தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250506183846138.jpeg

நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா ? கமலுக்கு கர்நாடக நீதிமன்றம் கேள்வி.

இப்படி எல்லாம் கேள்வி கேப்பாங்க என்று தெரிந்தால் கோர்ட்டுக்கு போயிருக்க மாட்டார்.

ஞானசேகருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம் அமைச்சர் கீதா ஜீவன்.

ஆனா அந்த சார் தான் விடாது கருப்பு மாதிரி துரத்திக் கொண்டே இருக்கிறது.

மகாராஷ்டிராவில் மகளிர் நிதி உதவி திட்டத்தில் மோசடி துணை முதல்வர் அஜித் பவார் ஒப்புதல்.

பேப்பர்ல அவர் பேர் வரணுமாம் !!

திருவண்ணாமலை மாவட்டதேர்ச்சி சதவீதம் அமைச்சர் ஏவா வேலு நடவடிக்கையால் அதிகரிப்பு ...துணை சபாநாயகர் பெருமிதம்.

பசங்களை படிங்க என்று சொல்லி கம்பு வச்சி மிரட்டி இருப்பாரோ !!

யார் விவாகரத்து செய்தாலும் நான் தான் காரணமா தனுஷ் கேள்வி.

அதானே உங்க விவாகரத்துக்கே நீங்க காரணம் இல்லை !!

இனி யார் அந்த சார் என்று கேட்டால் நீதிமன்ற அவமதிப்புதான் எச்சரிக்கும் அரசு வழக்கறிஞர்.

சார் என்ற வார்த்தையே வேண்டாம் போதுமா !!

பாமகவில் எந்த குழப்பமும் இல்லை டாக்டர் ராமதாஸ்.

குடும்பத்தில் தான் ஒரே குழப்பம் சண்டை அப்படித்தானே டாக்டர் !!

கூட்டணி தர்மத்துக்காக தமிழகத்தின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்க முடியாது சிபிஎம்.

ஆமா வேடிக்கை பார்க்காம கண்டுக்காம போயிடுவோம் !!

திமுகவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின்.

புரிஞ்சு போச்சு தலைவர் லிஸ்ட் ரெடி பண்ணிட்டார் பென்ஷன் பேப்பர் ரெடி !!

பாமகவில் அனைத்து அதிகாரமும் ராமதாஸிடம் மட்டுமே உள்ளன முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் கருத்து.

அது எந்த ராமதாஸ் கிட்ட இருக்கு என்பது தான் இப்ப சண்டையே !!

எந்த ஷாவந்தாலும் தமிழ்நாட்டை ஆள முதலமைச்சர் ஸ்டாலின்

அப்புறம் மாத்தி பேச கூடாது !!