
விஜயின் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகிறது. விஜயின் கடைசி படம் இதுதான்.
விஜய் இருப்பதால் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்த படத்தில் திமுகவை விமர்சித்து நிறைய கருத்துக்களை விஜய் சொல்லி இருப்பார் என்ற எதிர்பார்ப்புடன்...
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை தயாரிப்பதாகவும் பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.
பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட ஒரு கண்காட்சி வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.
சிவகார்த்திகேயன் படத்தில் பெரும்பாலும் காமெடி தான் அதிகமாக இருக்கும். இந்த முறை அந்தப் படத்திலும் அரசியல் நெடி இருக்கும் போல் தெரிகிறது.
பராசக்தி கதை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாக கொண்ட கதை.
கிட்டத்தட்ட இரண்டு படங்களிலுமே எதிரும் புதிருமான அரசியல் கருத்துக்கள் நிறைய இருக்கும் போல் தெரிகிறது.
அதன் எதிரொலி தான் வலைதளத்தில் விஜய் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மோதல் உச்சத்தில் இருக்கிறது.
கலைஞர் வசனம் எழுதி சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி அதே டைட்டில் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதால் திமுக ஆதரவாளர்கள் வலைதளத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் விஜயை வறுத்தெடுத்தும் நிறைய கருத்துக்களை பதிவிடுகிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிச்ச படங்களின் வசனங்களை வைத்தே திமுக தரப்பு விஜயை கலாய்க்கிறது.
சிவகார்த்திகேயன் இதை சரியா தவறா என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.
பெரும்பாலும் எந்த அரசியல் கருத்துக்களும் சொல்லாமல் தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்று இருப்பவர்.
தவிர ஆரம்பத்தில் விஜய்க்கு நெருக்கமாக இருந்தவர்.
ஒரு விழாவில் சிவகார்த்திகேயனை குழந்தைகளுக்கு நிறைய பிடிக்கிறது அவர் படங்களை விரும்பி ரசிக்கிறார்கள் என்று சிவகார்த்திகேயனை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார் விஜய்.
விஜய் ஆதரவாளர்கள் என்ற பெயரில் சிலர் சிவகார்த்திகேயனையும் அவரது மனைவியையும் சிலர் மார்பிங் செய்து தவறான வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் குடும்பத்தை குறி வைத்து தாக்குதல் போல் இந்த வீடியோ இருக்கிறது.
அரண்டு போன சிவகார்த்திகேயன் இதை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பிய நிலையில்....
இதுவும் நமக்கு நன்மையே இதனால் நமக்கு ஏகப்பட்ட விளம்பரம் கிடைக்கும் இதன் மூலம் திரையுலகத்தில் நாம் சுலபமாக விஜய் இடத்தை நிரப்பி விடலாம்.
இப்போதைக்கு இது பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் நீங்கள் மௌனமாக இருங்கள் சினிமா உலகில் காலியாக இருக்கும் விஜய் இடத்தை நாம் பிடித்து விடலாம் என்று அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் யோசனை இப்படி தான் 14-ஆம் தேதி வெளியாக இருந்த பராசக்தி படத்தை பத்தாம் தேதி முன்கூட்டியே ரிலீஸ் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.
இதன் நடுவே ஜனநாயகன் படம் நமது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்தப் படத்தின் இசை விழா வைத்தால் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும் மலேசியாவில் வைத்துக்கொண்டார் விஜய்.
வெளிநாட்டில் வைத்திருப்பதால் இந்த நிகழ்ச்சி இந்தியாவில் பெரிய பெரிய அளவில் மக்களிடம் போய் சேருமா என்ற கவலை தற்சமயம் விஜயைத் தொற்றிக் கொண்டிருக்கிறது.
இப்போது புதிதாக ஒரு கவலை விஜய்க்கு வரத் தொடங்கி இருக்கிறது.
மலேசியாவில் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது மத ரீதியான சர்ச்சை கருத்துக்கள் எதுவும் கூடாது இது தமிழ்நாட்டில் விதிப்பது போல் மலேசியா அரசாங்கமும் அனுமதி தரும் போது நிறைய நிபந்தனைகளை சொல்லியிருக்கிறதாம்.
திமுகவுக்கு சவால் விடுகிற பஞ்ச் டயலாக் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தார் விஜய் பாவம் இப்போது அதை எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a comment
Upload