தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
"மலைகளின் அரசி மறக்காத இன்னொசென்ட் திவ்யா " - ஸ்வேதா அப்புதாஸ் .

நீலகிரி மாவட்டத்தில் காலெக்டராக பணிசெய்வது என்பது மிக பெரிய கெளரவம் .

20250207180514774.jpg

இதுவரை 116 காலெக்டர்கள் இந்த மலை மாவட்டத்தை நிர்வகித்து வந்துள்ளனர் .

20250205233559882.jpg

1-8-1868 ஆம் ஆண்டு தான் நீலகிரிக்கு என்று முதல் கலெக்டர் பிரிக்ஸ் நிர்வகித்தார் .

நூறாவது கலெக்டர் லீனா நாயர் இப்படி பலர் இந்த மாவட்டத்தை நிர்வகித்திருந்தாலும் யாரும் மலைகளின் அரசின் மனதில் இடம்பிடிக்கவில்லை ஒருவரை தவிர .

அவர் 113 வது கலெக்டர் இன்னொசென்ட் திவ்வியா தான் .

2025020523371509.jpg

மாவட்டத்தில் அதிகமான வருடங்கள் பணியாற்றிய ஒரு கலெக்டர் மற்றும் மிக பிரபலமான கலெக்டர் என்ற பெருமையை தாங்கி வலம் வந்தவர் .

இன்னசன்ட் திவ்வியா நீலகிரியை விட்டு சென்று நான்கு வருடம் கடந்திருந்தாலும் இன்று வரை மலைகளின் அரசி அவரை மறக்கவில்லை .

20250205233749758.jpg

நீலகிரி மக்களின் மனதில் இன்னும் இவர் தான் கலெக்டர் என்று நினைத்து கொண்டே இருக்கிறார்கள் இந்த மாவட்ட வாசிகள்.

10-7-2017 ஆம் நாள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பையேற்றார் .

20250205234000620.jpg

அன்று முதல் வேலையாக அவர் விசிட் செய்த இடம் அரசு மருத்துவமனை .

பின் அன்றே ஊட்டி நகர் வலம் வந்து நேரடி நடவடிக்கை எடுத்து க்ளீன் மற்றும் க்ரீன் நீலகிரியை உருவாக்க முழுமூச்சாக இறங்கினார் .

20250205234259232.jpg

பிளாஸ்டிக் முழுமையாக அப்புறப்படுத்தும் தீவிர பணியில் இறங்கினார் .

சுற்றுப்புற சூழல் , காட்டு பகுதி வனவிலங்கு பாதுகாப்பு என்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் இந்த துணிச்சல் பெண் கலெக்டர் .

20250205234406778.jpg

யானைகளின் நடை பாதையை மேம்படுத்த Elephant corridor யை மறித்து கட்டப்பட்டிருக்கும் காட்டேஜ்களுக்கு அதிரடி சீல் வைக்க கலெக்டருக்கு எதிராக வழக்கு தொடர உயர் நீதி மன்றமும் , உச்சநீதி மன்றமும் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா முழு சுதந்திரம் கொடுத்து பக்கபலமாக நிற்க ஏகப்பட்ட சுற்றுலா விடுதிகள் சீல் வைக்க பட்டன . இந்தியா முழுவதும் இன்னசன்ட் திவ்வியா ஒரு முக்கிய டாபிக் ஆனார் .

ஏகப்பட்ட சவால்களை எதிர்த்து நின்றவருக்கு மிக பெரிய சவாலாக வந்தது கொரோனா தொற்று .

20250205235607306.jpg

கொரோன லாக் டவுன் அறிவிப்பு வந்த அடுத்த நிமிடமே கலெக்டர் பம்பரமாக சுழன்று இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் மாவட்டமுழுவதும் இருந்த அனைத்து சுற்றுலா பயணிகளை தங்களின் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்து நீலகிரியை சீல் செய்து கொரோனா உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தினார் .

20250205235330886.jpg

அதே போல தென் மேற்கு பருவமழை கொட்டி தீர்க்க நேரடியாக வெள்ளத்தில் சிக்கி மக்களை காப்பாற்றி அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார் .

