முத்ரா டான்ஸ் அகாடமி ஹாங்காங்கிலேயே மோகினியாட்டத்தை பிரத்யேகமாகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் நடனப் பள்ளி.
திவ்யா அருணிடமிருந்து இப்படி ஒரு நடன நிகிழ்ச்சிக்கு அழைப்பு வந்ததும், இதைப் பற்றிய புரிதல் இல்லாமல் செல்வதற்கு தயக்கம் இருந்தாலும், நிகழ்ச்சிக்கு சென்றதில் ஏக திருப்தி
ஒரு சின்ன டிரைலர் இங்கே....
நிகழ்ச்சியைப் பற்றி சொல்வதானால் அது ஒரு டான்ஸ் சிம்பொனி. நவராத்திரி சமயத்தில் தேவியை மையமாக வைத்து தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், குஜராத்தி, மலையாளம், இப்படி பல மொழிகளில் பாடல்களை தேர்ந்தெடுத்து அதன் இசைக்கு ஏற்ப 22 நடனக் கலைஞர்களை தயார் செய்து ஜமாய்த்து விட்டார் திவ்யா அருண். அவரின் முத்ரா டான்ஸ் அகாடமியின் ஆண்டு விழாவையொட்டி இப்படி ஒரு கலர்ஃபுல் நடனம்.
ஒவ்வொரு நடனத்தையும் டெக்னிகலாக ஆராய்ந்து எழுதும் ஆற்றல் நமக்கில்லை என்றாலும், அந்த நடனத்தின் தாக்கம் அரங்கத்தில் எதிரொலித்தது. பரவசமாக இருந்த பார்வையாளர்களே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு சாட்சி.
தேவிக்கு பல முகங்கள். பல பெயர்கள். ஒவ்வொரு தேவியின் முகத்தையும், பரதநாட்டியும், மோகினியாட்டம், கிராமப்புற நடனம், செமி கிளாசிக்கல் என்று கலக்கி விட்டனர் நடன கலைஞர்கள்.
அவர்களுக்குள் தான் எத்தனை முகங்கள்.
ராஜேஸ்வரி அம்மன் மீது ஒரு தெய்வீகப் பாடல்,
நவராத்திரி கொண்டாட்டங்களுக்காக ஒரு தெய்வீகப் பாடல் உற்சாகம், பக்தி கொப்பளிக்கும் பாடல்
சரஸ்வதி ஸ்துதியில் ஒரு பாடல் மோகினியாட்டம்.
மீனாட்சி சுந்தரேஸ்வரரை புகழ்ந்து ஒரு பாடல்.
மகிஷாசுரனை வதம் செய்யும் பார்வதி தேவியின் கோப முகம்
இறைவி லக்ஷ்மியை நம் ஒவ்வொரு இல்லத்திற்கும் அழைக்கும் ஒரு பாடல்.
நவராத்திரியில் குஜராத்தில் ஆடும் ஒரு கிராமப்புற நடனம்.
துர்காவிற்கும் அவரது வாகனமான சிங்கத்திற்கும் இடையேயான இணக்கத்தை காட்டும் பாடல்.
அன்னையாக அம்மன் தன் குழந்தையை காக்கும் ஒரு பாடல் .மலையாளத்தில்...
நம் கிராமத்து மாரியம்மனுக்காக ஒரு பாடல்.
நடனம் என்று எழுதி விட்டு கொஞ்சூண்டு வீடியோ போடலைன்னா எப்படி ?? அந்த வண்ண ஒளிச்சிதறலை, அழகிய நடனத்தை கண்களை விட வேறெந்த கருவியும் அப்படியே கவ்விக் கொள்வது சந்தேகம் தான். இருந்தாலும்... ஓரளவு இங்கே உங்களுக்காக........
நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தூதரக அதிகாரி வெங்கட் ரமணா நம்மூர் நடனங்களைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் பேசி நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
Leave a comment
Upload