கெனிஷா
பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் ஜோடியாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் .இப்போது கெனிஷா கர்ப்பம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவ அதற்கு பதிலாக நான் கர்ப்பமாக இல்லை. எனக்கு அழகான சிக்ஸ் பேக் இருக்கிறது என்கிறார் பாடகி.
4 நாயகிகள்
ரவி மோகன் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ப்ரோ கோட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவரது தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குவது கார்த்திக் யோகி. இவர் டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்றபடங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் ரவி மோகனுக்கு நான்குநாயகிகள். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தமன்னா
அஜித்தின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார் தமன்னா இது பற்றி அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். படத்தை இயக்கப் போவது ஆதிக்.
யோகலட்சுமி
"சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்க தான் செய்கின்றன. நாம் நடந்து கொள்வது, நாம் எதிர்கொள்வது என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் ரொம்ப முக்கியம்" என்கிறார் டூரிஸ்ட் பேமிலி நடிகை யோகலட்சுமி.
பயந்தேன்
ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் நடிக்கிறார் நடிகை சவுபின்சாஷிர். . ரஜினிகாந்த்துடன் நடிப்பதற்கு முதலில் பயந்தேன். அந்த பயத்தை போக்கி என்னை சகஜமாக நடிக்க வைத்தார் ரஜினிகாந்த் ரொம்பவும் எளிமையானவர் என்று கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாராட்டி இருக்கிறார் நடிகை.
ரோஷினி
சின்னத்திரை தொடரான பாரதிகண்ணம்மா மூலம் பிரபலமான ரோஷினி நாயகியாக நடிக்கும் படம் மெட்ராஸ் மேட்னி. இது எளிமையான வாழ்க்கையை விவரிக்கும் படமாம்.
தனுஷ்
தனுஷ் நடிக்கும் இந்தி படத்தில் அவருக்கு ஏர்போர்ஸ் அதிகாரி வேடம் .இந்த படத்தில் அவருக்கு ஜோடி கீர்த்தி சனோன்.
சாந்தனு
பாக்யராஜ் மகன் சாந்தனு அஞ்சலி நாயர் நடிக்கும் படத்திற்கு மெஜந்தா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
சர்தார் 2
கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன் ஆகியோர் நடிக்கும் சர்க்கார் 2 படப்பிடிப்பு நிறைவு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடந்து வருகிறது.
டி. ராஜேந்தர்
கூலி படத்தில் ஒரு பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.
குபேரா
இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா படம் இந்த மாதம் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்யா
நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஆனந்தன் காடு. இந்த கதையில் கொஞ்சம் அரசியல் இருக்குமாம். ரெஜினா கேசண்ட்ரா, நிகிலா விமல், சாந்தி பாலகிருஷ்ணன், விஜயராகவன், இந்திரன்ஸ், முரளி கோபி நிறைய மலையாள நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.
Leave a comment
Upload