அவலாஞ்சியில் மேக வெடிப்பு பலத்த மழை நிலச்சரிவில் சிக்கின மின்சார துறை ஊழியர்கள் மற்றும் உறவினர்களை தனியர் ஹெலிகாப்டர் உதவி கொண்டு காப்பாற்றினார் .

அவரே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தப்பித்தார் .

கடந்த சட்டமன்ற தேர்தலில் இவரின் பணி அபாரம் !.

20250205235636262.jpg

வாக்காளர்களை இவரின் நேரடி விளம்பரத்தால் ஈர்த்து அனைவரும் ஓட்டு போட வைத்த தேர்தல் அதிகாரி .

இப்படி ஏகப்பட்ட உதவிகள் பணிகளை செய்த காலெக்டரை 2021 ஆம் ஆண்டு அரசியல் தலையீட்டால் சென்னைக்கு மாற்றல் செய்தனர் .

இவரின் மாற்றத்தை இன்னும் நீலகிரி வாசிகளால் ஜீரணிக்க முடியவில்லை .

பத்திரிகையாளர் மதி மாறன் கூறும்போது ,

20250205235753143.jpg

" இன்னசன்ட் திவ்வியா கலெக்டர் உலக பெண்கள் தினத்தில் போற்றுதற்குரிய பெண் .

சாதனை பெண்களின் அடையாளம் .

அன்பு , பணிவு , துணிச்சல் .

இந்த மாவட்டத்தில் அதிக வருடங்கள் புரிந்த ஒரு சாதனை ஆட்சியர் இவர் மட்டுமே .

நீலகிரி மக்கள் அதிலும் பழங்குடியினருக்கு மறு வாழ்வு கொடுத்தவர் .

மூச்சி கொல்லி என்ற மலை கிராமத்திற்கு நடந்து போய் அவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அனைத்து தேவைகளை வழங்கினார் .

மிக பெரிய சாதனையாக கொரோனா பாதிப்பில் இருந்து நீலகிரியை காப்பாற்றினார் .

பழங்குடி மக்களை முழுமையாக காப்பாற்றினார் இந்த பெண் கலெக்டர் .

தோடர்களின் புனித எருமைகளை காப்பற்றியவர் இன்னசன்ட் கலெக்டர் .

ஸ்டெர்லிங் பயோ டெக் நச்சு நீரால் இறக்கும் தருவாயில் இருந்த புனித எருமைகளை காப்பாற்றினார் .

தாய் உள்ளமாக உதவும் ஒரு சிறந்த பெண் ஒரு சாதனை பெண் இவர் .

பழங்குடி மக்களின் 400 கதைகள் 4000 பாடல்களை ஆவண படுத்தி காட்டிய என்னை கௌரவித்த தாய் அவர் .

தூய்மையான கணவன் மனைவி வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கும் இருவாட்சி பறவைகளை காப்பாற்றிய ஒரு சிறந்த தாயுள்ளம் கொண்ட ஆட்சியர்.

இவர் மலைகளின் அரசியின் காட் மதர் என்று சொன்னால் மிகையாகாது . என்று கூறினார் .

தோடர் இன தலைவி வாசமல்லி கூறும் போது ,

20250205235911577.jpg

" உண்மையில் மலைகளின் அரசி மறக்காத ஒரு சாதனை பெண் கலெக்டர் எங்க இன்னசன்ட் திவ்வியா தான் .

அவரை எங்க வாழ்நாளில் மறக்கவே முடியாது .

அவர் எங்க மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கும்போது அது என்ன இன்னசன்ட் என்ற பெயர் என்று யோசிக்க வைத்தது பின்னர் தான் புரிந்தது அந்த பெயருக்கு ஏற்ற இன்னசன்ட் பெண் என்று .

அவர் செய்த சாதனை ஏராளம் அது இந்த மாவட்டம் ஏன் இந்தியாவுக்கே தெரியும் .

எந்த நியாமான பிரச்சனை என்று நேரடியாக சென்று பார்த்தால் உடனடி நேரடி நடவடிக்கை எடுத்து தீர்வு ஏற்படுத்தி கொடுத்து விடுவார் .

