தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20250513203144708.jpeg

கூட்டணி இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பரபரப்பு பேட்டி.

கூட்டணி கட்சிகளுக்கு திடீர் தைரியம் .

முருக பக்தர் மாநாடு வளாகத்தில் ஆறுபடை வீடுகள் அமைக்கலாம் ஆனால் பூஜை செய்யக்கூடாது நீதிமன்றம் உத்தரவு.

இதுதான் முருகர் அரசியல்ன்னு சொல்றது !!

பற்றி எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 700 வீரர்களை களம் இறக்கிய டிரம்ப் !!

அமெரிக்க அதிபர் ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருக்கு !!

ரெண்டு நாள் பயணமாக சேலம் வருகிறார் முதல்வர், பதினோரு கிலோமீட்டர் ரோடு ஷோவில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ஷோ காட்ட உங்களுக்கு கற்றுத் தரணுமா !!

பாலியல் சார்களை கண்ட்ரோல் செய்வது எப்போது எடப்பாடி.

இந்த விஷயத்தில் அவங்க அவுட் ஆப் கண்ட்ரோல் தான் !!

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி யார் தலைமையில் அம்மா ஆட்சி நிச்சயமாக மலரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.

இந்த விஷயம் அமித்ஷாவுக்கு தெரியுமா ?

திமுக அரசை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது எடப்பாடிக்கு ரகுபதி பதில்.

ஆனா நீங்க எடப்பாடியை திட்டலாம் அந்த தார்மீக உரிமை உங்களுக்கு இருக்கு ?

விஜய் வீட்டில் ரைடு செய்த மாஜி ஐஆர்எஸ் அதிகாரிக்கு கட்சிப் பதவி விஜய் முடிவு.

எல்லாம் ஒரு நன்றி கடன் தான்னு வச்சுக்கோங்க !!

செந்தில் பாலாஜி சகோதரருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்.

ஒன்னும் அவசரம் இல்லை பொறுமையா செய்யுங்க !!

இந்திய மக்கள் தொகை 146 கோடியை தாண்டியது ஐநா அறிக்கை.

தொகுதி குறையும் சொல்றாங்க !!