தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

நயன்தாரா

சமீபத்தில் திருச்செந்தூர் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு கணவருடன் சென்றார் நயன்தாரா. இரட்டைக் குழந்தைகள் பிறந்ததற்கான நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஆன்மீகப் பயணமாம்இது.

'ஏஸ்'

இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்துக்கு 'ஏஸ்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி ருக்மணி வசந்த் இது தவிர யோகி பாபு பப்லு ஆகியோர் நடிக்கிறார்கள்.

மீனாட்சி சவுத்ரி

20240423194202809.jpg

2018ல் மிஸ் இன்டர்நேஷனல் பட்டம் பெற்றவர் மீனாட்சி சவுத்ரி. தமிழில் விஜய்யுடன் கோட், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம் பரா மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ' லக்கி பாஸ்கர் ' என்று தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தும் மீனாட்சி சவுத்ரியின் அடுத்த இலக்கு தமிழில் அதிக படங்களின் நடிப்பது என்பதுதான் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஐஸ்வர்யா மேனன்

20240423194323206.jpeg

` ஐஸ்வர்யா மேனன் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்ட்டாவில் 3.2 மில்லியன் ஃபாலோயர்ஸ் வைத்துள்ள இவர் சமீபத்தில் கவர்ச்சியாக கடற்கரையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.

விஜய் கடைசி படம்

20240423194808788.jpg

விஜய் கடைசி படத்தை முதலில் தெலுங்கு முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்க இருந்தது. விஜய் அந்த படத்திற்கு நடிக்க கேட்ட சம்பளம் அவர்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே பேசாமல் தன் மேலாளரை வைத்து படத்தை தயாரிக்க யோசித்து வருகிறார் விஜய். அவரது மேலாளர் ஏற்கனவே மாஸ்டர் மற்றும் லியோ படத்தின் லைன் ப்ரொடியூசர் ஆக இருந்தாராம்.

இளமை விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜயை இளமையாக காட்ட ஹாலிவுட் உள்ள ஸ்டுடியோவில் தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. விஜய் மற்றும் வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சலில் முகாமிட்டிருக்கிறார்கள்.

விடாமுயற்சி

நடிகர் அஜித் திரிஷா நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. ஜூன் மாதம் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தொடங்கும் என்கிறார்கள். தற்சமயம் விடாமுயற்சி படத்திற்காக சூப்பரான ஒரு குத்துப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் உருவாக்கி இருக்கிறாராம். அனிருத் இசைக்கு அஜித்தின் நடனத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதன் நடுவே விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை இரண்டையும் லைக்கா நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது.

பிரேக்

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாள் ஹைதராபாத்தில் நடந்தது. இரண்டு நாட்களும் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டன. அங்கே தேர்தல் வந்து விட்டதால் தற்சமயம் பிரேக் விடப்பட்டிருக்கிறது.

தமன்னா

20240424112241870.jpg

அரண்மனை - 4 படத்தில் நடிப்பதற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் நான்கு கோடியாம். ஏற்கனவே ஜெயிலர் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு நடனமாடியதற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் தமன்னா.

நாக சைதன்யா

20240424112049734.jpeg

பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா 3.51 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு புதிய காரை வாங்கி இருக்கிறார். ரேஸ் காரை போல பார்ப்பதற்கு செம ஸ்டைலாக இருக்கும். இந்த சொகுசு காருடன் நாக சைதன்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.