நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்க்க போனபோது அவர் வீட்டு வாசலில் நிறைய இளைஞர்கள் கூட்டம்.
'என்ன இது உறுப்பினர் சேர்க்கையா ? 'என்று நாம் தமிழரிடம் கேட்டபோது 'அதெல்லாம் இல்லை இவர்களெல்லாம் அமெரிக்கா விசாவுக்காக என்னிடம் பரிந்துரை கடிதம் வாங்க வந்திருக்கிறார்கள் 'என்றார்.
'விசாவுக்கு நீங்கள் கடிதம் தருகிறீர்களா ? 'என்று மிஸ்டர் ரீல் கேட்டபோது டிரம்ப் வேட்பாளராக இருந்தபோது அமெரிக்காவில் உள்ள நம்முடைய தம்பிகளை ட்ரம்ப் நம்பாளு அவருக்கு ஓட்டு போடுங்க என்று சொன்னேன்.
ட்ரம்ப் வெற்றிக்கு நான் தான் முக்கிய காரணம்.
இருந்தாலும் நமக்கு தான் விளம்பரம் பிடிக்காது என்பது உங்களுக்கு தெரியுமே! இந்த விஷயம் இந்த இளைஞர்களுக்கு எப்படியோ லீக் ஆகி விட்டது.
நான் பரிந்துரை கடிதம் கொடுத்தால் உடனே விசா தந்து விடுவார்கள். சில தாமரைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட என்னுடைய பரிந்துரை கடிதம் வாங்கிச் சென்று விசா வாங்கி அமெரிக்கா போகிறார்கள் 'என்றார் சீமான்.
இன்னொரு விஷயம் கூட இருக்கு அது யார்கிட்டயும் நீங்க சொல்லக்கூடாது இந்த எக்கச்சக்க வரி விதிப்பை மூணு மாசம் தள்ளி வையுங்கன்னு நான்தான் அவருக்கு வாட்ஸ் அப் அனுப்பிச்சேன்.
அதனால்தான் அவரு நிறுத்தி வைத்திருக்கிறார் என்று மேலும் ஆச்சரியப்பட வைத்தார் சீமான்.
மிஸ்டர் ரீல் உடனே 'அது என்ன மூணு மாசம் இந்தியாவுக்கு வரியே போடாதீங்க என்று சொல்ல வேண்0டும் தானே' என்று கேட்க 'நம்ம நிதி அமைச்சர் நிர்மலா அக்கா கூட இந்த கோரிக்கையை என்கிட்ட சொன்னாங்க நான் பேசுறேன் கா என்று சொல்லி இருக்கேன் 'என்றார் சீமான்.
சரி இந்த விஷயத்தை ட்ரம்ப் கிட்ட பேசுவீங்களா ? என்று மிஸ்டர் ரீல் கேட்க...
'நான் உடனே பேசிட்டேன் அதுக்கு அண்ணன் ட்ரம்ப் என்ன சொன்னார் என்றால் உன்னை துணை பிரதமராக்கிறேன் என்று சொல்லட்டும், இந்திய பொருட்களுக்கு வரி கிடையாது ' என்று சொன்னார் என்று அண்ணன் சீமான் சொன்னதும் 'இந்த விஷயத்தை நிர்மலா அக்கா கிட்ட சொல்லிட்டீங்களா ?என்று மிஸ்டர் ரீல் கேட்க' நான் ஸ்ட்ரைட்டா அமித்ஷா கிட்டயே பேசிட்டேன் அமித்ஷா ஓகே சொல்லிட்டாரு என்றார் சீமான்.
'நீங்க ஆட்சியை புடிப்பீங்கன்னு உங்களுக்கு யார் சொன்னது?என்று மிஸ்டர் ரீல் கேட்க அமெரிக்க உளவுத்துறை தான் தகவல் அமெரிக்க உளவுத்துறை இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்கிறார்கள் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் சீமான் ஜுரம் வந்துவிட்டது அதை வைத்து தான் சொல்கிறேன்.
234 தொகுதிகளிலும் நாங்கள் தான் ஜெயிப்போம்.
ஐயா ஸ்டாலின் மட்டும் 234 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழப்பார்.
மற்றவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது அண்ணன் எடப்பாடி, தம்பி விஜய் எல்லோரும் சேர்த்து தான் சொல்கிறேன்.
நான் டெல்லியில் துணை பிரதமர் அப்புறம் பிரதமர் அப்புறம் அதிபர் இப்படி போகும் கதை என்று சீமான் சொல்லிக் கொண்டே போக மிஸ்டர் ரீலுக்கு ஒரு மாதிரி மயக்கம் வர தட்டித் தடுமாறி ஆட்டோ பிடித்து அலுவலகத்தில் மயக்கம் போட்டவர் எழுந்து நினைவு திரும்ப இரண்டு மணி நேரம் ஆனது.
Leave a comment
Upload