தொடர்கள்
சினிமா
" தக் லைப் ரியல் ஹீரோவை மிஸ் செய்த மணிரத்தினம் " - ஸ்வேதா அப்புதாஸ் .

20250513200831730.jpg

இயக்குனர் மணிரத்தித்தின் "தக் லைப்" சூப்பர் ஹிட்டாகும் என்ற கனவு தவிடு பொடியாகிவிட்டது .

இந்த படத்தின் டைட்டிலுக்கும் ஊட்டிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறார் நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் .

2025051122430169.jpg

" 'தக்' என்பவர்கள் 1800 ஆம் வருடத்தின் துவக்கத்தில் மத்திய இந்தியாவில் கொள்ளை கொலை என்று துஷ்ப்ரயோகம் செய்துவந்த காட்டுமிராண்டி கும்பல் .

அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தினமும் தங்கள் உயிரை கையில் பிடித்த வண்ணம் பயத்தில் வாழ்ந்துவந்தனர் .இந்த 'தக்' என்ற கொடூர கொள்ளைகாரகளை முடக்கி கைது செய்து அவர்களின் கொடூர செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் பிரபு .

'தக்' என்ற கொள்ளை கும்பலை ஒழித்த வீரர் கேப்டன் W.H.ஸ்லீமென் .

20250511224333683.jpg

மத்திய இந்தியாவில் மிக பெரிய போராட்டத்திற்கு பின் 'தக்' கொள்ளை கும்பல் முழுவதையும் அழித்தொழித்தார் ஸ்லீமென்! .

தன் கடின பணியால் உடல் நலம் குன்றியதால் 1834 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி அன்று ஊட்டியில் முகாமிட்டிருந்த வில்லியம் பென்டிங்க் பிரபுவுக்கு தன் போராட்ட பணியால் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தன்னை சாதாரண சிவில் பணிக்கு மாற்றம் வழங்குமாறு கேட்டிருந்தார் .

20250511224404891.jpg

பெண்டிங் பிரபு 1834 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் ஒரு கடிதம் ஊட்டியில் இருந்து எழுதியுள்ளார் அதில்..

' உங்களை போல கடமையுள்ள உயர்ந்த அதிகாரியை பார்க்கவில்லை உங்களின் சிறந்த பணிக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றபடி மத்திய இந்திய மக்களை 'தக்' கொள்ளைக்கார்களிடமிருந்து மனிதாபிமானத்துடன் காப்பாற்றியது உயர்ந்த பணி அதற்கு பரிசாக சிட்டகாங் பகுதியில் அரக்கன் நகரின் ஆணையாளராக பொறுப்பு வழங்க படும் . தாங்கள் பணிபுரிந்த சாகுர் நகரை விட இங்கு வெயிலின் கொடுமை குறைவு ' உங்களை போன்ற மிக சிறந்த அதிகாரியை நாடு இழக்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார் .

இப்படிப்பட்ட உண்மையான 'தக் லைப்' ஹீரோ ஸ்லீமென் பற்றி எப்படி மணிரத்தினம் மற்றும் கமலுக்கு தெரியாமல் போய்விட்டது .

கேப்டன் ஸ்லீமென் வில்லியம் பென்டிங்க் பிரபு வை மையமாக வைத்து ஊட்டியை தொடர்பு படுத்தி மத்திய இந்தியாவின் 'தக்' கொள்ளை கும்பலை பற்றியும் தக் லைப் யின் உண்மை ஹீரோவின் வாழ்க்கையை மையமாக வைத்து படமெடுத்திருந்தால் இன்று 'தக் லைப்' பாக்ஸ் ஹிட்டாகியிருக்கும்

தக் லைப் ஐ அஃ லைப் ஆக்கிவிட்டனர்என்கிறார் வேணுகோபால் .