திமுக அணி 234 தொகுதிகளிலும் வென்றாலும் ஆச்சரியம் இல்லை முதல்வர்.
எதிர்க்கட்சிகள் மீது அபரித நம்பிக்கை.
விஜயகாந்துக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் பிரேமலதா கோரிக்கை.
தேர்தல் வரும் போது பார்க்கலாம்.
பதினாறு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றம்.
இது ஏதோ ஆளுநரை பழி வாங்கற மாதிரி தெரியுது !!
பழனிச்சாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் நடக்கவில்லையா ஆர் எஸ் பாரதி கேள்வி.
இந்த விஷயத்துல நீங்க பழனிச்சாமியை பாலோ பண்றீங்க கரெக்டா !!
காங்கிரஸில் சிலர் கூறும் கருத்துக்களுக்கு கட்சி பொறுப்பாகாது ஜெய்ராம் ரமேஷ்.
ஒருவேளை ராகுல் காந்தியை சொல்றாரோ !!
அதிகாரிகள் துணையுடன் கனிம வளம் கொள்ளை கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.
ஆளுங்கட்சி என்று சொல்ல கூட்டணி தர்மம் குறுக்கே வருகிறது என்ன செய்ய !!
சிபிஐ மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் உயர் நீதிமன்ற நீதிபதி.
அரசியல் தலைவர்களுக்கு கூட சிபிஐ பற்றிய பயம் போயிடுச்சு !!
கீழே ஏரிகள், விழுந்தால் அகழிகள் என்று ஆட்சி நடத்துகிறோம்- முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்புறம் எப்படி அடுத்து எங்க ஆட்சி தான் அப்படின்னு சொன்னீங்க !!
டெல்லியில் நயினார் நாகேந்திரன் அமித்ஷா மோடி சந்திப்பு.
எடப்பாடி டென்ஷன் பண்ணாதீங்கன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பி இருப்பாங்களே !!
இரண்டாவது நாளாக பொன்முடி ,செந்தில் பாலாஜி சட்டசபைக்கு ஆப்சன்ட்.
ஆமா சில பேர் சந்தோஷப்படுவீங்க சில சில பேர் துக்கம் விசாரிப்பீங்க அதான் வரல !!
அதிமுகவுக்கு தன்மானம் கிடையாதா பிரகாஷ்ராஜ் கேள்வி.
திமுகவில் சேர்ந்து விட்டாரோ !!
Leave a comment
Upload