்."

அந்தப் பார்சல் பிரித்துப் பார்த்ததில் ,அது என்னுடைய பெரிய சைஸ் ரென் அண்ட் மார்டின் இங்கிலீஷ் டிக்சனரி.

அன்று அந்தச் சீனியர் சொன்னது சரி தான்.

"நீ காத்துருக்கக் கற்றுக்கொள்;"நமக்குச் சொந்தமான பொருள், ஒரு நாள் எப்படியும் நம் கைவசம் வந்து விடும்; ; எல்லாத்துக்கும்ஒரு நேரம் வரும்"