தொடர்கள்
கவர் ஸ்டோரி
மீண்டும் நிர்மலா !! மிடில் கிளாஸ் தாங்குமா ?? - ஜாசன்

20240515063448281.jpeg
மோடி பிரதமர் என்று உறுதியான பிறகு கூட இந்த முறை நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தொடர மாட்டார் என்ற ஒரு பேச்சு இருந்தது.

தவிர வரி சம்பந்தமான அறிவிப்புகள் ஜி எஸ் டி ,வங்கி வட்டி விகிதம் போன்றவற்றில் நிர்மலா சீதாராமன் அணுகுமுறை கொஞ்சம் கடுமையாக இருந்தது. நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர். இந்த தேர்தலில் பாஜக எதிர்பார்த்த எண்ணிக்கை வெற்றி பெறாததற்கு காரணம் நிர்மலா சீதாராமன் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.

நடுத்தர மக்கள் அவரால் மிகவும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

விலைவாசி உயர்வுக்கு அவர் சொல்லும் காரணம் எல்லாம் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்தது. உதாரணமாக வெங்காயம் விலை உயர்வு பற்றிய ஒரு கேள்விக்கு நான் வெங்காயம் சாப்பிடுவது இல்லை என்று பதில் சொன்னார்.கேள்வி வெங்காயம் விலை உயர்வு பற்றியது. இவர் சாப்பிட்டால் என்ன சாப்பிடாவிட்டால் என்ன நிதியமைச்சர் என்ற முறையில் வெங்காயம் விலை உயர்வுக்கான காரணத்தை எல்லோரும் ஏற்பது போல் ஒரு பதிலை சொல்லி இருக்கலாம். ஆனால் நிர்மலா அப்படி சொல்லவில்லை.
நடுத்தர மக்களின் அன்றாட பயன்பாட்டில் வெங்காயம் தவிர்க்க முடியாதது. அதன் விலை 100 ரூபாய் வரை உயரவே இந்த கேள்வி எழுந்தது.

20240515062938565.jpeg

மேலும் வெங்காயம் அவ்வப்போது விலை ஏறி வருவது எல்லா அரசுகள் காலத்திலும் நடப்பது தான். ஆனால் அதை தடுப்பது தானே மோடியின் திறமை ??? செய்ய வேண்டாமோ ??

உண்மையில் வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் நமது நாட்டிலிருந்து வெங்காயம் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததால் வெங்காய விவசாயிகள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தவே இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டது இதுதான் எதார்த்த உண்மை. அதை விட்டுவிட்டு நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன் என்று அவர் பேசியது மத்திய தர மக்களை எரிச்சல் படுத்தியது. அதன் பிறகு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்ததை தொடர்ந்து வெங்காயம் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.

அதைப் போலவே ஒரு வீடியோ வைரலானது. சொத்து வாங்கும் போதும் விற்கும் போதும் ஏகப்பட்ட வரிகளை கொடுக்கிறோம் நீங்கள் அப்படி பார்த்தால் என்னுடைய வியாபாரத்தில் ஸ்லீப்பிங் பார்ட்னர் என்ன சொல்கிறீர்கள் இந்த வரியைப் பற்றி என்ற கேள்விக்கு, அதான் ஸ்லீப்பிங் பார்ட்னராச்சே எப்படி தெரியும் என்று சமாளித்து எழுந்து போய் விட்டார்.

நிர்மலா சீதாராமனுக்கே தமக்கு மீண்டும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் அதுவும் குறிப்பாக நிதியமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எல்லாம் முதலில் இல்லாமல் இருந்தது. அதனால் தான் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்தினம் அதாவது ஜூன் மூன்றாம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு வந்து தனது ஊழியர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார்.


நிதியமைச்சர் அலுவலகத்தில் 45 ஐஏஎஸ் அதிகாரிகள் ஐந்து செயலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு விருந்து தரும்போது நிதியமைச்சர் அமைச்சர் என்ற முறையில் இதுதான் என்னுடைய கடைசி நாள்.


மீண்டும் நான் அமைச்சராக வருவேனா என்பது தெரியாது வராமலும் போகக் கூடும் என்று சொல்லி எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


அப்போது நிதித்துறை செயலாளர் சோமநாதன் தமிழர். அவர் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் மீண்டும் அமைச்சர் ஆவீர்கள் அதுவும் நிதியமைச்சர் ஆவீர்கள் என்றார்.

அப்போது மெல்ல சிரித்தபடியே அதை பிரதமர் தானே முடிவு செய்ய வேண்டும் என்று பதில் சொல்லிவிட்டு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன். ஆனால் அமைச்சரவை பட்டியலில் நிர்மலா சீதாராமன் பெயர் இருந்தது. இலாக ஒதுக்கீட்டில் அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்தது.

20240515062849154.jpeg

நிதித்துறை அமைச்சர் பதவி என்பது சுலபத்தில் எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது.
வரி, கடன், நிதி ஒதுக்கீடு எல்லாமே நிதி அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே எல்லோர் கோரிக்கையும் உடனே பரிசீலனை செய்து முடிவெல்லாம் சொல்ல முடியாது. அதற்கான நிதி ஆதாரத்தை முதலில் அவர்கள் ஆராய வேண்டும்.


மத்திய அரசிடம் எதற்கெடுத்தாலும் மாநில அரசு நிதி உதவி கேட்டு கோரிக்கை வைக்கிறது.
மத்திய நிதியமைச்சராக துணை பிரதமர் பதவியில் இருந்த மொரார்ஜி தேசாய் மாநிலங்களுக்கு வழங்கும் அறிவுரை எப்போதும் இப்படித்தான் இருக்கும்.


