ராகுல் ப்ரீத் சிங்
"நான் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எதுவும் செய்வதில்லை. காரணம் கடவுள் எனக்கு அழகிய முகத்தை கொடுத்திருக்கிறார். அழகாக தோற்றமளிக்க அறுவை சிகிச்சை செய்து கொள்வது தவறு இல்லை "என்கிறார் ராகுல் ப்ரீத் சிங்.
காயடு லோஹர்
சிம்புக்கு ஜோடியாக ஒரு படத்தில் காயடு லோஹர் நடிக்க இருக்கிறார் .இந்தப் படத்தில் மீண்டும் காமெடியனாக சந்தானம்.
கீர்த்தி சுரேஷ்
மீண்டும் ஒரு படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைகிறார்
ராஷ்மிகா
உடற்பயிற்சியின் போது தவறி விழுந்து காலில் காயம்பட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நடிகை ராஷ்மிகா மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார்.
சைத்ரா
ராஜு முருகன் இயக்கத்தில் மை லார்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இந்த படத்தில் இவருக்கு ஜோடி சைத்ரா.
ஸ்ரீ லீலா
சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்துவரும் ஸ்ரீ லீலா இதுவரை மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் தாய் உள்ளத்துக்கு பாராட்டுக்கள் குவிகின்றன .
ஜெயிக்கப் போவது யாரு
சந்தானம், யோகி பாபு ,சூரி ஆகியோர் கதாநாயகனாக நடித்துள்ள மூன்று படங்கள் மே 16 ஆம் தேதி திரையிடப்படுகிறது.இந்த மூவரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது தான் இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
கண்காணிக்கிறார்
விஜய் தேவரகொண்டா கிங்டம் என்ற படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதுதான் இந்த படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை தேவரகொண்டா காதலி ராஷ்மிகா உன்னிப்பாக கண்காணிக்கிறார்.
Leave a comment
Upload