எங்க சமூக சிறுமிக்கு அவரின் ஆதார் கார்டில் தன் தாயின் வயதை விட அதிகமான வயது போட்டிருந்தது .ஆதார் மையத்திற்கு சென்று கேட்க எதுவும் செய்ய முடியாது என்று கைவிரிக்க .நான் அந்த சிறுமி அம்மாவுடன் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா அவர்களை நேரில் சென்று பார்த்து விளக்கமளிக்க உடனடியாக அந்த வயசு பிரச்சனையை மாற்றி கொடுத்தார் .

பி பி ஐ ஸ்டெர்லிங் பயோ டெக் கம்பெனியில் சுத்திகரிப்பு செய்யாத நீரை வெளியேற்றி கால்வாயில் விட அது மாயர் ஆறுக்கே சென்று மாசுஅடைய எங்க எருமைகள் அந்த தண்ணீரை குடிக்க தோல் மற்றும் எலும்பு நோய் தாக்கியது அது போல அந்த பகுதியில் எந்த மலரும் பூக்கவில்லை .அதே போல வன விலங்குகளும் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டன .நான் இது குறித்து காலெக்டருக்கு புகார் மனு அளிக்க அந்த கம்பெனி மேனஜர் என்னை நேரில் அழைத்து " நீங்கள் சொல்லுவதுபோல எந்த பாதிப்பும் இல்லை .உங்கள் சமூக மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறோம் மனுவை வாபஸ் வாங்குங்கள்" என்று கூற அதற்குள் ஆட்சியர் தீவிர விசாரணை மற்றும் நேரடி ஆய்வுக்கு பின் அந்த கம்பெனியை சீல் செய்தார் , இதுவரை அந்த கம்பெனி திறக்கவில்லை .

எங்க இன இளம் பெண்கள் இவரை பார்த்து காலெக்டராக ஆசை பட்டுள்ளனர் என்றால் பாருங்களே !.

ஏகப்பட்ட வளர்ச்சி பணிகள் மலைகளின் அரசியை பெரிய முன்னேற்றத்திற்கு எடுத்து செல்ல அதற்குள் மாற்றிவிட்டனர் மீண்டும் அவர் காலெக்டராக வர காத்து கொண்டிருக்கிறோம் " என்கிறார் ஆவலுடன் .

ஆட்டோ ஓட்டுநர் அப்பாஸ் கூறுகிறார் ஊட்டி ஏன் நீலகிரி நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது .

20250205235948748.jpg

தற்போது போதை பொருள் உபயோகிப்பது சர்வசாதாரணமாக இருப்பது வேதனையான ஓன்று .

இரவு ஒன்பது மணிக்கு நடு ரோட்டில் ரௌண்டாக அமர்ந்து மது அருந்துவது மிக மோசம் .

ஊட்டி குப்பை குவியலாகவும் சுத்தமில்லாமல் காட்சியளிகிறது .

கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா அம்மா இருக்கும் போது எந்த குடிமகனும் நடு ரோட்டில் அமர மாட்டான் .

அவர் மாற்றலாகி செல்ல எந்த பாதுகாப்பும் இல்லை .

எந்த வேலையும் சரியாக நடப்பதில்லை அவரின் கண்காணிப்பு நடவடிக்கை மாவட்டத்தை பாதுகாப்பாகவும் பளிச் என்று இருந்தது .தற்போது எல்லாம் தலைக்கீழ் தான் .

இன்னசன்ட் திவ்வியா அம்மாவை ரொம்பவே மிஸ் செய்கிறோம் " என்கிறார் .

அண்மையில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஆதாம் நீரூற்று காந்தி சிலை அப்புறப்படுத்த பேச்சு எழுந்தது உடனே எதிர்ப்பு வர அது கைவிடப்பட்டது .

இன்னசன்ட் திவ்வியா காலெக்டராக இருக்கும்போது இதே பிரச்சனை வர உடனே கலெக்டர் உள்ளூர் மக்களை ஆதாம் நீரூற்றுக்கு முன் நேரடியாக அழைத்து ஆலோசனை நடத்தி மக்களின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார் .

20250206000033561.jpg

நீலகிரி மாவட்டத்தை சூப்பராக நிர்வகித்தார் .

இன்னும் அவர் மலைகளின் அரசியின் இதயத்தில் உள்ளார் " என்பது உண்மை!.