மாநிலக் கல்விக் கொள்கை எப்போது நடைமுறைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி.
கல்விக் கொள்கைக்கும் அரசாங்கத்துக்கும் ராசியில்லை போல இருக்கிறது !!
நாங்கள் ஜாதி அரசியலை ஊக்குவிக்கவில்லை -ஜே.பி.நட்டா.
அப்புறம் ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு ?
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நிலையான அரசாங்கம் இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் நம்பிக்கை.
அக்கா எப்போதும் புதுசு புதுசா யோசிப்பாங்க !!
இரட்டை வேடம் போடும் கட்சி திமுக எடப்பாடி விமர்சனம்.
நடிகர்கள் நிறைய இருக்காங்க இல்ல அதான் !!
காதலியுடன் படம் மூத்த மகனை கட்சியிலிருந்து நீக்கினார் லாலு.
ரொம்ப நல்லவங்களாம் .
பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர் எடப்பாடி –துரைமுருகன்.
சாட்சி கையெழுத்து இவர் போட்டு இருப்பாரோ ?
அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் - கமல்.
இவர் எந்த அரசியல்வாதியை சொல்றாரு ,இவருக்கு ராஜ்யசபா சீட் தரவங்க கூட அரசியல்வாதி தான் !!
'யார் அந்த சார் ' என்ற கேள்வி இன்னும் அப்படியே தான் உள்ளது எடப்பாடி பழனிச்சாமி.
பேசாம இந்த சார் என்ற வார்த்தை அகராதியில் இருந்து எடுத்து விட வேண்டியது தான் !!
மீனவர் வாழ்வாதாரம் காக்க கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆனா அந்த வழி தான் தெரில ?
ஈடி பற்றி பயம் இல்லை என்றால் உதயநிதி ஏன் நண்பர்களை லண்டனுக்கு அனுப்ப வேண்டும் தமிழக பாஜக தலைவர் கேள்வி.
நீங்கள் சோதனையை என்ற பெயரில் சொதப்பல் அது மாதிரி தான் இது.
அமெரிக்காவில் கல்வி பயில வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா நேர்காணல் திடீர் நிறுத்தம் அதிபர் ட்ரம்ப் அதிரடி.
தினமும் தலைப்பு செய்தி இவர்தான் போல தெரியுது !!
நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயலாளர்கள், அதிகாரிகள் சரியாக பின்பற்ற வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தல்.
ஆமா இல்லன்ன நீங்க தான் ஜெயிலுக்கு போகணும் !!
Leave a comment
Upload