தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20251125132815667.jpg

பொங்கலுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்.

அப்புறம் அதிகமா கடன் வாங்குற மாநிலம் தமிழ்நாடுன்னு சொல்வீங்க தெரியுமே ?

விஜய் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது -கம்யூனிஸ்ட் கட்சி கருத்து.

ஏங்க ஏற்கனவே பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வந்தவரு இது கூட உங்களுக்கு தெரியல ?

திமுக தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் - கனிமொழி தலைமையில் நடந்தது.

அதெல்லாம் சரி எத்தனை இலவச திட்டம் அதை சொல்லுங்க !!

60 அரசுப் பள்ளிகளில் 392 புதிய வகுப்பறைகள்- முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அந்தப் பள்ளிகளில் முதலில் கழிப்பறை இருக்கா என்று முதலில் பாருங்க !!

தகுதியான வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை தமிழிசை சௌந்தரராஜன் தகவல்.

தேர்தல் ஆணையர் இவர் காதில் மட்டும் ரகசியமாக சொல்லி இருப்பாரா?

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 19-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல், உப்பு துவக்க முடியாமல் போலீஸ் திணறல்.

இன்னும் ஆறு வாட்டி மிரட்டினால் வெள்ளி விழா கொண்டாடிட்டா போச்சு !!

100 நாள் வேலை புதிய சட்டத்தை திரும்ப பெற வைப்போம் முதல்வர் ஸ்டாலின் உறுதி.

அந்த நீட் தேர்வு ரத்து மாதிரி தானே தலைவரே ?

ராமதாஸ் தலைமையில் டிசம்பர் 29-இல் பாமக செயற்குழு பொதுக்குழு கூட்டம்.

மருத்துவர் ஐயா மாச மாசம் பொதுக்குழு கூட்டறாரு வித்தியாசமாஇருக்கு !!

தமிழகத்தில் காவல்துறையினர் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கிறார்கள் என்று ஓய்வு பெற்ற ஐஜி மாணிக்கவேல் குற்றச்சாட்டு.

அதனாலதான் உங்களுக்கு ஜாமீன் கிடைச்சுது !!

பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொன்னீங்க இப்போ உங்க கட்சியிலே அது இல்ல போல தெரியுது !!

மதுரையை சனாதன மையமாக சிலர் மாற்றப் பார்க்கிறார்கள் -தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு.

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை !!

பாஜக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி !!

அப்ப தமிழக வெற்றிக் கழக தலைவர் உங்களை நல்லவர் என்று வேற சொன்னாரே !!

திமுக கூட்டணியில் போட்டியிட 16 தொகுதிகள் கேட்டுள்ளோம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தகவல்.

கேட்கிறது என்று ஆரம்பிச்சாச்சு 234-ம் கேட்க வேண்டியது தானே !!

எனது வெற்றிக்குப் பின்னால் என் மனைவி முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

கோயில் கோயிலா உங்களுக்காக அவங்க தானே பிரார்த்தனை செய்கிறார்

எச் ராஜாவின் குரலாக ஒலிக்கிறார் விஜய் தொல். திருமாவளவன்

நீங்க யாரோட குரல்ன்னு உங்க மைண்ட் வாய்ஸ் உரக்க சொல்லுது !!