தலை முடி வெட்டவா ஒரு லட்சம்?
ஆமாம்.
நம்ம ஆலிம் ஹக்கிம் என்னும் முடி திருத்தகர், இந்திய கனவு தொழிற்சாலையின் முடி (வெட்டி) சூடா மன்னன்.
ஆமாம். அவங்க சம்பாதிக்கறாங்க. நான் சம்பாதிச்சா என்ன? என்பது அவரது கேள்வி.
கணக்குல குடுத்தா ப்ளஸ் ஜீஎஸ்டீ18% வாங்குகிறார்.
இவருடைய அப்பா அமிதாப் பச்சனுக்கு முடி திருத்திக் கொண்டிருக்கும்போதே இறந்து போனாராம். அப்போது இவருக்கு வயது 9. அந்த மரபு தான் எனது சொத்து என்று சொல்லுகிறார்.
எழுத்தாளர்களும் டெக்னீஷியங்களும் சம்பாதிப்பதே கடினமாக இருக்கும் இந்த துறையில், இவரது சம்பளம் குறித்து பெருமூச்சு விடும் பல நடிகர்களும் இங்குண்டு.
“என்னோட வாடிக்கையாளர்களை வேணும்னால் கடத்திடலாம். ஆனால் என்னோட திறமையை! நோ சான்ஸ்”.
“எங்கிட்ட படிச்ச மாணவர்கள் தனியா தொழில் நடத்தறாங்க. ஆனா என்னோட ஃபினிஷ் க்ளோனிங்கா பண்ணமுடியும் என்று ஷார்ப்பா கட் பண்ணுகிறார்.
********
போல்டி(Bolt – Usain Boalt)ன் பார்வை போல்ட்(bold) தான்
நின்று கொண்டு இருப்பவர் உசைன் போல்ட். வணங்குபவர் Gatlin. இது நடந்த இதே stadium த்தில் Gatlin போதை பொருள் உபயோகித்து ஓடியத்திற்காக 2012 ல் தடை செய்யப்பட்டு cheat பட்டம் வாங்கினார்.
உலக தடகள வீரர்கள் மத்தியில் அவரை ஒரு ஏமாற்றுக்காரர் என்று ஏசினார்கள். ஆனால் அதே போட்டியில் தங்கம் வென்ற போல்ட் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பல பேட்டிகளில் அவரை நோண்டி நோண்டி கேட்ட போது அவர் சொன்னது.
Galtin ஒரு திறமையானவர். அவர் போதை பொருளை உபயோகித்ததால் தடை செய்யப் பட்டு இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் போதை பொருளை உபயோகிக்காமல் இன்னும் முயற்சி எடுத்து இருந்தால் கண்டிப்பாக என்னை கூட ஜெயிக்கலாம் என்றார். உலகம் அவர் செய்த தவறை மட்டும் பார்க்கிறது. நான் அவரின் திறமையை மட்டும் பார்க்கிறேன் என்றார்.
அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஒரு கறுப்பருக்கு இன்னொரு கறுப்பர் வக்காலத்து வாங்குகிறார் என்று.
ஆனால் அந்த பேட்டி Galtin க்குள் ஒரு பெறும் மாறுதலை உண்டாக்கியது. 6 வருடம் உழைத்து போதைகளை விட்டு விட்டு மீண்டும் களத்துக்கு வந்தார்.
அதே களத்தில் அவர் உசைன் போல்ட்டையே வென்றார்.
அவர் தரையில் அமர்ந்து போல்ட்டை வணங்கிய காட்சிதான் இது. அவர் வணங்கியது அவரை ஏசிய மக்களை பார்த்து அல்ல. அவரின் திறமையை பார்த்து அதன் வலிமையை உணர்த்திய போல்டை.
************
நூறு வருஷம் கழிச்சி ஒலிம்பிக்ல கிரிக்கெட்டையும் சேர்த்திருக்காங்க. 2028ல் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டையும் சேர்த்துள்ளார்கள். 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டுக்கு இது முதல் என்ட்ரி.
இது எல்லாம் உலக அரங்கில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் இந்தியாவின் கம்பீர அசைவு தான். ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தாக்கம் இந்த மாற்றத்திற்க்கு பெரும் பங்கு வகித்துள்ளன.
இதையெல்லாம் நமது பெங்களூரு மாப்பிள்ளயும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருமான ரிஷி சுனக் தான் சொல்கிறார்.
ஐபிஎல் 18 இன் இறுதி போட்டியைக் கண்டு களிக்க மனைவி சகிதம் அஹமதாபாத்திற்கு வந்திருக்கிறார். மாமியார் ஊர் என்பதால் RCBயும் விராட் கோலியும் இவரது ஃபேவரைட்டுகள். RCB, ஈ சால கப்பு நமதாக்கியதில் இவருக்கு ரொம்ப மகிழ்ச்சி.
**************
2025 அமர்நாத் யாத்திரை.
581 CAPF யூனிட்டுகள், ஜாமர்கள், ட்ரோன்கள். K9 யூனிட்டுகள் மற்றும் ROPs, QATs, மற்றும் அதி நவீன கண்காணிப்பு சாதனங்கள் உதவியுடன் ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை 38 நாள் நடக்கும் இந்த யாத்திரைக்கான பாதுகாப்பினை இந்திய அரசாங்கம் செய்துள்ளது.
உள்ளூர் வாசிகளுக்கு நாம் ஏன் யாத்த்ரிகர்களாக சென்று அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும் இன்னும் சில ஆண்டுகள் அவர்களை சீண்டாமல் இருந்தால் பணத்துக்கு பிச்சை எடுப்பார்கள் அப்போது தான் உணர்வார்கள் என்பது ஒரு வாதம்.
அதே சமயம், நாம் இந்த யாத்திரைகளை நிறுத்திவிட்டால் தீவிரவாதிகளுக்கு வெற்றி என்பது போல் ஆகிவிடாதா என்பது இன்னோரு வாதம்.
நிரந்தர இயல்பான மனித வாழ்கை அங்கு, காஷ்மீரில், திரும்பட்டும் என்பதே நாம் இந்தியர் ஒவ்வொருவரின் ஆசையாகும் தானே.
**************
Leave a comment
Upload