தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் 18 : வாரம் 11 இந்த வாரம் இறுதி வாரம் – பால்கி

2025ன், ஐபிஎல் – கடந்த 18 வருடங்களாக சூளுரைத்து வந்த ராயல் சேலேஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஜெயித்தது. இது அவர்களின் முதல் கோப்பை.

முதல் ஆண்டிலிருந்து 18 ஆண்டுகளாக டீமில் நிரந்தரமாக இருக்கும் விராட் கோலியின் நீண்ட நாள் கனவு.20250505234605420.jpg

அவராலேயே நம்ப முடியவில்லை.

20250505234756574.jpg

இந்த அணியை உருவாக்கிய விஜய் மல்லயா இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அந்த நாட்களை நினைவு கூர்ந்திருந்தார்.

20250505234823855.jpg

,காயமடைந்த ப்ளேயருக்கு பதிலாக ஆட வந்த ரஜத் பட்டிதார் கேப்டனாகவே ஆடி கப்பையும் வென்றிருக்கிறார்.

அவர்களின் வெற்றிக் களிப்பில் பங்கு கொள்ள முந்தய வீரர்களான க்ரிஸ் கெயிலும், ஏ பீ டெவிலியர்ஸும் பங்கு கொண்டனர்.

20250505234640351.jpg

கப்பை வெற்றி கொள்ளும் எட்டாவது அணி இது.

அவருடைய ஜெர்சி நம்பரும் 18.

டாஸ் ஜெயித்த பஞ்சாப், நீங்கள் முதலில் பேட்டிங்க் ஆடுங்கள் என்று பெங்களூருவைக் களமிறக்கியது.

9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து டார்கெட் வைத்தது. இந்த இன்னிங்க்ஸில் விராட் கோலி 35 பந்துகளில் 45 ரன்களைக் குவித்தார். இது அந்த அணியின் பெரிய ஸ்கோர்.

அடுத்து பேட்டிங்க் செய்ய இறங்கிய பஞ்சாப் அணி முதல் 8 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 72 ரன்கள். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை அடுத்த 7 ரன்களுக்குள் இழந்தது, அதிலும் நிலை பெற்ற பஞ்சாப் அணியின் அதிக அளவில் ரன்களைக் குவித்த ஷ்ரேயஸ் அய்யர் 2 பந்துகளில் வெறும் 1 ரன் எடுத்தது தான் ஷாக். அதிலிருந்தே தொய்வு தெரிந்து போனது. அந்த மைண்ட் கேமில் பெங்களூரு அடித்து விளையாடியது என்றே சொல்லலாம்.

பெங்களூருவின் க்ருணால் பண்ட்யா தனக்கி அளிக்கப்பட்ட 4 ஓவர்களில் வெறும் 17 ரன்களே கொடுத்திருந்தார்.

போதாக்குறைக்கு படி சீப்பாக ஷ்ரேயஸ் அய்யரின் விக்கெட் வேறு.

20 ஒவர்களில் 184 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.

கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை இருந்த நிலையில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தனர். இந்த ஆட்டம் வரை அவர்கள் தான் என்று அனைவரும் நினைத்திருந்தனர்,

இரண்டாவது அரை இறுதியில் மும்பை அணியை அனாயாசமாகவே தூக்கி விட்டனர். இந்த ஆட்டத்தில் ஷ்ரேயஸ் அய்யரின் 41 பந்துகளில் 87 ரன்கள் மும்பையை முடக்கி விட்டது.

கேட்ச் போச்சினா மேட்ச் போச்சி என்ற சொல் எவ்வளவு உண்மை என்று அன்று குஜராத்தின் கேப்டன் கில் உணர்ந்திருப்பார்.

தனது பணிக் காலம் முடிந்து திரும்பிவிட்டிருந்தார் அணியின் விக்கெட் கீப்பர் பட்லர்.

அவருக்கு பதிலாக அந்த மேட்சில் ஆடிய மெண்டிஸின் கீப்பிங்க் சரியில்லை.

ரோஹித் ஷர்மாவின் கேட்ச் விட்டதில் வெறும் 3 ரன்களில் அவுட்டாக வேண்டியவர் 81 ரன்களெடுத்து மேட்சையும் மும்பை பக்கம் திருப்பினார்.

குஜராத்தின் சாய் சுதர்ஷன் 759 ரன்களை எடுத்து ஆரஞ்ச் கேப்புக்கு சொந்தக்காரரானார்.

அதே அணியின் ப்ரசித் கிருஷ்ணா 25 விக்கெட்டுகளை எடுத்து பர்ப்ள் கேப் பெற்றுள்ளார்.

இப்படியாக இந்த ஐபிஎல் 18 இனிதே முடிவடைந்தது.