தொடர்கள்
சினிமா
மிஷன் இம்பாசிபிள் - 8. லைட் பாய்

20250423152938834.png

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிம்பிள் தி ஃபைனல் ரெக்கனிங் பட்டையை கிளப்புகிறது.

டாம் க்ரூஸ் எம்.ஐ. ரசிகர்களுக்கு இந்த படம் அல்வா சாப்பிடுவது போலத்தான். ஒரு காலத்தில் ஆங்கில படங்கள் எல்லாம் ஒன்றரை மணி நேரங்கள் தான் ஓடும். இப்போதெல்லாம் வேற லெவல். இரண்டு மணி நேரம் 46 நிமிடங்களுக்கு ஓடுகிறது இந்த படம்.

எம்.ஐ கடைசி நான்கு படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் மக்குவாரி தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

2025042315330815.jpg

எண்டைடி என்ற செயற்கை நுண்ணறிவு இந்த உலகத்தை உலுக்கி எடுக்கப் போகிறது. அதை எப்படி ஈதான் ஹண்ட் தடுக்கிறார் என்பது தான் இந்த கடைசி இரண்டு படத்தின் ஒன்லைனர்.

இதில் அமெரிக்கா எட்டு இடங்களில் அணு ஆயுத பிரயோகம் செய்ய முடிவு செய்யும் பரபரப்பான நொடிகள் புது டெல்லியும் இடம் பெறுகிறது. நூறு மில்லியன் ஆட்களை கொன்று 7 பில்லியன் ஆட்களை காப்பாற்றும் யுக்தி நல்ல வேளையாக செய்யப்படவில்லை.

ஈதன் ஹண்ட் எல்லா தொடர்களிலும் அவருக்கு துணையாக வரும் கூட்டணி இதில் நாஸ்டால்ஜியாவாக காட்டுவது சிறப்பு.

மற்றபடி வழக்கமாக சொல்வது தான். டாம் க்ரூஸ் டூப் இல்லாமல் தானே செய்யும் ஸ்டண்ட் காட்சிகள் அக்மார்க் திரில் ரகம். அதை படமாக்கிய விதமும் தான்.

ஐமாக்ஸில் இந்த படத்தை பார்த்தல் அது வேறு லெவலில் இருக்கும். கியாரண்டி.

20250423153748163.jpeg

அறுவத்திரண்டு வயதில் மனிதர் என்னென்ன வேலை செய்கிறார். அசகாய சூரன்.

ஆக்ஷன் படத்திற்கு இதை விட எழுதினால் அது வீண்வேலை.

நிச்சயம் தியேட்டரில், தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய படம் மிஷன் இம்பாஸிபிள். இது தான் ஈதான் ஹண்ட் வரும் கடைசி படமாம். எனக்கென்னமோ அப்படி தோன்றவில்லை.

கீப் கமிங் டாம்.

20250423185733949.jpg