தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

கீர்த்தி சுரேஷ்

20251124205230611.jpg

தோழியின் திருமண நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் போட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது.அவருடன் நானியின் மனைவி அஞ்சனாவும் சேர்ந்து கொள்ள ஆட்டம் களை கட்டியதாம்

சிவகார்த்திகேயன்

20251126190657130.jpeg

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஹவுஸ் மேட்ஸ் என எல்லா படங்களிலும் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தார். இப்போ இன்னொரு அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு தந்திருக்கிறார் இந்த விவரம் சீக்கிரம் வீடியோவாக வருமாம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

20251124215426212.jpg

கன்னட படம் மூலம் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது மார்பில் பச்சை குத்திய படத்தை வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகை.

கில்லி

2025112420544289.jpg

இப்போது ரீ ரிலீஸ்க்கு மவுஸ் ஜாஸ்தி தான். படையப்பாவுக்கு ஏகப்பட்ட பில்டப் தந்து ரீ ரிலீஸ் செய்தார்கள் முதல் நாள் படையப்பா வசூல் 5 கோடி தான். முதல் நாள் கில்லி பட வசூல் 10 கோடி அள்ளியது.

மோதல்

20251124205616564.jpg

ஜனநாயகன் ஒன்பதாம் தேதி ரிலீஸ். பராசக்தி 10-ஆம் தேதி ரிலீஸ். முதலில் 14 ஆம் தேதி பராசக்தி ரிலீஸ் என்று இருந்தது. இப்போது போட்டி என்று வந்து விட்டதால் தேதியை மாற்றி விட்டார்கள். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மோதலுக்கு வாங்க என்று கில்லி ரசிகர்களுக்கு சவால் விடுகிறார்கள்.

சமந்தா

20251124211352686.jpg

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும் குழந்தை பெற்றுக் கொள்ள நயன்தாராவை போல் வாடகை தாய் தேடிக் கொண்டிருக்கிறார்.

காயாடு லோஹர்

20251124210733224.jpg

டிராகன் தமிழ் படம் வெற்றிக்கு பிறகு காயாடு லோஹருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாம் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என்பது போல் வரவே சில படங்களை தவிர்த்து இருக்கிறார் நடிகை.

துஷாரா விஜயன்

20251124205929310.jpg

கோடு போட்டு நடிக்கும் நடிகை என்று சொல்லிக் கொண்டிருந்த நடிகை துஷாரா விஜயன் இனிய பக்கா கமர்ஷியல் நடிகையாக நடிக்க தயார் என்று சொல்லி இருக்கிறார்.

சாய் பல்லவி

20251124215520485.jpg

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷுடன் இரண்டாவதாக முறையாக இணையஇருக்கிறார் சாய் பல்லவி. இது தவிர எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் எம் எஸ் சுப்புலட்சுமி வேடத்தில் சாய் பல்லவி நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். .

ராதிகா ஆப்தே

20251124212437180.jpg

ஆரம்பத்தில் தென்னிந்திய படங்களில் நடிக்கும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் மோசமானது. அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆபாச பேச்சு இதனால் நான் அழுது இருக்கிறேன். துணை இயக்குனர்கள் மார்பில் கூடுதலாக பேட் வைத்துக் கொள்ள சொல்லி வற்புறுத்துவார்கள். நான் முடியாது என்று மறுத்து இருக்கிறேன் என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. ஏற்கனவே இந்தியில் செல்வாக்குள்ள நபர்களின் நடத்தை பிடிக்காததால் தான் இந்திப் படங்களில் இருந்து வெளியேறினேன் என்கிறார் நடிகை.

சாரா அர்ஜுன்

20251124211814228.jpg

20251124211707584.jpg

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்த துரந்தர் படத்தின் வெற்றி விழாவில் 71 வயது நடிகர் ராகேஷ் பேடி என்பவர் முத்தம் கொடுத்த வீடியோ சர்ச்சையாகி இருக்கிறது. ஆனால் நடிகர் நான் ஒரு தகப்பனாக முத்தம் கொடுத்தால் தவறா என்கிறார்.