திமுக பொதுக்குழுவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மட்டும் பேசவில்லை.
திமுகவில் இருக்கும் பல தொண்டர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லை பல தொண்டர்களுக்கு அறிவாலயம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. அறிவாலயத்துக்கு வந்து கூட இருக்க மாட்டார்கள் . திமுகவுக்காக அவர்களின் உழைப்பு அபரீதமானது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் ரொம்ப நாட்களாக அமைச்சராக இருப்பவர்கள் அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்குவதற்கு பதில் இளைய தலைமுறைக்கு வாய்ப்பு வழங்க திமுக திட்டமிட்டு இருக்கிறது.. பாட்டாளி மக்கள் கட்சி குடும்ப சண்டை, அண்ணாமலையில்லாத பாஜக ,செல்வாக்கு இல்லாத எடப்பாடி, விஜயின் தனி ஆவர்த்தனம் இதெல்லாம் ஓட்டுக்களை சிதறடிக்குமே தவிர நமது வெற்றி வாய்ப்பு பாதிக்காது என்று திமுக நம்புகிறது.
ஒரு பூத்துக்கு 30 சதவீத வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப கூட்டத்தில் வற்புறுத்தினார்.
மதுரையில் செல்வாக்குடன் இருந்த மதுரை முத்துவின் சிலையை திறந்து அவரின் சமூக வாக்குகளை திமுக வாக்கு வங்கியாக கிட்டத்தட்ட மாற்றி விட்டார் .
மதுரை வரும்போது இரவு சாப்பாடு என் வீட்டில் தான் என்று சகோதரர் மு க அழகிரி அன்பு உத்தரவிட்ட போது அப்படியே முக அழகிரி வீட்டுக்கு சென்று இரவு உணவை அவருடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டார் .
மு க அழகிரி என்னோட அப்போது இருந்தவர்களை கட்சியை விட்டு கழகம் நீக்கி இருக்கிறது. அவர்கள் வேறு கட்சிக்கு போகவில்லை திமுகவுக்கு தான் ஓட்டு போடுகிறார்கள் அவர்களின் கட்சியில் சேர்த்துக் கொள் வேறு எந்த கோரிக்கையும் எனக்கு கிடையாது என்று சொல்ல அதையும் செய்வதாக ஸ்டாலின் உறுதி தந்தார்.
இது தவிர 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற ஒரு புதிய திட்டத்தையும் அறிவித்தார். தமிழகத்தில் 2 கோடி குடும்பத்திலும் திமுக உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது திட்டம்.
இந்த பொதுக்குழு திமுகவின் பலத்தை தேர்தல் கணக்கை தெளிவாக சொல்லி இருக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கி உதயநிதிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இப்போது அதற்கு ஒன்றும் அவசரம் இல்லை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமரவில்லை மேடைக்குகீழே பொதுக்குழு உறுப்பினர்களுடன் சேர்ந்த அமர்ந்து கொண்டார். இருந்தாலும் மேடையில் பேசியவர்கள் மறக்காமல் துணை முதல்வர் புகழ் பாடினார்கள்.
Leave a comment
Upload