தொடர்கள்
அனுபவம்
பெங்களூர் அ (இ)ன்றும் -ஸ்வேதா அப்புதாஸ் .

பெங்களூர் ஒரு காலத்தில் அழகான நகரம் .

கார்டன் சிட்டி , 'pensioners paradaise' என்று அழைக்கப்பட்ட ஒரு இதமான நகரம் .

20250505005909306.jpg

எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென செடி கொடிகள் , மரங்கள் சூழப்பட்டு காணப்பட்ட குளு குளு நகரமாக இருந்தது பெங்களூர் .

பெங்களூர் வாசிகளும் சரி வெளியூர் விசிட்டர்களும் சரி சனி ஞாயிறு கிழமைகளில் ரிலாக்ஸாக எல்லோரும் வித்தானசௌதா எதிரில் சென்று கூல் வாக்கிங் சென்று வேர்க்கடலை , சூடான சுட்ட சோளம் , பெரிய அப்பளம் என்று நொறுக்குவது .

அருகில் உள்ள கப்பன் பார்க்கில் இளம் ஜோடிகள் மற்றும் வயதான ஜோடிகள் கட்டி பிடித்து கொண்டு முணுமுணுத்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது .

எம் .ஜி .ரோட்டில் ரிலாக்ஸாக நடந்து செல்லும் ஜோடிகள் ..

பெருசுகளும் கட்டி பிடித்து கொண்டு வாக்கிங் செல்லும் அழகு.

20250505165358509.jpg

அழகாக நகரும் டபுள் டக்கர் பஸ் அதனுடன் ஊர்ந்து செல்லும் வாகனங்களை ரசிப்பது ஒரு காலத்தில் அருமையான ஒன்று .

தற்போது அந்த எம் .ஜி .ரோடு மிஸ்ஸிங் .

காக்ஸ் டவுன் , பிரேசர் டவுன் , எம் .ஜி .ரோடு, பிரிகேட் ரோடு என்று எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென இருக்கும் .

ஆங்காங்கு மினி கார்டென்கள் கூலாக இருக்க காலை மாலை களில் ஏரியா வாசிகளில் பெருசுகளும் இளசுகளும் மிடுக்கான வாக்கிங் செல்வதை பார்த்து ரசித்த பெங்களூரு மிஸ்ஸிங் இப்பொழுது !..

தற்போது பெங்களூரினுள் நுழைந்தவுடன் எங்கு பார்த்தாலும் கட்டிட குவியல்கள் .

20250505010011794.jpg

மிக உயரமான அபார்ட்மெண்ட்ஸ் எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் குண்டும் குழியுமான சாலைகள் .

எங்கு திரும்பினாலும் குப்பை குவியல்கள் ஏகப்பட்ட தூசி .

மெட்ரோ பாலங்கள் இன்னும் கட்டப்பட்டு கொண்டிருக்கும் அரைகுறை பாலங்கள் .

ஏர்போர்ட் செல்லக்கூடிய எண்ணூர் சாலை மிக மோசம் .

இப்படி நகரே அலங்கோலமாக காட்சி அளிப்பதை பார்க்கும் போது பழைய கார்டன் சிட்டி பெங்களூர் எங்கே என்று தேட வைக்கிறது ..

காணாமல் போன அழகிய பெங்களூரை தேடி தேடி கிடைக்காமல் அனைவரும் ஐக்கியமாகும் இடங்கள் தான் பப்புகள் !..

பெங்களூரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பப்புகள் இருக்கின்றன .

அதில் ஆசியாவிலே மிக பெரிய பப் பெங்களூர் எண்ணூர் சாலையில் உள்ள ஓய்யா (Oia) பப் .

87,0000 சதுர அடியில் கிரேக்க நாட்டில் உள்ள குட்டி கிராமமான சௌத் ஏகன் சன்டோரினி தீவில் உள்ள ஓய்யா குட்டி கிராமம் .. வெள்ளை வீடுகள் , நீல நிற சர்ச்களின் கோபுரங்கள் அமைந்துள்ள கிராமத்தை பிரதிபலிக்கிறது இந்த பப் !.

20250505010108328.jpg

இந்த பப்பில் அழகு வாய்ந்த வெள்ளை சுவர்கள் , நீல உயர கோபுரங்கள் பசுமையாக காட்சியளிக்கும் செடி கொடிகள் , மரங்கள் , கலர் மீன்கள் விளையாடும் குளம் என்று சூப்பராக காட்சியளிக்கிறது இந்த பப் .

1800 பேர் அமர்ந்து உண்டு அருந்தி என்ஜோய் பண்ணும் ஒரு ரிலாக்ஸான பப் தான் ஓய்யா !.

