ஸ்ருதி ஹாசன்
"அப்பாவுடன் சேர்ந்து நடிக்க நான் தயார் தான். ஆனால் அவர் என்னை கூப்பிட வேண்டுமே" என்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
ராஷ்மிகா
தமன்னா ஸ்ரீ லைலா வரிசையில் தற்சமயம் ராஷ்மிகாவும் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட தயாராகிவிட்டார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தில் குத்தாட்டம் போட இருக்கிறார் ராஷ்மிகா. இதற்கு அவர் கேட்ட பெரிய தொகைக்கும் தயாரிப்பாளர் சரி என்று சொல்லிவிட்டார்.
போலீஸ் நயன்தாரா
மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் மூக்குத்தி அம்மன் ,போலீஸ் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா.
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் நடித்த ஹோம்பவுண்ட் என்ற படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. ஹோம் பவுண்ட் பட இயக்குனர் நிராஜ் இயக்கத்தில் அவர் மரமாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன் என்கிறார் ஜான்வி கபூர்.
ஜெயிலர் 2
ஜெயிலர் -2 படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து சந்தானம் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே சிம்பு படத்தில் சந்தானம் தற்சமயம் நடிக்க இருக்கிறார். எனக்கு நெருக்கமான கதாநாயகர்கள் இருந்தால் அவர்களுடன் சேர்ந்து நடிக்க தயார் என்று சொல்லிவிட்டார் சந்தானம்.
பார்வதி திருவோத்து
எந்த நடிகையின் நடிப்பு சாயல் இல்லாமல் கலப்படமில்லாத நடிகை என்ற பெயர் பார்வதி திருவோத்வுக்கு கிடைத்திருக்கிறது.
சீரழிகிறது
நடிகர்களின் மேலாளர்களும் உதவியாளர்களும் கதை கேட்கத் தொடங்குவதால் தான் தமிழ் சினிமா சீரழிகிறது என்கிறார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி.
ஸ்ரீநிதி ஷெட்டி
நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த ஹிட் -தி தர்ட் கேஸ் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படத்தின் நாயகி என்ற அந்தஸ்து நடிகைக்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே கே ஜி எஃப் மூலம் 250 கோடி , கே ஜி எஃப் - 2 மூலம் 1000 கோடி என்று ஸ்ரீநிதி ஷெட்டி படம் வசூலை அள்ளிக் கொடுத்திருக்கிறது.
Leave a comment
Upload