மத்திய அரசு நிதி உதவி என்பது நீண்ட கால திட்டங்களுக்கான செலவு. வறட்சிப்புயல் போன்றவற்றுக்கான செலவுகளை உங்கள் வருமானத்தில் இருந்து தான் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிடுவார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கும் அவர் பதில் இதுவாகத்தான் இருந்தது.

ஆனால் போகப் போக மத்திய அரசு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் ஒரு மாதிரியும் ஆளுங்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாக நிதிப் பகிர்வு இருந்தது அதனால்தான் மத்திய அரசு விமர்சனத்திற்கு ஆளானது

இப்போது கூட நிதியமைச்சர் சமாளிக்க வேண்டிய பணிகள் ஏராளம்.

மத்திய தர மக்கள் எதிர்பார்ப்பு வீட்டுக் கடனுக்கான வட்டி குறைய வேண்டும் என்பதுதான். வீட்டு கடன் அதிகரிக்க அதிகரிக்க மத்திய மாநிலங்களுக்கான வருமானம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.


வீடு கட்ட வேண்டிய கட்டுமான பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் பயன்பாடு அதிகரிக்கும். இதன் மூலம் பணப்புழக்கம் கூடுதலாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது இது தவிர நேரடியாக அல்லது மறைமுகமாக வரிகள் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்கிறார்கள்


வீட்டுக் கடன் வாகன கடன் வாங்குபவர்கள் எப்போதும் நிதிநிலை அறிக்கையின் போது கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்ப்புடன் நிதிநிலை அறிக்கையை கூர்ந்து கவனிப்பார்கள். ஆனால் பெரும்பாலும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. இது நடுத்தர மக்களுக்கு கவலை தரக்கூடிய ஒரு விஷயம். இது பற்றியெல்லாம் நிர்மலா சீதாராமன் யோசிப்பதில்லை என்பதுதான் அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.


ரியல் எஸ்டேட் துறையினர் ஒரு புள்ளி வரும் சொல்கிறார்கள் ஏழு முக்கிய நகரங்களில் விற்கப்படாத வீடுகளின் இருப்பு 2019 முதல் 2024 வரை 24 சதவீதம் உயர்ந்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
இப்படி கட்டி முடிக்கப்பட்டு வாங்கப்படாத வீடுகளால் ரியல் எஸ்டேட் தொழிலில் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் வட்டி விகிதம் தான் என்று பலமுறை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.


இதேபோல் விலைவாசி அரிசி, பருப்பு ,ரவை மற்றும் எண்ணெய் பொருட்கள் மாதந்தோறும் விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இவையெல்லாம் நடுத்தர மக்களை நேரடி தாக்குதலுக்கு ஆளாக்குகிறது.
இதற்கும் நிர்மலா சீதாராமனிடம் உரிய பதில் இல்லை.


உதாரணமாக துவரம் பருப்பு தற்சமயம் விலை 190 ரூபாய். நியாய விலை கடையில் 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் சில சமயம் கிடைக்காது.


கடந்த இரண்டு மாதங்களாக தமிழக நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

சந்தை விலையில் 160 ரூபாய்க்கு வாங்கி 30 ரூபாய்க்கு விற்க தமிழக அரசின் நிதி ஆதாரம் அனுமதிப்பதில்லை. ஆனால் இதைக் கூட மத்திய மாநில அரசுகள் தெளிவாக சொல்வதில்லை.
நிதி அமைச்சர் குடும்பத் தலைவி என்ற முறையில் உளுத்தம் பருப்பு விலை எவ்வளவு மிளகாய் விலை எவ்வளவு அரிசி விலை எவ்வளவு என்று அவரது வீட்டில் விசாரித்தாலே அவரால் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும்.


ஆனால் பொருளாதார வளர்ச்சி, ரிசர்வ் வங்கி அறிக்கை, ஜி எஸ் டி ,என்று புரியாத விஷயங்களை சொல்லி ஏதோ சாதித்தது போல் பேசுகிறார்கள். நடுத்தர மக்களை பொறுத்தவரை கடன் வாங்காமல் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட்டு தூங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. இதை நிதியமைச்சர் இந்த நிதியாண்டிலாவது புரிந்து கொண்டு நிதி அறிக்கை தாக்கல் செய்யட்டும்.

அப்பிராணி மிடில் கிளாஸ் பற்றி யோசித்து வரும் பட்ஜெட் இருக்கட்டும்.

20240515072918367.jpg

நிதியமைச்சகத்திற்கு சம்பந்தமில்லாத விஷயமாக கூட இருக்கலாம். நாடு முழுவதும் டோல் கேட் கொள்ளையை நிறுத்தினால் கூட பொதுமக்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அதான் சாலை வரி வாங்குகிறார்களே... அப்புறமும் எதற்கு அநியாய டோல் வசூல்.

என்ன செய்வாரோ தெரியாது. இந்த முறை பொதுமக்களின் வரிச் சுமையை குறைக்கா விட்டா பாஜக அரசுக்கு வேறு எதிரி யாரும் தேவையில்லை.

நிதியமைச்சர் நிஜவாழ்க்கைக்கு வந்து வரி விதிப்பினை குறைத்து மக்களின் துயர் துடைப்பாரா என்பது தான் ஒவ்வொரு மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு.