தொடர்கள்
பொது
அந்த மனசு தான் சார் கடவுள் -ஶ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250423105007571.jpg

" அந்த மனசு தான் சார் கடவுள் " டிஜிட்டல் யுகத்திலும் இன்றும் தவிர்க்க முடியாத அனைவராலும் கொண்ட படக்கூடிய ஒரு வசனம். இந்த வசனத்தை போலவே வசனத்திற்கு சொந்தக்காரரான நம் மதன் சாரையும் இன்றும் கொண்டாடுகிறது தமிழ் சமூகம்.

வசனத்தை எழுதியது மட்டுமல்ல அதற்கேற்றாற்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நம் மதன் சார்

சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் திரு. கோலாகல ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். மதன் சார் குறித்து எங்கள் கவனம் திரும்பியது. அவருடன் உங்களுக்கு பழக்கம் உண்டா என்றேன். என்ன இப்பிடி கேட்டுடீங்க. அவர் நடத்திய பத்திரிகையில் நான் பணியாற்றியிருக்கிறேன் என்றார்.

பத்திரிக்கையின் பெயர் வின் நாயகன் 1999-2000

அதில் Editorial Advisor ஆக மதன் சாரும்

Editor ஆக - Rao சாரும் அவர்களுக்கு Assistant Editor ஆக கோலாஹல ஸ்ரீநிவாஸ் பணிபுரிந்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல மேலும் சுவாரஸ்யமான ஒரு தகவலை சொன்னார்.

ஒரு நாள் அலுவலகத்தில் மதன் சார் திடீரென ஒரு கார்ட்டூன் வரைந்து என்னிடம் காண்பித்தார் . கோலாஹலாஸ் நீங்க French Beard அதாவது குறுந்தாடி வெச்சிகிட்டா உங்களுக்கு நல்ல இருக்கும் என்றார். அந்த கார்டூனில் எனக்கு எப்படி இருக்கும் என்றும் வரைத்து காண்பித்தார் . அன்று முதல் இன்று வரை நான் குறுந்தடியுடன் தான் இருக்கிறேன் என்றார்.

20250423105029190.jpeg

அந்த கார்ட்டூனை மிகவும் பொக்கிஷமாக இன்றும் வைத்திருக்கிறார்.

அந்த கார்ட்டூனை பார்க்கும்போது எனக்கு ஒரு பழமொழி தோன்றியது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்களே. அதே போல் ஒரு புது காகிதத்தை தேடாமல் தன் முன் இருக்கும் காகிதத்தில் அவர் வரைந்திருக்கிறார் போலும். அந்த கார்ட்டூனை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

சமீபத்தில் நடந்த விகடகவி சந்திப்பில் நான் இந்த நிகழ்வை பற்றி மதன் சாரிடம் கேட்டேன். ஆமா நல்லா ஞாபகம் இருக்கு. ரொம்ப சூப்பரான பையன். அவரோட வீடியோவை எல்லாம் பாக்குறேன். ரொம்ப நல்லா பேசறார். நிறைய டிவி நிகழ்ச்சியிலும் பாக்குறேன். ரொம்ப நல்ல பையன் என்றார்.

அந்த காலத்தில் குரு- சிஷ்யர்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.