இப்பொழுதெல்லாம் பெங்களூரினுள் நுழைந்தால் டென்ஷன் போக்குவரத்து நெரிசல் , மக்கள் கூட்டம் ,அழுக்கு மற்றும் தூசியை பார்த்தாலே அலர்ஜி தான் ஏற்படுகிறது .

20250505010142647.jpg

அதனால் ஓய்யா பப்பினுள் நாமும் நுழைந்தோம் .

வார இறுதி நாட்களில் டேபிள் புக் செய்ய வேண்டும் .

மாலை 6.30 மணிக்கு உள்ளே நுழைந்தோம் நமக்கு ஒதுக்கப்பட்ட டேபிள் ரெடி என்று அஸ்ஸாமி பெண் கூறி வரவேற்க உள்ளே நுழைய மழை வெளுத்து வாங்கியது .

எதோ கிரீஸ் நாட்டு அரண்மனை கோட்டையினுள் சென்றது போல இருந்தது நமக்கு .

20250505010342812.jpg

லவ்லி ஜோடிகள் ,மற்றும் குடும்பசகிதமாகவும் எதோ வேறு உலகத்திற்குள் நுழைந்தது போல உற்சாகமாக வந்து அமர்ந்து கொண்டனர் .

சில ஜோடிகள் மெல்லிய கேண்டில் வெளிச்சத்தில் அருமையான பானத்தை உறிஞ்சி கொண்டு கண்கள் அசையாமல்ஒருவரையொருவர் ரசித்து கொண்டிருந்தனர்.

சிலர் அழகிய குளத்தின் அருகில் அமர்ந்து கால்களை குளத்தினுள் விட்டு ஆட்டிய படி மீன்களுடன் விளையாடி கொண்டு என்ஜாய் செய்து கொண்டிருந்தனர் .

20250505010417286.jpg

ஓய்யா பார் சூப்பர் ஏகப்பட்ட பாட்டில்கள் அடுக்கிவைக்க பட்டிருக்கிறது .

வித்தியாசமான பீர் வகைகள் அழகான பைப்புகளில் வர அதை கண்ணாடி க்ளாசில் நிரப்பி செர்வ் செய்தனர் .

திடீர் என்று ஒரு வெள்ளைக்கார பெண் சிக் என்று வந்தார் .

நேராக மீன்கள் விளையாடிக்கொண்டிருக்கும் குளத்தின் மேல் அமைந்த பாலத்தின் மேல் அருமையான லைட் இலுமினேஷன் டான்ஸ் ஆடி அசத்தினார் .

நாம் ஹல்லோ சொல்லி பேச அவர் ரஷ்ஷிய பெண் லிபியா என்று அறிமுகம் செய்து சிக் என்று பறந்துவிட்டார் .

இந்த பப்பில் ஏகப்பட்ட ட்ரிங்க்ஸ் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொரு டேபிளுக்கும் ஆர்டரில் பேரில் வந்த வண்ணமிருந்தன .

பானங்கள் ரம் , டக்கீலா , பீர்வகைகள் , வோட்கா , பிராண்டி , அருமையான வைன் என்று சுவைத்து கொண்டிருந்தனர் .

20250505010455368.jpg

ஸ்லைசெட் லாம்ப் பெப்பர் , தாச் கபாப் , விஸ்கிகார்லிக் , ப்ராவ்ன் சிக்னேச்சர் , டாங்க்ரா சில்லி சிக்கென் , கேப்டன் மோர்கன் , பீர் பெட்டெர்ட் ஆனியன் ரிங்ஸ் என்று ஏகப்பட்ட பதார்த்தங்கள் . அருமையாக ருசித்தோம் !..

20250505010755536.jpg

ஒரு நங்கை தன் பெர்த்டே ஐஸ் கேக் வெட்ட ரெடியாக ஹாப்பி பிர்த்டே பாடல் ஒலிபரப்ப கேட்க வெய்ட் செய்து பாடல் வராமல் அவர்களே வெட்டி பாடி கேக் ஊட்டிவிட்டு கொண்டு சென்றனர் .

பரபரப்பாக அதே ரஷ்ய டான்சர் வந்து சூப்பர் லைட்டிங் டான்ஸ் ஆடி கலக்கி விட்டு சென்றார் அதே அழகிய ரஷ்ய ஸ்லிம் பியூட்டி லிபியா !.

நாம் காஸ்டலி பில்லை கூகிள் பே செய்து விட்டு வெளியே வர மழை ஓய்ந்திருந்தது ...

மீண்டும் அதே குண்டும் குழியும் சாலை , குப்பைகள் தூசி என்று அழகிய பெங்களூரை காணாமல் தவித்து ஓய்யா அழகை கற்பனை செய்த வண்ணம் திரும்பினோம் இரவு 12 மணிக்கு ....