நம்மூர் விமானங்களில் சில சமயம் எரிந்து விழும் விமான பணியாளர்களை சந்தித்திருக்கிறோம்.
இதற்கு பல பயணிகள் கூட காரணமாக இருக்கலாம் என்றாலும், பொதுவாக நம்மூர் விமான பணியாளர்களுக்கும் பொறுமை கம்மி தான்.
இதற்கிடையே சமீபத்தில் சிங்கப்பூர் விமான நிறுவனம் தம்முடைய பணியாளர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை அறிவித்திருக்கிறது.

லிப்பி லிம்
கழிப்பறையருகே ஒரு வயதான பெண்மணி பரிதவித்துக் கொண்டிருந்திருக்கிறார். லிப்பி லிம் அருகே வந்து விசாரித்ததில் தன்னுடைய உடையிலேயே அந்த வயதான பெண்மணி பாத்ரூம் அவசரமாக வந்து விட்டாதாக சொல்லியிருக்கிறார்.
உடனடியாக யாரிடமும் சொல்லாமல் லிப்பி லிம் அவருக்கு உதவி செய்து தன்னுடைய மாற்று உடையை அணிவித்து அவரது சுய மரியாதை கெடாமல் பார்த்துக் கொண்டார். இது போன்ற சேவைகள் தான் அவர்களை உயரத்தில் தூக்கி வைக்கிறது.
அவர் கோவிட் சமயத்தில் டிமெண்ஷியா நோயாளிகளுக்கு உதவி செய்து அனுபவம் பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அது போலவே தான்

பிரையல் லோ. ஷாஃபி ஷிராஜுதீன்.
இந்த இருவரும் இது போலவே வீல்சேரில் இந்தோனேசியாவிலிருந்து வந்த ஒரு பயணி, சேரிலேயே விசர்ஜனம் செய்து விட அதை பார்த்து விட்டு அவரை தனியாக பிசினஸ் கிளாஸ் லவுஞ்சுக்கு கூட்டிச் சென்று சுத்தப்படுத்தி புதிய உடை அணிவித்து அவரை லாஸ் ஏஞ்சல்ஸ் விமானத்திற்கு மாற்றி விட்டனர்.
அவர் மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டே இருந்தாராம்.
அது மட்டுமல்ல அந்த பயணிகள் முகத்தில் தோன்றிய புன்னகை தான் எங்களுக்கு உத்வேகம் என்கிறார்கள் இந்த விமான பணியாளர்கள்.
எனக்கு தெரிந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆசாமிகள் ஒரு எக்ஸ்ட்ரா மைல் செல்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

Leave a comment
Upload