தொடர்கள்
கவர் ஸ்டோரி
சென்னையில் ராஜாவின் இசை மழை - அருண் ஹாங்காங்

20240620093432252.jpeg

2024062009351838.jpeg

கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடந்த இசைஞானி இளையராஜா அவர்களின் இசை கச்சேரி லைவ் ப்ரோக்ராம் அன்று விடியற்காலை சென்னை வந்து இறங்கினேன். இந்த நிகழ்ச்சி அன்று மாலை நடைபெறுகிறது என்று சற்று முன்னால் தான் தெரிந்து கொண்டேன். இது நந்தனம் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிக்கெட் வாங்கும் முயற்சியில் முனைப்புடன் இருந்தேன். இது பல வருட கனவு என்னும் சொல்லலாம். ராஜா சார் கச்சேரி பல இடங்களிலும் பல நாடுகளிலும் நடைபெறுகிறது. ஹாங்காங்கில் நடத்த அந்த அளவுக்கு ரசிகர்களும் இல்லை, பண வசதியும் இல்லை ஆகையால் அங்கு இது வரை நடைபெறவில்லை

​​ராஜா சார் இசையமைத்த பாடல்களை கேட்டு கேட்டு இந்த ரத்தத்தில் ஊறிப்போன பாடல்களை நேரடியாகவே பார்ப்பது அனுபவமானது ஒரு உணர்ச்சிவசமானது. இந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஆயிரம் ரூபாய் டிக்கெட் முதல் லட்ச ரூபாய் டிக்கெட் வரை இருக்கிறது. . இந்த நிகழ்ச்சியின் டைட்டில்ஸ் ஸ்பான்சர் ஒரு கோடியாகவும் இது போக கோ பிராண்டட் கோ ஆங்கர் என்று ஏகப்பட்ட ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் மோஸ்ட் விஐபி டிக்கெட் ஒரு லட்சம் முதல் வி வி ஐ பி ஐம்பதாயிரமும்,விஐபி 25 ஆயிரம், அதற்கு கீழ் பத்தாயிரம் ஐந்தாயிரம் மூவாயிரம் ஆயிரம் என்று டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

​டைட்டில் ஸ்பான்சர் ஒரு 1.5கோடியாகவும் டைட்டில் ஸ்பான்சர் பை என்பது 75 லட்சமும், போ ஸ்பான்சர் பை என்பது 50லட்சமும், கோ ஸ்பான்ஸர் 25 லட்சமும், ஆர்கனைசைஸ் ஸ்பான்சர் 10 லட்சமும் இந்த நிகழ்ச்சியோட எக்னாமிக்ஸ்.

நிகழ்ச்சி வந்து மாலை சரியாக 6:30 மணிக்கு என்று சொன்னார்கள். நானும் என் மனைவியும் 50 ஆயிரம் ரூபாய் டிக்கெட்டில் சென்றோம். ஆனால் நண்பர் 50,000 டிக்கெட் எடுத்தாலும் சீட் முன்பதிவு கிடையாது. ஆகையால் நீங்கள் முன்னதாகவே வரவேண்டும் இன்று நண்பர் கூறினார். ஆகவே நானும் என் மனைவியும் ஒரு நாலரை மணிக்கெல்லாம் கிளம்பி ஐந்து முப்பது மணிக்கு நான் நந்தனம் கலைக் கல்லூரிக்கு வந்து விட்டேன்.

2024062009434409.jpeg

(அருண்-கலை தம்பதி. ஹாங்காங் மற்றும் மகாவ் நகரத்தில் உட்லண்ட்ஸ் உணவகம் மற்றும் பல வியாபாரங்களை நடத்தி வருகின்றனர். ராஜாவின் முரட்டு பக்தர்களில் ஒருவர். அவரது பல நாள் கனவு நனவானதில் மனிதர் ஏக குஷி)

​இதில் மிகவும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் நிகழ்ச்சி நடைபெறும் நந்தனம் கலைக் கல்லூரி மைதானத்திற்கு மூன்று நான்கு வாசல்கள் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்டமைப்பு செய்ய நமது தமிழ்நாடு காவல்துறையினர் மிகவும் சிறப்பாக ஈடுபட்டிருந்தனர். ஒரு வாசல் வழியாக நான்கு சக்கர வாகனங்களும், ஒரு வாசல் வழியாக இருசக்கர வாகனங்களும், ஒரு வாசல் வழியாக விஐபிகள் வந்து இறங்கவும் பின்பு வாகனங்கள் அங்கிருந்து செல்லவும் மிகவும் சிறப்பாக பணியாற்றி இருந்தனர். இதில் நாங்கள் மத்தியில் இறங்கி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நடந்தே சென்றோம்.

