தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2024925232644272.jpg

Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

Comment : டாக்டருக்கு படித்து விட்டு சினிமாவுக்கு வந்ததில் பல நோயாளிகள் பிழைத்தார்கள் என்றாலும் நடிப்பால் நம்மை நோயாளிகளாக்காமல் இருந்தால் சரி... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : ரிடையர்டு கேப்டன் – சிறுகதை – பா.அய்யாசாமி

Comment : அருமையான கருத்து, பல வீடுகளில் மனத்தாங்கலுக்கு காரணம் நம் கருத்தை ஏற்க வேண்டும் என்று நினைப்பதுதான். ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

Meenakshi Ragupathi , Chennai

Heading : விஜய்க்கு எதிராக நிஜ வில்லன்! விகடகவியார்

Comment : என்னங்ணா.. அரசியல்லயும் விஜய்க்கு வில்லன் பிரகாஷ்ராஜா?! காமெடியா இருக்கு. அவர் கணக்கே வேற... விகடகவியாரே, உங்க அரசியல் வியூகம் எல்லாம் தப்பாதுனு தோணுது. பாப்போம்ங்ணா!

செங்கமலம், சுலோச்சனா, பிரபுசங்கர் , கோவைபுதூர்

Heading : மீண்டும் கைலாயம் !! கோல்டன் கைலாஷ் - மினி தொடர். 2

Comment : என்னாச்சு கோல்டன் கைலாஷ் இரண்டாம் முறை பயணத்துக்கு... இவ்வளவு தடங்கல் வருதே?! பேராசிரியைக்கு என்னாச்சு... இப்ப ஓகேவா?! மானசரோவரில் நட்சத்திரமா முனிவர்கள் இறங்குவதை காணொலி காட்சி போட முடியுமா? அடுத்தவாட்டி நவராத்திரி கொலு போட்டியில் ஜெயிச்சவாளை கைலாஷுக்கு கூட்டிட்டு போங்கோ... மோட்சம் கிடைக்கும். சின்ன நப்பாசை, கேட்டுட்டோம். கன்சிடர் பண்ணுவேளா?!

லட்சுமி நரசிம்மன், பாலகங்கா, லால்குடி

Heading : ஓம் நமோ வெங்கடேசாய….–ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : திருமலை-திருப்பதியில் புரட்டாசி பிரமோற்சவ விழா நிகழ்வுகள் குறித்து ராஜேஷ் கண்ணாவின் நேரடி வர்ணனை, அந்த திருப்பதிக்கே நாங்கள் நேரில் சென்று பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ஏர்ஷோ, மறுபக்கம் திருமலையில் புரட்டாசி பிரமோற்சவம் விழா - ஒரே நேரத்தில் 2 திருப்பதி லட்டு சுவைக்க வைத்த விகடகவியாருக்கு வாழ்த்துக்கள்.

ராதா வெங்கட், மாயா குப்புசாமி , ஊத்துக்கோட்டை

Heading : பயங்கரவாதத்தை வென்ற பாஜக பெண் எம்.எல்.ஏ!-நமது நிருபர்

Comment : ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் அதிலும் இளம்பெண் ஷகுன் பரிஹர் போன்ற மெத்தப்படித்தவர்களின் வெற்றி அங்கே வாழும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. படிப்பில் உச்சம், தன்னம்பிக்கை, தைரியம், ‌‌நியாயத்துக்கான சமரசமில்லாத போராட்டம் போன்ற அணிகலன்களே, பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கிறது என்பதற்கு பாஜவின் இளம் எம்எல்ஏ ஷகுன் பரிஹர் பெரும் உதாரணமாக திகழ்கிறார்.

சாகுல் ஹமீது, தெய்வநாயகம், திலகா, திண்டுக்கல்

Heading : சாதனை படைத்த ஏர் ஷோ -தில்லைக்கரசிசம்பத் ,வீடியோ: மேப்ஸ்

Comment : சென்னையில் சாதனை படைத்த ஏர் ஷோ - தில்லையின் நேரடி வர்ணனை பலே ஜோர்! அதிலும், காமிரா கலைஞர் மேப்ஸின் அனைத்து வீடியோக்களும் நேரில் சென்று பார்த்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் ஏர்ஷோ ஒரு சாதனை என்றால், விகடகவி ஜாம்பவான்கள் அதை டிஜிட்டலில் மிளிரவைத்தது இரட்டை சாதனை... திருஷ்டி சுத்தி போடுங்கப்பா! ச்சும்மா. 'நச்'சுனு இருக்கு.

பத்மஜா, லோகேஷ், லாவண்யா , சென்னை

Heading : கேலிக்கூத்தாகிய கருத்துக்கணிப்பு

Comment : எந்தவொரு பிரபல நாளேடுகளும் அதன் துணை கருத்து கணிப்பு நிறுவனங்களும் ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று, மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்துவதில்லை என்றே கருத தோன்றுகிறது. இதனால் குத்துமதிப்பாக - ஆளுங்கட்சி முக்கால்வாசி, பிரபல எதிர்க்கட்சிக்கு கால்வாசி என பங்கு பிரித்து வெற்றிவாய்ப்பை அறிவிக்கிறது. இதில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சியோ அல்லது குறிப்பிடாத கட்சியோ வெற்றி பெற்றால் அந்நிறுவனங்கள் ஆஃப்பாகி விடுகின்றன. அதன்பிறகு பிரபல டிவி சேனல்களில் பல்வேறு விவாத மேடைகள் தான் அரங்கேறுவதுதான் வாடிக்கை!

கஸ்தூரி, முருகேசன், லாசரஸ் , கன்னியாகுமரி