தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை தாமிர இறக்கை இலைக்கோழி  - 21 -ப ஒப்பிலி 

2025040309142342.jpg

அடர்ந்த கருப்பும் நீலமும் கலந்த பளபளக்கும் கழுத்துப்பகுதி. மினுமினுக்கும் தலை. கண்களுக்கு மேல் ஒரு வெள்ளை பட்டை, இதுதான் தாமிர இறக்கை இலை கோழியின் அடையாளம் என்கிறார், பறவையின ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி சலீம் அலி.

இந்த பறவையின் மெலிதான குச்சி போன்ற நீண்ட கால்கள் நீர் நிலைகளின் மேல் மிதக்கும் தாவரங்கள் மீது நடப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என்கிறார் அவர். தனியாக அல்லது கூட்டமாக தாவரங்கள் மிதக்கும் நீர் நிலைகளில் காணப்படும் இந்த பறவை.

இந்தியாவில் மேற்கு ராஜஸ்தான் தவிர அனைத்து மாநிலங்களிலும் காணப்படும் ஒரு பறவை தான் இந்த தாமிர இறக்கை இலைக்கோழி. மற்றும் பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படும். ஆனால் இலங்கையில் இப்பறவைகள் இல்லை.

மிகவும் லாவகமாக நீந்தக்கூடியது, சமயத்தில் நீரில் மூழ்கி தனது இரையை எடுக்கவும் இந்த பறவையால் முடியும் என்கிறார் சலீம் அலி. கொட்டைகள், வேர்கள், மற்றும் ஈர நிலத்தில் உள்ள தாவர வகைகளே இவற்றின் முக்கிய உணவாகும். இது தவிர மெல்லுடலிகள், மற்றும் பூச்சிகளையும் இவை உண்ணும் என்கிறார் அவர்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலம்தான் இந்த பறவையின் இனப்பெருக்க காலமாகும். முறுக்கப்பட்ட கிளைகள், மெல்லிய தண்டுகளைக் கொண்டு தன் கூடுகளை காட்டும் இந்த இலைக்கோழியினம். இந்த கூடுகள் நீர் தாவரங்களுக்கு நடுவே பாதி மறைந்து காணப்படும். ஆனால் நீரில் மூழ்கிவிடாது.

இந்த கோழி வகைகளுக்கு பிடிக்காத விஷயம் ஒருவனுக்கு ஒருத்தி.