தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250325192258124.jpeg

துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படுவது ஏன் ஆளுநர் ரவி விளக்கம்.

வெயிலுக்கு ஊட்டிக்கு வர சொல்றீங்க அவ்வளவுதானே !!

தமிழக வெற்றி கழகம் சோசியல் மீடியாபடைத்தான் இந்தியாவில் மிகப்பெரிய படை விஜய்.

கூட்டணிக்கு வருபவர்களுக்கு இந்த தகவல் !!

வரம்பு மீறி செயல்படுகிறது உச்ச நீதிமன்றம் பாஜக எம்பி கருத்து.

உங்க கட்சித் தலைவர் இதெல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்களே தெரியாதா !!

கட்சி வளர்ச்சிக்கு மல்லை சத்யா தடையாக இருக்கிறார் துரை வைகோ.

அதனாலதான் நீங்க ராஜினாமாவா !!

அதிமுக பாஜக கூட்டணியால் தேர்தல் ஜுரம் திமுக மீது ஜி.கே.வாசன் விமர்சனம்.

தலைவர் டாக்டருக்கு படிச்சிருக்காரோ !!

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக போலி நாடகம் அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்.

இந்த நாடகம் உங்க டிவில வருமா !!

திமுகவிடமிருந்து பாஜக தொண்டர்களை பாதுகாப்பது என் பணி பாஜக தமிழ் மாநில தலைவர்.

உஷாரா முன்ஜாமின் வாங்க சொல்றாரோ !!

திருச்சி உறையூரில் உயிரிழப்பு குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், நடக்கவில்லை அமைச்சர் நேரு விளக்கம்.

உங்க தொகுதி உங்க இலாகா இப்படித்தான் சமாளிக்கணும் அண்ணே !!

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு நிதி, திறன், அதிகாரம் இல்லை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மொத்தத்தில் நீங்கள் அதிகாரம் இல்லாத ஒரு அமைச்சர் அப்படித்தானே !!

ஆளுநர் வெறும் தபால்காரர் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து.

தபால்காரர் கிட்ட ஏன் பயப்படுறீங்க !!

கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்துவது மன அழுத்தத்தை தருகிறது தொல் திருமாவளவன்.

எந்த கட்சி நிர்வாகின்னு தெளிவா சொல்லலாம் இல்லே !!

தென்பெண்ணை பாலாறு இணைப்பு என் காலத்திலே முடிய வேண்டும் அமைச்சர் துரைமுருகன்.

அதாவது அதுவரைக்கும் அவர மினிஸ்டரா தொடர வைக்கணுமாம் !!