தொடர்கள்
தொடர்கள்
பறவைகள் பலவிதம் -   இந்த வார பறவை  பெரிய கடல் குருவி 25  ப ஒப்பிலி


20250431175612790.jpeg
கடல் குருவி வகைகளிலே மிகவும் பெரிதான ஒன்றுதான் இந்த கடல் குருவி. இந்த குருவியின் அலகு, முனையில் சிறிய கருப்பு திட்டும், மீதமுள்ள பகுதி வெளிர் சிகப்பு நிறத்திலும் காணப்படும்.

குளிர் காலங்களில் கஜகஸ்தான், உஸ்பேகிஸ்தான், ரஷ்யா போன்ற பகுதிகளிலிருந்து இந்தியாவின் தெற்கு பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள், மற்றும் கடலோர பகுதிகளில் இந்த குருவியை காண முடியும். ஒடிஷாவின் சிலிகா ஈர நிலங்களிலும் இவை அதிக எண்ணிக்கையில் காணப்படும் என்கிறார் பறவையின் ஆராய்ச்சியாளர்களின் தந்தை சலீம் அலி.

மேற்கு குஜராத், பலுசிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் இந்த குருவிகள் இனப்பெருக்கம் செய்கின்றன என்கிறார் பாம்பே இயற்கை வரலாற்று சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் முனைவர் எஸ் பாலச்சந்திரன்.

கஜகஸ்தான், உஸ்பேகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளில் பறவையின ஆராய்ச்சியாளர்கள் இந்த குருவியின் காலில் வளையங்கள் கட்டினர். அவ்வாறு வளையம் கட்டப்பட்ட பறவைகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து காணப்பட்டன என்கிறார் பாலச்சந்திரன்.

இந்த பறவைகள் குறைந்த பட்சம் நாலாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் பறந்து சென்னை போன்ற இடங்களுக்கு வருகின்றன. மீன்கள், இறால்கள், நண்டு வகைகள், ஆகியவை இந்த பறவைகளின் முக்கிய உணவாகும். வானத்தில் பறந்துகொண்டே இருக்கும் போதே, தனது இரை கண்களில் பட்டால் வில்லிலிருந்து சீறி பாயும் அம்பு போல தண்ணீருக்குள் மூழ்கி இரையை கவ்வி விடுமாம் இந்த குருவி.