​ஒரு வழியாக நிகழ்ச்சி நடக்கும் அந்தப் பிரமாண்ட மேடைக்கு ஆறாவது வரிசையில் ஒரு அருமையான இடத்தில் சீட்டு கிடைக்கப்பெற்று அமர்ந்தோம். ஆனாலும், அந்த பிரம்மாண்டமான மேடையில் இருக்கும் நபர்கள் மிகவும் சிறியதாகவும் ஒரு கட்டெறும்பு உருவில் இருப்பதாக எங்களுக்கு தெரிந்தது. ஆறாவது வரிசையில் இருக்கும் போதே இப்படி என்றால் கடைசி வரைக்கும் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி நடக்கும் பிரம்மாண்டமான மேடை மிகவும் அமைப்பாகவும் இருந்தது. இந்த மேடையில் ஒரு பக்கத்தில் ஆண் பின்னணி பாடல்களும் ஒரு பக்கத்தில் பெண் பின்னணி பாடல்களும் நடுவில் இசை குழு ஒன்று வந்து இருந்தார்கள். இது மட்டும் இன்றி மேடையில் 70 லிருந்து 80வரை இசைக்கருவி வாசிப்பவர்களும் இதை கருவிகளும் இருந்தது வயலின் கிட்டார் டிரம்ஸ் மிருதங்கம் என்று இன்னும் சொல்ல சொல்ல நிறைய இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருந்தது.

​இதற்கு மத்தியில் ஒரு பெரிய அளவில் ராஜா சார் போட்டோவும் இசைக்கச்சேரியின் டைட்டிலும் பிரம்மாண்டமாக இருந்தது இது மட்டுமல்லாமல் இருபுறமும் எல் இ டி ஸ்க்ரீன்ஸ் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இருந்தது இதற்கு மத்தியில் சிறு சிறு மழைத்துளி தூறல்கள் வந்த வண்ணம் இருந்தது இசை நிகழ்ச்சியில் நனைவது என்பது வேறு ஆனால் மழையில் நனைவது என்பது வேறு சிறு சிறு மழைத்துளி நிகழ்ச்சி முழுவதும் இருந்து கொண்டு இருந்தது. ராஜாவின் இசை மழைக்கு முன்பு இந்த மழை எம்மாத்திரம். ?

​​திடீரென்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எனக்கோ மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று நினைத்திருந்தேன் ஆனால் இல்லை பிரம்மாண்ட மேடையில் நடுவில் led ஸ்கிரீனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் ஒரு காணொளி வந்தது அதில் ரஜினிகாந்த் மின்சாரம் இல்லாமல் ஒரு இசையை வர வைக்கவும் இசையே பாடவும் இசையின் உணர்ச்சி பொங்க வர வைக்க இந்த உலகத்திலேயே ஒரே ஒருவரால் தான் முடியும் அது அது எங்கள் ராஜாவால் தான் முடியும் என்று என்று கூறினார். அதன் பிறகு 6 35மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின அது எல் இ டி ஸ்க்ரீனில் இளையராஜாவின் 46 வருட இசை சாதனைகளின் பட்டியிலும் அவர் 1420 படங்களில் இசை அமைத்ததையும் அவர் 29மொழிகளில் பாடல்களை இயற்றியதையும் அவர் காட் ஆப் மியூசிக் என்று சொல்வது உண்மை தான் என்றும் அவர் 365 இயக்குனர்களிடமும் 647 தயாரிப்பாளர்களும் மூலமும் 227இசைக் கலைஞர்களையும 431 பின்னணி பாடகர்களையும் கொண்டு பணியாற்றி வந்திருக்கிறார் இது முடிந்த அடுத்த வினாடியே அதே வெள்ளை நிற வேட்டியும் வெள்ளை நிற ஜிப்பாவும் அதே குங்குமப்பொட்டும் கொண்ட இசைஞானி இளையராஜா மேடைக்கு வந்தார்.

​வந்தவுடன் எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தார் பின்னர் அவர் எப்பொழுதும் மேடைகளில் முதலாவதாக ஜனனி ஜனனி என்ற பாடலை பாடி துவக்கி வைப்பார் அதையே இங்கும் பாடினார்.

