தொடர்கள்
விகடகவியார்
தராத பேட்டி கமலஹாசனுடன்... மிஸ்டர் ரீல்

20250506194532953.jpeg

பரவாயில்லை ஒப்பந்தப்படி உங்களுக்கு ராஜ்யசபா சீட் உங்களுக்கு தந்து விட்டார்களே ?

தந்துவிட்டார்கள் ஆனால் மறுபடியும் இன்னொரு ஒப்பந்தம் போட்டு விட்டார்கள்

அது என்ன ஒப்பந்தம்?

இனிமேல் நீங்கள் நடிக்கும் எல்லா படங்களையும் ரெட் ஜாயிண்ட் மூலம் தான் வெளியிட வேண்டும். மாநிலங்களவையில் ஒவ்வொரு முறையும் பேசும்போது தளபதிக்கும் இளைய தளபதிக்கு நன்றி தெரிவித்து விட்டு பேச வேண்டும். திமுக வெளிநடப்பு செய்யும் போதெல்லாம் நீங்களும் வெளிநடப்பு செய்ய வேண்டும். அறிவாலயம் அனுமதியின்றி கூட்டணி கட்சிக்காரர்கள் சந்திப்பது வணக்கம் சொல்வது எல்லாம் கூடாது இப்படி 14 நிபந்தனைகள்

சரி மன்னிப்பு கேட்டால் படம் ரிலீஸ் அனுமதி என்கிறார்களே மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே?

மன்னிப்பு எல்லாம் கேட்க நான் தயார் தான் மணிரத்னம் தான் நமக்கு ஓசியில் கிடைக்கும் விளம்பரத்தை ஏன் விட்டுவிட வேண்டும் கொஞ்ச நாளைக்கு வாய்தா வாங்குங்கள் படத்தின் பெயர் எல்லா நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் சொல்லி கிடைக்கும் ஓசி விளம்பரத்தை நாம் ஏன் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

திமுகவின் திட்டம் என்னவோ அதுதான் எங்கள் திட்டம் எல்லாம் இந்த நாட்டுக்காகஅவர் எப்போது சொல்கிறாரோ அப்போது மன்னிப்பு கேட்பேன்.

எடப்பாடி பழனிச்சாமி

நீங்கள் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறாரே ?

பாஜக என்ன அடகு கடையா அப்படி எல்லாம் கிடையாதுஅமித்ஷா மோடி இருவரும் என்னை விட வயதில் பெரியவர்கள்எனவே அவர்களிடம் எழுந்து நின்று வணக்கம் சொல்வது ஒன்றும் தப்பில்லை

ஆனால் நீங்கள் தவழ்ந்து குனிந்து என்று ஏதோ சொல்கிறார்களே?

அதெல்லாம் பழைய வீடியோஇப்போது அப்படி எல்லாம் இல்லை

பாட்டாளி மக்கள் கட்சி குடும்ப சண்டை பற்றி?

பாட்டாளி மக்கள் கட்சி டாக்டர்கள் இருவரும் திமுக தலைமையை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் அவர்கள் எவ்வளவு அழகாக குடும்ப அரசியலை கையாள்கிறார்கள் வாரிசுகளுக்கு பதவி கூட தொண்டர்கள் விருப்பம் போல் கொண்டு செல்கிறார்கள். இதற்காகவே பாமக அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பயிற்சி பெறுவது நல்லது .

தேமுதிக கூட்டணி பற்றி அடுத்த வருடம் தான் சொல்வேன் என்று சொல்லிவிட்டார்களே?

அவர்கள் அடுத்த வருடமே சொல்லட்டும் ஒன்றும் அவசரம் இல்லை.