நடிகை ரோஜா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மூலம் அரசியலில் பிரவேசித்தார். அவருக்கு, அக்கட்சி நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தது. இதில் நடிகை ரோஜா தோல்வி அடைந்ததும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். அங்கு 2 முறை நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அவருக்கு இம்முறை சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.
இச்சமயங்களில் நகரி தொகுதியில் உள்ள மூத்த நிர்வாகிகளை நடிகை ரோஜா மதிப்பதில்லை. தனது கட்சியினருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனினும், தற்போது நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் நடிகை ரோஜாவுக்கு மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட சீட் கிடைத்தது. அவருக்காக பணியாற்ற கட்சியினர் மறுத்துவிட்டனர். இதனால் ‘என்னை எதிர்க்கும் நிர்வாகிகள் யாரும் என்னுடன் தேர்தல் பிரசாரத்துக்கு வரவேண்டாம். நீங்கள் வராமல் இருந்தாலே, நான் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்’ என்று நடிகை ரோஜா வாய்துடுக்காக கூறியுள்ளார்.
மேலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லாரா லோகேஷ், நடிகர் பவன்கல்யாண் ஆகியோரை நடிகை ரோஜா தரம் தாழ்ந்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தற்போதைய தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா படுதோல்வி அடைந்தார் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரே குதூகலத்துடன் கூறி வருகின்றனர்.
நுணலும் தன் வாயால் கெடும்னு சும்மாவா சொன்னாய்ங்க ??
Leave a comment
Upload