​அவர் ஜனனி அவர் ஜனனி ஜனனி என்ற பாடலை பாடும் பொழுது இந்த பெரிய அரங்கத்தில் எந்தவிதமான சலசலப்பு எந்த விதமான இடையூறுகளும் இன்றி அந்த பாட்டின் இசை முழுமையாக கேட்க முடிந்தது. இந்த அரங்கத்தில் கேட்க மிகவும் இனிமையாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. பல இசைக் கலைஞர்கள் பின்னணி பாடகர்கள் பாடும் பொழுது இளைஞர்கள் மற்றும் அவர்களின் தீவிர ரசிகர்கள் செய்யும் பல சேட்டைகள் சவுண்டுகள் என்று நிறைய இருக்கும் ஆனால் இசைஞானி இளையராஜாவின் பாடும் பொழுது எந்த விதமான இடையூறுகளும் இல்லை. சப்தங்களும் இல்லை என்னவென்று புரியவில்லை மிகவும் அமைதியாகவும் சில சில பக்கத்தில் இருக்கும் சப்தங்கள் மட்டும்தான் இருந்தது இந்த வயதிலும் மிகவும் உறுதியாகவும் முழுமையான எனர்ஜி உடனும் மிகவும் சிறப்பாகவும் அவர் பாடும் பொழுது மிகவும் இனிமையாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் பொறுமையாகவும் அவர் பேசி முடித்தவுடன் கைத்தட்டலும் அவர் பாடும் வரை அமைதியாகவும் எந்தவிதமான சலசலப்புமின்றி அவரின் குணநலங்களுக்கு ஏற்ப மிகவும் அமைதியாக இருந்தார்கள். இது இளைய இசைக்கலைஞர்கள் கச்சேரியில் பார்க்கவே முடியாத ஒரு கட்டுக் கோப்பு.

​இந்தப் பாட்டு முடிந்தவுடன் எஸ்பிபி சரண் மற்றும் அனிதா இருவரும் ராக்கம்மா கையத்தட்டு என்ற பாடல் பாடினார்கள் மிகவும் ஆறவாதத்துடனும் சிறப்பாகவும் இருந்தது இதற்கு அடுத்தால் போல அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடல் விவாபரி என்ற மராட்டிய பாடகர் பாடினார் இந்தப் பாடலை பாடிய அந்தப் பாடகருக்கு தமிழ் தெரியாது என்றும் கூடவே நான் கிராமத்தில் இருந்து வந்து இசை அமைப்பாளர் ஆவதற்கு முன்னாடி நூறு படங்களுக்கு மேல் துணை இணை இசையமைப்பாளராக பணியாற்றி நாடகங்களிலும் பணியாற்றி முதலாவதாக இந்தப் பாடலை அந்த இயக்குனரின் படத்தின் கருவுக்கு ஏற்றார் போல் இசையமைத்த முதல் பாடல் என்று கூறினார்.

​இந்த விஷயங்களை அவரே சொல்லும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது இதற்கு அடுத்து ராஜா சாரின் பயோபிக் படமாக தனுஷ் சார் நடிக்க இருக்கிறார் இதில் ராஜா சார் என்னுடைய அனைத்து விஷயங்களையும் அவரிடத்தில் நான் கூறியிருக்கிறேன் இதெல்லாம் அவங்க எடுக்குறாங்களா எனக்கு தெரியாது இருந்தாலும் நான் இதை உங்களிடத்தில் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் இதனால்தான் நான் உங்களிடத்தில் கூறுகிறேன் இதை சொல்லும் போது மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

​இதை அடுத்தார் போல முதல் முதலில் கங்கை அமரன் எழுதிய பாடல் அவர் எப்படி இதை எழுதி இருந்தார் என்பதையும் அவர் எழுதிய மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே என்பதை எப்படி மாற்றி அமைத்தார்கள் என்பதையும் பாடலை பற்றிய நினைவுகளை கூறினார் இந்தப் பாடலை விவாபரி அவர்கள் பாடினார்கள். இதற்கு அடுத்தது போல் எல்லோருடைய ஆல் டைம் ஃபேவரைட் என்பது போல மேற்கத்திய இசையில் தமிழில் மழை திறந்து ஆளும் நதிக்கரை தான் இந்த பாடலை ஹரிச்சரண் பாடினார் இந்த மக்கள் கூட்டத்தில் சப்தத்தில் மிகவும் எந்த விதமான இரைச்சல்களும் இல்லாமல் மிகவும் துல்லியமாகவும் அந்த இசைக்கருவி இசையும் மிகவும் சிறப்பாக பாடல் நடைபெற்றது.

மொத்தத்தில் ராஜாவின் இசை நிகழ்ச்சியை நேரில் பார்த்தது ஜென்ம சாபல்யமானது போலத்தான்.

அந்த அனுபவத்தை எழுத்தில் கடத்துவது கஷ்டம். பிரம்மாதமாக இருந்தது என்று எழுதலாம். வலி அல்லது இன்பம் என்பதையும் எழுதலாம். ஆனால் அனுபவித்தால் மட்டுமே உணரக் கூடிய தெய்வீக மாலை ராஜாவின் இசை நிகழ்ச்சி.

சாம்பிள் வீடியோ ஒன்று....