தொடர்கள்
பொது
" ஆபத்தான சுற்றுலா பயணம் " - ஸ்வேதா அப்புதாஸ் .

சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகரிக்க நீலகிரி மாவட்டம் மூச்சு திணறி போய்விட்டது .

20240423233011311.jpg

பெரும்பாலும் ஏப்ரல் மே மாதங்கள் மட்டும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வந்த காலம் போய் தற்போது வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர போக்குவரத்து நெரிசல் அளவுக்கு மீறி போக சூற்று சூழலும் பாதிக்க துவங்கிவிட்டது .

நீலகிரியை ஸ்தம்பித்து கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசலில் உள்ளூர் வாசிகள் மிகவும் பாதிக்க படுகிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றம் நீலகிரி கொடைக்கானலுக்கு இபாஸ் கட்டாயம் என்று ஆணை பிறப்பிக்க .

போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறைக்கப்பட்டது .

20240423233046520.jpg

அனைத்து செக் போஸ்டுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த பட்டது .

இப்படியிருக்க கடந்த 19 ஆம் தேதி குன்னூர் பெட்டட்டி என்ற இடத்தில் ஒரு பிக் அப் ஜீப் வளைவில் திரும்பும் போது பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி வந்து ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது அதனுள் பயணித்த 22 ஆண் பெண் சிறுவர் என்று கொத்தாக பிக் அப்பில் இருந்து விழுந்தனர் .

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்றினார்கள் .

விழுந்த வேகத்தில் பலத்த அடியுடன் அனைவரும் தப்பி பிழைத்தனர் .

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள ஆதிகோபுலு என்ற கிராமத்து வாசிகள் தான் இப்படியொரு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர் .

எப்படியாவது ஊட்டி மலர்கட்சியை பார்த்துவிடவேண்டும் என்று இந்த பிக் அப் ஜீப்பில் கிராமத்து உறவுகளுடன் இந்த தூர ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர் .

20240423233842907.jpg

இவர்களின் வருகை பெங்களூர் வழியாக தான் வந்து மைசூர் பண்டிபூர் செக் போஸ்ட் பின் கக்கநல்லா செக்போஸ்ட் தாண்டி தான் வந்துள்ளனர் .

அதே சமயம் தாளவாடி சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் வழியாக கல்லார் செக்போஸ்ட் கடந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .

எது எப்படியோ நீலகிரி மாவட்டத்தினுள் நுழையும் ஒரு வாகனம் இ பாஸ் இல்லாமல் எப்படி நுழைந்தது . அதுவும் ஒரு பிக் அப் ஜீப்பில் எப்படி 22 பேர் பயணம் செய்தார்கள் இவர்களை எப்படி செக் போஸ்டில் அனுமதித்தார்கள் .

ஏற்கனவே நீலகிரியில் பிக் அப் ஜீப்பில் யாரும் பயணம் செய்ய அனுமதியில்லை , அப்படியிருக்க இந்த வாகனம் செக் போஸ்டை எப்படி கடந்து வந்தது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது .

இது போல இன்னும் இரண்டு ஜீப்புகள் நீலகிரியினுள் நுழைந்துள்ளதாம் .

ஏற்கனவே குடும்பத்துடன் பைக் , ஸ்கூட்டரில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளை மாவட்டத்தினுள் நுழைய அனுமதிக்க கூடாது . டெம்போ ட்ராவலர் வாகனமும் விபத்து ஏற்பட கூடியது அதையும் அனுமதிக்க கூடாது என்று முன்னாள் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா உத்தரவு பிறப்பித்திருந்தார் .

அதை தற்போது பின்பற்றுவதில்லை என்பது ஆபத்தான பயணத்தை தவிர்க்க முடியாமல் போகிறது .

இதனால் தான் நீலகிரியில் ஏகப்பட்ட விபத்துகள் நடந்து சோகத்தை ஏற்படுத்துகிறது .

காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை தங்களின் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் .

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வசூலில் குறிக்கோளாக இல்லாமல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு பயணத்தை கருத்தில் கொண்டால் நல்லது .

விபத்தில் சிக்கின பிக் அப் ஜீப் மிக பெரிய பள்ளத்தில் விழுந்திருந்தால் 22 அப்பாவி உயிர்கள் பறிபோயிருக்கும் .

இப்படிப்பட்ட ஆபத்தான விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் .