உலகில் படைப்புகள் உள்ளன பலவும்
கலக்க மிலாது கனிவுடன் எதுவோ?
துவங்கும் எல்லாம் துடிப்புடன் நன்றாய்
பலவகை திறனும் பன்முகம் காட்ட!
தையலும் உயர்வுற தைரியம் வேண்டும்
தூய அன்பினை தூற்றா உறவும்
மாய வலையினில் மாட்டிடும் வினையும்
காயம் அனைத்தும் கரணியம் கேட்டிடா!
பெண்ணே உன்னைநீ பெரிதாய் எண்ணிடு
கண்ணே நீயும் கருத்தாய் வளர்கவே
எண்ணும் பயின்று எழுதிடு நன்றாய்
விண்ணும் அதிர உன் விடியல் பயணமும்!
நல்ல செயல்களை நாளும் செய்ய
அல்லவை ஒதுக்கி அறமாய் நிற்பாய்
கல்வியே பெரிய கருவி இங்கே
மல்லிகைப் போல மலர்ந்திடு அதனால்!
Leave a comment
Upload