தொடர்கள்
அரசியல்
உதிரும் இரட்டை இலை?  -விகடகவியார்

2024051506495290.jpeg

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி தான்நடக்கிறது. திமுக அதிமுக இரண்டு கட்சியும் மாறி மாறி ஆட்சியில் அமர்கிறார்கள். திமுக தலைவர்களே அதிமுக எங்கள் பங்காளி கட்சி என்றுதான் குறிப்பிடுவார்கள். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சி எல்லாம் வராது திமுக அல்லது அதிமுக ஆட்சி தான் வரும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் .

அதிமுகவை பொறுத்தவரை அது சந்தித்த சோதனைகள் ஏராளம். குறிப்பாகஎம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்ததுஇரட்டை இலை முடக்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் ஜெயலலிதாவின்தலைமையைத்தான் விரும்பினார்கள் அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேவல்சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணியினர் 24 பேர் வெற்றி பெற்றார்கள். ஜானகிஅணி சார்பில் போட்டியிட்ட ஜானகிராமச்சந்திரன் உட்பட அனைவரும் தோல்வியைதழுவினார்கள். அதன் பிறகு ஜானகிராமச்சந்திரன் அரசியலை விட்டு விலகினார். அதிமுகஒன்றிணைந்தது இரட்டை இலை சின்னம் மீண்டும் அதிமுகவுக்கு கிடைத்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் இதே பிரச்சனை இருந்தது ஆனால் சசிகலாஇந்த பிரச்சனையை சாதுரியமாக சமாளித்தார் என்பது உண்மை. ஆனால் அவர் சிறைக்குசென்றதும் காட்சிகள் மாறின. சசிகலாவை எதிர்த்து தனியாக பிரிந்த ஓ.பன்னீர்செல்வம்தரப்பு எடப்பாடி உடன் இணைந்தது. டிடிவி தினகரன் தனி கட்சி கண்டார்.

அதேசமயம் எடப்பாடி ஓபிஎஸ் இணைப்பில் பாரதிய ஜனதா தலையீடு இருந்தது. எடப்பாடி முதல்வராக இருந்தாலும் அப்போது பாஜகவின் தலையாட்டிபொம்மையாகத்தான் இருந்தார். துணை முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பிஅனுப்பப்பட்டார் ஓபிஎஸ்.

அதன் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான்அதிமுக வெற்றி பெற்றது. அதேசமயம் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப்பெற்றாலும் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெருமளவுக்கு கணிசமான இடங்களில்வெற்றி பெற்றிருந்தது. பல இடங்களில் அதன் வெற்றி வாய்ப்பு ஆயிரம் வாக்குகள் 2000வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார்கள் அதிமுகவினர் .

ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டதுஎடப்பாடிக்கு. எனவே ஒற்றைத் தலைமை என்ற கோஷத்தை மாவட்டச் செயலாளர்கள்மூலம் ஒலிக்கச் செய்தார் எடப்பாடி. ஆனால் இதை ஓபிஎஸ் ஏற்கவில்லை. இதற்கானபொதுக்குழுவில் இந்த பொதுக்குழு செல்லாது என்று சொல்லி வெளிநடப்பு செய்தார்ஓபிஎஸ். அதன் பிறகு இந்த பொதுக்குழு செல்லாது என்று கீழமை நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என்று ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நடத்தினார் ஓபிஎஸ். ஆனால் நீதிமன்றங்கள் பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள்எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த செல்லும் என்று தீர்ப்பளித்தார்கள். அதன் பிறகு தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணுகினார். தேர்தல் ஆணையமும் எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

அதன் பிறகு எடப்பாடி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தபோது ஓபிஎஸ் பாஜகவுக்கு நெருக்கமானார். அந்த அணியில் தினகரனும் இணைந்தார். இருவரும் சேர்ந்து இரட்டை இலையை முடக்கச் சொல்லி பாஜகவுக்கு அழுத்தம்தந்தார்கள். ஆனால் பாஜக அதை ஏற்கவில்லை. இது தேவையில்லாத சர்ச்சையைஏற்படுத்தும் என்று மறுத்து விட்டார்கள். பாராளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, ஓபிஎஸ்உள்ளிட்ட உதிரிக்கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டனர் அதிமுக தேமுதிக கூட்டணிஅமைத்து போட்டி போட்டது. பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை போட்டிகடுமையாக இருந்தது. அண்ணாமலை கூட ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அதிமுக என்றஒரு கட்சி இருக்காது. தினகரனிடம் அந்த கட்சி ஒப்படைக்கப்படும் என்றெல்லாம்பேசினார்.

ஆனால் ஜூன 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு 40க்கு 40 என்றவெற்றியை மக்கள் தந்தனர். அதிமுக பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 10 இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடத்திற்குவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னாள் அதிமுகஅமைச்சர் வேலுமணி இருவரும் பாஜக அதிமுக கூட்டணி இருந்திருந்தால் திமுக இந்தஅளவுக்கு இடங்களை வெற்றி பெற்று இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்கள்.

யாரெல்லாம் தமிழ்நாட்டில் பாஜக உள்ள வந்துரும் என்று கவலைப் பட்டார்களோ, பாஜக உள்ள வந்துவிட்டது என்பது தெரிய வருகிறது.

தற்சமயம் எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவிக்கு எந்தஆபத்தும் இல்லை. மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியின்தொடர்பு எல்லையில் இருக்கிறார்கள். அதிமுக என்ற மாபெரும் கட்சி இரட்டை இலைசின்னம் இரண்டும் ஆளுமை இல்லாத ஒரு தலைவரின் கைகளில் தற்சமயம் இருக்கிறது என்பதும் உண்மை.

அடுத்த தேர்தலிலும் இதே நிலை தொடர்ந்தால் எம்.ஜி.ஆர். துவங்கி கட்டிக் காத்த இரட்டை இலை உதிரும் என்றே தெரிகிறது....

20240515073112617.jpg